Tuesday, April 27, 2010

அவன் தூயவன்

அவன் தூயவன் !

அந்தரத்திலே! உலகம் ,

ஆளில்லா வானவெளி!

எங்கிருந்து வந்தோம்?

எங்கு செல்வோம்

நம் கண்களுக்கு தெரியவில்லை?


இங்கு காற்றில் மிதக்க வைத்தான்!

தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்!

கருவறை நோக்கிய பயணத்தில்!

கோடி போட்டியாளரில் நம்மை முடிசூட வைத்தான்!


அட்டை பூச்சி போல நாம் !

ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க

கருவறை படைத்தான்!



நம்மை இரத்த கட்டியாக்கினான்

பின் சதைக்கட்டியாகினான்!

பின் எலும்பு கொண்டு போற்றினான் !


நம் தாயின் இரத்த வகை

நம்மிலிருந்து வேறுபட்ட போது!

செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்!

மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க

உள்ளுணர்வை கொடுத்தான் !


நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்

உற்பத்தி செய்தான்!

அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!

கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்

குளிரவைத்து புகட்டினான்!

 
இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த

போது உன்னை பாதுகாத்தான்!

உனக்கு வாலிபம் வந்தவுடன்

நான் இல்லாமல் எதுவும் இல்லை

என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட

அநியாயகாரனாகவே இருக்கிறான் !


மனிதனே! அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!

.அவன் ஒருவன்! அவன் தனித்தவன்!

சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்

பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன் !


விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!

விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்!

உலகை அடக்கி ஆள்பவன்!

அவன் மகா தூயவன் !!!.

நன்றி mkr post


குஜராத் கலவரம் - "நவீன நீரோ"- நரேந்திர மோடி

இந்தியாவில் இருக்கும் இசுலாமியர்களை களையெடுக்கும் சங்கபரிவார இயக்கங்களின் செயல்திட்டம் எனும் புத்தகத்தின் முதல் பக்கமே குஜராத் கலவரமாகும்.

கலவரத்தின் ஆரம்பம்

அயோத்தி பிரச்சனையின் ஒரு தொடராக இக்கலவரத்தை கருதலாம்.அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகர்களில் கோத்ரா எனும் இடத்தில் வியாபாரிகளிடம் கைகலப்பில் ஈடுபட்டனர்.அதன் பின் ஏற்பட்ட தீ விபத்தால் 58 பேர் கோத்ரா எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இசுலாமியர்கள்தான் சபர்மதி விரைவு வண்டியை எரித்ததாக கூறப்பட்டது.

கோத்ரா சம்பவம் நடந்த பின் அந்நகருக்கு வருகைதந்த முதல்வர் நரேந்திர மோடி பகிரங்கமாக இசுலாமியர்களை குற்றம்சாட்டினார். பிறகு சங்க பரிவாரங்களுடன் அரசும் இணைந்து மாநிலம் தழுவிய அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் அத்வானி வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்யும் நடுவண் அரசு மற்றும் மாநில அரசு தனது "சொந்த" (இரண்டாம் தர) மக்களை களையெடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினர். இதன் பின் ஏற்பட்ட கலவரத்தில் வீ.எச்.பீ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகாக்கள் இணைந்துகொண்டு இசுலாமியர்களை குறிவைத்து தாக்குதலை நடத்த தொடங்கினர். பெண்கள், குழந்தைக்கள் மற்றும் முதியவர்களையும் தங்களது இலக்குகளாக கொண்டு படுகொலை செய்ய தொடங்கினர். சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். ஏனெனில் இசுலாமியர்களை பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட அரசு கிள்ளிபோடவில்லை. உச்ச நீதிமன்றமும் எதிர்கட்சிகளும் இணைந்து தங்களது எதிர்ப்பை காட்டவே பல வாரங்களுக்கு பின் கலவரம் முடிவுக்கு வந்தது. போலிசார் மற்றும் அரசு அதிகாரிகள் கலவரக்கரர்களுக்கு தேவையான அனைத்து "உதவிகளையும்"? செய்தனர். நடுவண் அரசு தன் பங்கிற்கு மாநில அரசுக்கு இணையாக அமைதி காத்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் "மதச்சார்பற்ற அரசு?" விமர்சிக்கப்பட்டது. குஜராத் கலவங்களுக்கு பின் இந்தியாவில் இருக்கும் இசுலாமியர்களின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பின் விளைவுகள்

கலவர வழக்குகளை விசாரித்த உச்ச நீதி மன்றம் மோடியை "நவீன நீரோ" என கடுமையாக விமர்சித்தது.

இசுலாமியர்களின் ஆதரவை இனி இழக்க நேரிடும் என எண்ணிய பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் அப்துல் கலாமை குடியரசு தலைவராக பரிந்துரைத்தன்.

சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் அதன் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக மோடி அரசை விமர்சித்தன.

ஆஜ் தக தொலைக்காட்சியும், Tehalkaவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் மோடியின் கோர முகம் பகிரங்கமாக வெளிப்பட்டது. அதில், ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும் அகதமபாதில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.

உச்ச நீதிமன்றம் இதை ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

கோத்ரா சம்பவமும் சந்தேகங்களும்-உண்மைகளும்

மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன அதில் முக்கியமான ஒன்று,

மிக முக்கியமான தடயமான எரிந்த பெட்டி உடனுக்குடன் அப்புரப்படுதப்பட்டது ஏன்?

கலவரத்தில் பயன்படுத்தப்பட எரிபொருளும்,பெட்டியை எரிக்க உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளும் ஒரே மாதிரியாக இருப்பது எப்படி?

மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சேவின் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டான். அதே முறையை கோத்ரவிலும் சங்கபரிவாரங்கள் உபயோகப்படுதியிருக்கும் என்பது நியாயமான சந்தேகமாகும்.

நன்றி : விக்கிபீடியா

இசுலாமியப் பிரிவுகள் - சன்னி, சியா, சுஃபியிசம்

இசுலாமியப் பிரிவுகள் 
இசுலாம் மதம் பொதுவாக சன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவாக உள்ளார்கள். இதை தவிர சுஃபி போன்ற சில பிரிவுகளும் உள்ளன.
சன்னி இசுலாம்
சன்னி இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 85சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்பதற்கு அராபிய மொழியில் 'முகம்மதை பின்பற்றுதல்' என்று அர்த்தமாகும்.இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இந்த பிரிவு தன்னகத்தே மேலும் நான்கு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. ஃஅனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஃஅம்பிலி என்ற இவைகள் மத்ஃகப்புகள் என அழைக்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளைவிட சன்னி இசுலாமே, தீவிரமாக இசுலாமிய கொள்கைகளை பின்பற்றுகின்றது.

சியா இசுலாம்
சியா இசுலாம்,இசுலாமிய பிரிவுகளில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், இரான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் இருக்கின்றது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.
 சுஃபியிசம்
சுஃபியிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். மற்ற பிரிவுகளில் இருந்து மாறுபட்டு மிகவும் மாறுபட்ட சுதந்திர உணர்வை கொண்டவர்கள் இவர்கள். தனியே தங்களுக்கான சட்டங்கள்,பிரார்த்தனை முறைகள் ஆகியவற்றை கொண்டிராத இவர்கள்,பொதுவாக சன்னி மற்றும் சியா இசுலாம் முறைகளையே பின்பற்றுகின்றனர். 

நன்றி :  விக்கிபீடியா