Tuesday, March 2, 2010

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன்
நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.
இவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...
அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.


இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.
உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.


சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப் படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.
கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்ப்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...
இனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...
சிறையிலிருந்த போது...
"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.
இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை,என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...
சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...
தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,
"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..
என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?
இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம்.
இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே, மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.
"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"
இவருக்கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.
"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள்.
இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.
அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...
ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"
யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...
அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.
தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.
பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...
"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"
ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.
அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.
இப்படி பல சொல்லலாம்.
முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"

மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...
"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.
அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?
நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை கொண்டுவரமுடியாது ஒரு சில நொடிகளில். பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.
இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"
ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...
"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது. என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"
ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,
"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,
சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில்,
"நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...
இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...
சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...
யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.
"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்"
ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...
"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"
அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்


thanks www.ethirkkural. blogspot. com

அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக்கிய டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு

அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக்கிய டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு! 9 பேர் விடுவிப்பு
Monday, 01 March 2010 09:27

பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதைப் போல பயங்கரவாதச் செயல்களை செய்தவர்கள் எங்கோ இருப்பார்கள். ஆனால் அது தொடர்பாக காவல் துறையினரால் பிடிபட்டவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளாக வும், குற்றமற்றவர்களாகவும், நீதி மன்றத்தால் விடுதலையாகும் நிலை ஏற்படுகிறது.அதுவரை தண்டனை பெற்று அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அனுபவிக்கும் சித்திரவதைகள் அப்பப்பா?
1986-ம் ஆண்டு டெல்லி காவல் துறையில் பயங்கரவாதத்தை ஒடுக்க ஒரு சிறப்புப்பிரிவு தொடங்கப் பட்டது. 1990&ம் ஆண்டுக்குள் என்கவுண்டர் என்னும் பெயரில் பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும், கோப்புகளை விரைந்து முடிப்பதற்காகவும் கொன்று குவிக்கப் பட்டனர் என்ற திடுக்கிடும் தகவலை முன்னணி வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவிக்கிறார். அப்பாவிகளை பிடித்து அவர்கள் மீது பயங்கரமான குற்றச்சாட்டுகளை ஜோடித்து சிறை யில் தள்ளிய கொடுமைகளை நீதித் துறை கண்டறிந்தபோது அதிர்ந்து போனது.
டெல்லி காவல்துறையின் தீவிர வாத சிறப்புப்பிரிவு அதி தீவிர பயங்கரவாதிகள் என்று அறி வித்து கைது செய்தவர்கள் 9 பேரை நிரபராதிகள், ஒன்றும் அறி யா அப்பாவிகள், அவர்கள் மீதான எந்தக் குற்றசாட்டுகளும் நிரூபிக்கப் படவில்லை என டெல்லி நீதிமன்றம் அறிவித்து விடுதலை செய்துள்ளது.

2005-ம் ஆண்டு மார்ச் மாதம் டேராடூனில் உள்ள (மிஸீபீவீணீஸீ னீவீறீவீtணீக்ஷீஹ் ணீநீணீபீணீனீஹ்)யில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரும் அப்பாவிகள் என ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கண்டறிந்து நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது. பயங்கரவாதக் குற்றசாட்டில் சிறையில் அடைக் கப்பட்டு அப்பாவிகள் என தற்போது விடு தலை செய்யப் பட்டுள்ளவர் களின் கண்ணீர் கதையை தெஹல்கா இணையதளம் உருக்கத்துடன் வெளியிட்டுள்ளது.
குலைநடுங்க வைக்கும் குற்றச் சாட்டுக்கு இலக்காகி வாழ்வை தொலைத்து விட்டு தவிக்கும் பரிதாப ஜீவன்களின் கதை.
மவ்லவி தில்வார்கான்-இவர் இம்தாதுல் உலும் மதரஸா என்ற மார்க்கக் கல்வி கூடத்தின் ஆசிரியர்.மசூத் அஹ்மத் பாஹ்வைல் பள்ளி வாசலின் பேஷ் இமாம். இவர்கள் இருவரும் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறி இவர்களை டெல்லி தீவிரவாத சிறப்புப்பிரிவு காவல்துறை கைது செய்தது. இவர்கள் லஷ்கர்&இ&தய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை கூறியது. தான் எழுப்பிய எந்தக் சந்தேகத் திற்கும் விடையளிக்க டெல்லி காவல்துறை மறுத்து விட்டதாகவும். தான் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய அவர் நான் இதனை மறக்க மாட்டேன்.
சரியான பாடம் கற்பிப்பேன் என அப்போது கூறியதாக இம்தாதுல் உலூம் மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவி தில்வார்கான் கூறினார்.
அத்துடன் வெற்றுப் பேப்பர்களில் தன்னுடைய கையெழுத்துக்களை கட்டாயப்படுத்தி வாங்கியதாகவும் தில்வார் தெரிவித்தார். தாங்கள் விலங்குகளைப் போல் நடத்தப் பட்டதாக மசூத் தெரிவித்தார்.

ஹாரூன் ரஷீத்-சிங்கப்பூருக்கு சென்று விட்டு திரும்பிவரும் போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவரும் ஐந்தாண்டு காலம் சிறையில் இருந்துவிட்டார். இவரது வழக்கில் டெல்லிகாவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
ஹாரூன் ரஷீத் ஒரு வழக்கறிஞர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் தனது மாமாவின் உதவியால் சிங்கப்பூர் சென்றவர் என்பதும், அவரது குடும்பத்தின் சோக நிலையாகும். ஐந்து ஆண்டுகள் நியாயமற்ற சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளிவந்திருக்கும் ஹாரூன் ரஷீத்தின் சிங்கப்பூர் பிழைப்புக்கு டெல்லி காவல்துறையினர் மூடுவிழா நடத்திவிட்டதாகவும் ஹாரூன் ரஷீத் குறிப்பிட்டார்.
இஃப்திகார் மாலிக்- இவர் டோரடூனைச் சேர்ந்த பயோடெக்னாலஜி பயிலும் மாணவர். வீட்டின் உரிமையாளரிடம் கூட தெரிவிக்காமல் இவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அத்துடன் டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியை வேவு பார்த்தாகவும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ராணுவ பயிற்சி பள்ளியின் அனுமதி சீட்டை இஃப்திகார் வீட்டில் இருந்து கண் டெடுத்ததாகவும் கூறியது டெல்லி சிறப்பு காவல்துறை. வெளி நாட்டிலிருந்து திரும்பிய ஹாரூன் ரஷீத் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி உதவி செய்ததாக கதை பரப்பியதை விட ஒரு வித்தியாசமான கட்டுக் கதையை பரப்பியது. இஃப்திகார் கல்லூரி மாணவராயிற்றே, எனவே தீவிரவாத இயக்கம் இஃப்திகாரின் கல்லூரி படிப்புக்கு நிதி உதவி செய்ததாக கதை புனையப்பட்டது.

இஃப்திகார் மாலிக்கின் மீதான குற்றச்சாட்டில் அடிப்படையிலேயே முரண்பாடுகள் இருப்பதை கண்டு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதியரசர் தர்மேஷ் சர்மா வெகுண்டெழுந்தார்.
நீதியரசரசரின் நேரடி குறுக்கு விசாரணையில் காவல்துறை ஆய்வா ளர் கைலாஷ் சிங்கால் திணறினார், பலமுறை பல்டியடித்தார்.
இறுதியாக இவர் டேராடூனுக்கும் செல்லவில்லை. இஃப்திகார் வீட்டில் எந்தப்பொருளையும் கைப்பற்ற வில்லை. என்பதோடு மற்றொரு படுபயங்கர தகவலையும் நீதியரசர் தர்மேஷ் சர்மா கண்டறிந்தார்.
2002&ல் நிகழ்ந்த இனப் படுகொலைக்காக பழிக்குப் பழி வாங்கவே தான் ராணுவப் பள்ளியின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டேன் என பொய்யான ஒரு வாக்கு மூலத்தையும் காவல்துறை ஆய்வாளர் கைலாஷ் சிங்கால் மிரட்டி வாங்கியதையும் கண்டு நீதிமன்றமே துடியாய் துடித்தது.
இழந்துபோன என் இளமை வாழ்க்கையை யார் சார் தருவார் என விரக்தியுடன் கேட்கும் இஃப்திகார் மாலிக்கின் வினாவுக்கு விடை எங்கே?
குல்ஜார் அஹ்மத்-இளங்கலை படிக்கும் மாணவர் முஹம்மது அமீன்-ஜம்முகாஷ்மீர் வருவாய்த்துறையில் பணிபுரிபவர்.
காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு 2006&ம் ஆண்டு தனது சகோதரர் முஹம்மது அமீன் ஹாஜம் உடன் டெல்லிக்கு வந்தார் 23 வயதான குல்ஜார் அஹ்மது தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காக வந்தார். அதன் பிறகு நான் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல மாட்டேன் என வேதனையுடன் கூறுகிறார் குல்ஜார்.

நவம்பர் 23&ம் தேதி டெல்லிக்கு வந்த இவர்களை சிறைப்பிடித்த டெல்லி சிறப்பு காவல்துறை டிசம்பர் 10&ம் தேதி வெளியுலகிற்கு அவர்களை பயங்கரவாதிகளாக அறிமுகப் படுத்தியது. லஷ்கர்&இ&தய்பா உறுப் பினர்கள் தான் இவர்கள் என்று அறிமுகப்படுத்தி ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் மற்றும் ஆறு லட்ச ரூபாய் இவர்களிடமிருந்து கைப்பற்றியதாக டெல்லி சிறப்பு காவல்துறை கூறியது.
சரி இவர்களை பயங்கரவாதிகள் என எப்படி கண்டு பிடித்தார்களாம்? திரைப்பட கதாசிரியர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு கற்பனைக்கதைகள் டெல்லி காக்கிகளின் கைவண்ணத்தில் வெளிவந்தன. அதாவது இந்தக் கதையை(!) படிக்கும்போது வாய்விட்டு சிரித்து விடாதீர்கள். மனதிற்குள் சிரியுங்கள்.

லஷ்கர்& இ&தய்பா உடைய டிவிஷனல் கமாண்டர் முஹம்மது அக்மல் என்ற அபூதாஹிரின் தொலை பேசி உரையாடலை வழிமறித்து காவல் துறை டீம் ஒன்று ஒட்டு கேட்டதாம் நான் இரண்டு பேரை அனுப்பியிருக்கிறேன்.
அவர்களிடம் பணத்தையும் வெடி பொருட்களையும் வாங்கிக் கொள்ளவும் என்று மற்றொரு நபருக்கு தொலைபேசியில் பேசியதை ஒட்டுக் கேட்டதாகவும், ஒட்டுகேட்பு டீமின் தலைவர் டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட மோகன் சந்த் சர்மா தான் ஒட்டு கேட்டதாகவும் அதோடு குல்ஜார் மற்றும் அமீன் இருவரையும் டெல்லி நோக்கி வந்த பஸ்ஸில் (ரூட் நம்பர் 729) டவுலாகுவான்&யிலிருந்து மகிபால்பூர் வரும் பஸ்ஸில் டிசம்பர் 10&ம் தேதி கைது செய்ததாக காவல்துறை தரப்பு அறிவித்தது.

ஆனால் கைது செய்ததையோ, எங்கிருந்து கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து எவ்வித புகைப்பட ஆதாரங்களையும் காவல்துறை வெளியிட வில்லை.
இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேஷ் சர்மா காவல்துறை தரப்பு வாதங்களை நிராகரித்தார். முழுக்க முழுக்க டெல்லி காவல்துறையினர் தனது தொழிலுக்கு தொடர்பில்லாத வேலை களில், குற்றச் செயலில் ஈடுபட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தார்.


குல்ஜாரும், முஹம்மது அமீனும், நீதிபதி தர்மேஷ்சர்மா உத்தரவின் படி விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு இறுதியில் விடு விக்கப்பட்ட அவர்களின் கண் ணீர் கதை கல்நெஞ்சத்தையும் உருகவைக்கக் கூடியதாகும்.
காவல்துறையினர் இவர்கள் தொடர்பாக வழங்கிய அனைத்து ஆவணங்களும், குற்றச்சாட்டுகளும், பொய்யானவை என நீதிமன்றம் அம் பலப்படுத்தியது. பொய்குற்றம் சாட்டிய இந்தக் கயவர்களுக்கு தண்டனை எப்போது?
துளி அளவும் உண்மை இல்லாத கட்டுக்கதையை பரப்பி இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்களை வேட்டையாடும் அளவுக்கு துணிச்சலை இந்த கயவர்களுக்கு தந்தது-யார்?

--
Thanks Madukkur TMMK