Tuesday, May 4, 2010

இல கணேசனும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் கரசேவையும்…

இல கணேசனும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் கரசேவையும்…


கரசேவைக்கு தமிழகத்திலிருந்து சென்றவர்கள் யார் யார் எனும் பட்டியல் என்னிடமிருக்கிறது என தொலைக்காட்சியில் வெறிப் பிரச்சாரம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் இல. கணேசன். அதையெல்லாம் கேட்டு விட்டு எருமை மாடுகளாய் கிடக்கின்றனர் மக்கள்.
ஜெயலலிதா கரசேவைக்கு ஆள் அனுப்பினார் என கருணாநிதி சொன்னது தான் இந்த இல.கணேசனின் அறிக்கைக்குக் காரணம். ஏதாவது செய்து அம்மாவின் காலைக் கழுவி பாவ விமோசனம் பெற்றால் ஆட்சியில் ஏறலாமா எனும் நப்பாசை இப்படிப் பேச வைத்திருக்கிறது.

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை பத்திரிகை, தொலைக்காட்சிகளால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாகவும், பல நூறு தேவாலயங்களும், வீடுகளும் தகர்க்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் உண்மைச் செய்திகள் அதிர்ச்சி ஊட்டுகின்றன.

இந்த விஷயத்தில் மத்திய அரசு மௌனம் சாதிப்பதற்கு நெருங்கி வரும் தேர்தலைத் தவிர வேறே என்ன காரணம் இருக்க முடியும் ? இப்படி மௌனம் சாதிக்கும் அரசுக்கும், மரணம் சாதிக்கும் வெறி மதங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

மதச் சார்பின்மையையே முன்னிறுத்துகிறது என கொட்டமடிக்கும் பா.ஜ.க வின் தோலை பாஜக தலைவரே உரிந்திருப்பது பாராட்டுதற்குரியது.

நாங்கள் திட்டமிட்டு எல்லா மாநிலங்களிலிருந்தும் ஆட்களைத் திரட்டி கரசேவை செய்தோம், அவர்களுடைய பட்டியல் கூட என்னிடம் பத்திரமாய் இருக்கிறது என ஒலிக்கிறது இலவின் குரல்.

மற்ற மதத்தினரைக் கொல்வதை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடும் மனிதாபிமானமற்ற ஒரு மதக் கூட்டத்தினரை உருவாக்கி விட்டதில் பெருமைப்படுவது போல பேசியிருக்கிறார் இல. அதைக் கேட்டு நாளை அம்மாவின் சார்பில் ஒரு பொன்னாடை போர்த்தப்படலாம்.

நாளை இவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் ….

thanks.www.nermai.wordpress.com

No comments:

Post a Comment