Tuesday, March 2, 2010

அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக்கிய டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு

அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக்கிய டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு! 9 பேர் விடுவிப்பு
Monday, 01 March 2010 09:27

பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதைப் போல பயங்கரவாதச் செயல்களை செய்தவர்கள் எங்கோ இருப்பார்கள். ஆனால் அது தொடர்பாக காவல் துறையினரால் பிடிபட்டவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளாக வும், குற்றமற்றவர்களாகவும், நீதி மன்றத்தால் விடுதலையாகும் நிலை ஏற்படுகிறது.அதுவரை தண்டனை பெற்று அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அனுபவிக்கும் சித்திரவதைகள் அப்பப்பா?
1986-ம் ஆண்டு டெல்லி காவல் துறையில் பயங்கரவாதத்தை ஒடுக்க ஒரு சிறப்புப்பிரிவு தொடங்கப் பட்டது. 1990&ம் ஆண்டுக்குள் என்கவுண்டர் என்னும் பெயரில் பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும், கோப்புகளை விரைந்து முடிப்பதற்காகவும் கொன்று குவிக்கப் பட்டனர் என்ற திடுக்கிடும் தகவலை முன்னணி வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவிக்கிறார். அப்பாவிகளை பிடித்து அவர்கள் மீது பயங்கரமான குற்றச்சாட்டுகளை ஜோடித்து சிறை யில் தள்ளிய கொடுமைகளை நீதித் துறை கண்டறிந்தபோது அதிர்ந்து போனது.
டெல்லி காவல்துறையின் தீவிர வாத சிறப்புப்பிரிவு அதி தீவிர பயங்கரவாதிகள் என்று அறி வித்து கைது செய்தவர்கள் 9 பேரை நிரபராதிகள், ஒன்றும் அறி யா அப்பாவிகள், அவர்கள் மீதான எந்தக் குற்றசாட்டுகளும் நிரூபிக்கப் படவில்லை என டெல்லி நீதிமன்றம் அறிவித்து விடுதலை செய்துள்ளது.

2005-ம் ஆண்டு மார்ச் மாதம் டேராடூனில் உள்ள (மிஸீபீவீணீஸீ னீவீறீவீtணீக்ஷீஹ் ணீநீணீபீணீனீஹ்)யில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரும் அப்பாவிகள் என ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கண்டறிந்து நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது. பயங்கரவாதக் குற்றசாட்டில் சிறையில் அடைக் கப்பட்டு அப்பாவிகள் என தற்போது விடு தலை செய்யப் பட்டுள்ளவர் களின் கண்ணீர் கதையை தெஹல்கா இணையதளம் உருக்கத்துடன் வெளியிட்டுள்ளது.
குலைநடுங்க வைக்கும் குற்றச் சாட்டுக்கு இலக்காகி வாழ்வை தொலைத்து விட்டு தவிக்கும் பரிதாப ஜீவன்களின் கதை.
மவ்லவி தில்வார்கான்-இவர் இம்தாதுல் உலும் மதரஸா என்ற மார்க்கக் கல்வி கூடத்தின் ஆசிரியர்.மசூத் அஹ்மத் பாஹ்வைல் பள்ளி வாசலின் பேஷ் இமாம். இவர்கள் இருவரும் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறி இவர்களை டெல்லி தீவிரவாத சிறப்புப்பிரிவு காவல்துறை கைது செய்தது. இவர்கள் லஷ்கர்&இ&தய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை கூறியது. தான் எழுப்பிய எந்தக் சந்தேகத் திற்கும் விடையளிக்க டெல்லி காவல்துறை மறுத்து விட்டதாகவும். தான் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய அவர் நான் இதனை மறக்க மாட்டேன்.
சரியான பாடம் கற்பிப்பேன் என அப்போது கூறியதாக இம்தாதுல் உலூம் மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவி தில்வார்கான் கூறினார்.
அத்துடன் வெற்றுப் பேப்பர்களில் தன்னுடைய கையெழுத்துக்களை கட்டாயப்படுத்தி வாங்கியதாகவும் தில்வார் தெரிவித்தார். தாங்கள் விலங்குகளைப் போல் நடத்தப் பட்டதாக மசூத் தெரிவித்தார்.

ஹாரூன் ரஷீத்-சிங்கப்பூருக்கு சென்று விட்டு திரும்பிவரும் போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவரும் ஐந்தாண்டு காலம் சிறையில் இருந்துவிட்டார். இவரது வழக்கில் டெல்லிகாவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
ஹாரூன் ரஷீத் ஒரு வழக்கறிஞர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் தனது மாமாவின் உதவியால் சிங்கப்பூர் சென்றவர் என்பதும், அவரது குடும்பத்தின் சோக நிலையாகும். ஐந்து ஆண்டுகள் நியாயமற்ற சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளிவந்திருக்கும் ஹாரூன் ரஷீத்தின் சிங்கப்பூர் பிழைப்புக்கு டெல்லி காவல்துறையினர் மூடுவிழா நடத்திவிட்டதாகவும் ஹாரூன் ரஷீத் குறிப்பிட்டார்.
இஃப்திகார் மாலிக்- இவர் டோரடூனைச் சேர்ந்த பயோடெக்னாலஜி பயிலும் மாணவர். வீட்டின் உரிமையாளரிடம் கூட தெரிவிக்காமல் இவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அத்துடன் டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியை வேவு பார்த்தாகவும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ராணுவ பயிற்சி பள்ளியின் அனுமதி சீட்டை இஃப்திகார் வீட்டில் இருந்து கண் டெடுத்ததாகவும் கூறியது டெல்லி சிறப்பு காவல்துறை. வெளி நாட்டிலிருந்து திரும்பிய ஹாரூன் ரஷீத் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி உதவி செய்ததாக கதை பரப்பியதை விட ஒரு வித்தியாசமான கட்டுக் கதையை பரப்பியது. இஃப்திகார் கல்லூரி மாணவராயிற்றே, எனவே தீவிரவாத இயக்கம் இஃப்திகாரின் கல்லூரி படிப்புக்கு நிதி உதவி செய்ததாக கதை புனையப்பட்டது.

இஃப்திகார் மாலிக்கின் மீதான குற்றச்சாட்டில் அடிப்படையிலேயே முரண்பாடுகள் இருப்பதை கண்டு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதியரசர் தர்மேஷ் சர்மா வெகுண்டெழுந்தார்.
நீதியரசரசரின் நேரடி குறுக்கு விசாரணையில் காவல்துறை ஆய்வா ளர் கைலாஷ் சிங்கால் திணறினார், பலமுறை பல்டியடித்தார்.
இறுதியாக இவர் டேராடூனுக்கும் செல்லவில்லை. இஃப்திகார் வீட்டில் எந்தப்பொருளையும் கைப்பற்ற வில்லை. என்பதோடு மற்றொரு படுபயங்கர தகவலையும் நீதியரசர் தர்மேஷ் சர்மா கண்டறிந்தார்.
2002&ல் நிகழ்ந்த இனப் படுகொலைக்காக பழிக்குப் பழி வாங்கவே தான் ராணுவப் பள்ளியின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டேன் என பொய்யான ஒரு வாக்கு மூலத்தையும் காவல்துறை ஆய்வாளர் கைலாஷ் சிங்கால் மிரட்டி வாங்கியதையும் கண்டு நீதிமன்றமே துடியாய் துடித்தது.
இழந்துபோன என் இளமை வாழ்க்கையை யார் சார் தருவார் என விரக்தியுடன் கேட்கும் இஃப்திகார் மாலிக்கின் வினாவுக்கு விடை எங்கே?
குல்ஜார் அஹ்மத்-இளங்கலை படிக்கும் மாணவர் முஹம்மது அமீன்-ஜம்முகாஷ்மீர் வருவாய்த்துறையில் பணிபுரிபவர்.
காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு 2006&ம் ஆண்டு தனது சகோதரர் முஹம்மது அமீன் ஹாஜம் உடன் டெல்லிக்கு வந்தார் 23 வயதான குல்ஜார் அஹ்மது தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காக வந்தார். அதன் பிறகு நான் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல மாட்டேன் என வேதனையுடன் கூறுகிறார் குல்ஜார்.

நவம்பர் 23&ம் தேதி டெல்லிக்கு வந்த இவர்களை சிறைப்பிடித்த டெல்லி சிறப்பு காவல்துறை டிசம்பர் 10&ம் தேதி வெளியுலகிற்கு அவர்களை பயங்கரவாதிகளாக அறிமுகப் படுத்தியது. லஷ்கர்&இ&தய்பா உறுப் பினர்கள் தான் இவர்கள் என்று அறிமுகப்படுத்தி ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் மற்றும் ஆறு லட்ச ரூபாய் இவர்களிடமிருந்து கைப்பற்றியதாக டெல்லி சிறப்பு காவல்துறை கூறியது.
சரி இவர்களை பயங்கரவாதிகள் என எப்படி கண்டு பிடித்தார்களாம்? திரைப்பட கதாசிரியர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு கற்பனைக்கதைகள் டெல்லி காக்கிகளின் கைவண்ணத்தில் வெளிவந்தன. அதாவது இந்தக் கதையை(!) படிக்கும்போது வாய்விட்டு சிரித்து விடாதீர்கள். மனதிற்குள் சிரியுங்கள்.

லஷ்கர்& இ&தய்பா உடைய டிவிஷனல் கமாண்டர் முஹம்மது அக்மல் என்ற அபூதாஹிரின் தொலை பேசி உரையாடலை வழிமறித்து காவல் துறை டீம் ஒன்று ஒட்டு கேட்டதாம் நான் இரண்டு பேரை அனுப்பியிருக்கிறேன்.
அவர்களிடம் பணத்தையும் வெடி பொருட்களையும் வாங்கிக் கொள்ளவும் என்று மற்றொரு நபருக்கு தொலைபேசியில் பேசியதை ஒட்டுக் கேட்டதாகவும், ஒட்டுகேட்பு டீமின் தலைவர் டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட மோகன் சந்த் சர்மா தான் ஒட்டு கேட்டதாகவும் அதோடு குல்ஜார் மற்றும் அமீன் இருவரையும் டெல்லி நோக்கி வந்த பஸ்ஸில் (ரூட் நம்பர் 729) டவுலாகுவான்&யிலிருந்து மகிபால்பூர் வரும் பஸ்ஸில் டிசம்பர் 10&ம் தேதி கைது செய்ததாக காவல்துறை தரப்பு அறிவித்தது.

ஆனால் கைது செய்ததையோ, எங்கிருந்து கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து எவ்வித புகைப்பட ஆதாரங்களையும் காவல்துறை வெளியிட வில்லை.
இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேஷ் சர்மா காவல்துறை தரப்பு வாதங்களை நிராகரித்தார். முழுக்க முழுக்க டெல்லி காவல்துறையினர் தனது தொழிலுக்கு தொடர்பில்லாத வேலை களில், குற்றச் செயலில் ஈடுபட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தார்.


குல்ஜாரும், முஹம்மது அமீனும், நீதிபதி தர்மேஷ்சர்மா உத்தரவின் படி விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு இறுதியில் விடு விக்கப்பட்ட அவர்களின் கண் ணீர் கதை கல்நெஞ்சத்தையும் உருகவைக்கக் கூடியதாகும்.
காவல்துறையினர் இவர்கள் தொடர்பாக வழங்கிய அனைத்து ஆவணங்களும், குற்றச்சாட்டுகளும், பொய்யானவை என நீதிமன்றம் அம் பலப்படுத்தியது. பொய்குற்றம் சாட்டிய இந்தக் கயவர்களுக்கு தண்டனை எப்போது?
துளி அளவும் உண்மை இல்லாத கட்டுக்கதையை பரப்பி இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்களை வேட்டையாடும் அளவுக்கு துணிச்சலை இந்த கயவர்களுக்கு தந்தது-யார்?

--
Thanks Madukkur TMMK

No comments:

Post a Comment