Monday, April 12, 2010

சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் டாக்டர்.ஜாஹிர் நாயக்

டாக்டர்.ஜாஹிர் நாயக் 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வு

புதுடெல்லி:பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரபல நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் 7 முஸ்லிம்களும் இடம் பிடித்துள்ளனர். டாக்டர் ஜாஹிர் நாயக் 89 வது இடத்தை பிடித்துள்ளார்..
இந்தப்பட்டியல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசின் துணை ஏடான சண்டே எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்படுள்ளது.

இதர முஸ்லிம்கள் பிடித்துள்ள தரவரிசை வருமாறு:காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹ்மத் பட்டேல்(10-வது இடம்). ஏ.ஆர்.ரஹ்மான்(31-வது இடம்), அமீர்கான்(39-வது இடம்), ஷாருக்கான்(47-வது இடம்), உமர் அப்துல்லாஹ்(57-வது இடம்), அஸீம் பிரேம்ஜி(60-வது இடம்). 100 சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் 89-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஜாஹிர் நாயக்கிற்கு 44-வயது ஆகிறது. 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆன்மீக தலைவர்கள் பட்டியலில் டாக்டர் ஜாஹிர் நாயக் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரையும் முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஜாஹிர் நாயக் சமீபத்தில் வெளியான உலகை அதிகம் ஈர்த்த 500 முஸ்லிம்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அமெரிக்காவிலிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

டாக்டர் ஜாஹிர் நாயக்கைப் பற்றி சண்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது. "சூட் கோட்டை அணிந்து ஆங்கிலத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இவாஞ்சலிஸ்ட் ஜாஹிர் நாயக் சக்தி வாய்ந்த பேச்சாளர். இவரது உரையை இவர் நிறுவியுள்ள Peace TV யின் வாயிலாக 125 நாடுகளைச்சார்ந்த 100 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள். கடந்த ஆண்டு வட அமெரிக்காவிலும் Peace TV தனது ஒளிபரப்பை துவங்கியது.. இவ்வலைவரிசையின் உருது சானலை 50 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள்.

கடந்த 14 ஆண்டுகளில் இவர் 1300 பொதுநிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இதில் 100 உரைகள் கடந்த 2009 ஆம் ஆண்டிலாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடைபெற்ற Peace Conference இல் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்டனர்.. டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை மட்டும் கேட்க 2 லட்சம் மக்கள் கூடினர். இதில் மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீமும் உட்படுவார். இந்த ஆண்டு டிசம்பரில் Peace TV பெங்காளி மொழியில் அலைவரிசையைத் துவக்குகிறது. செய்திச்சானல்களை 2012 அல்லது 2013 ஆண்டுல் துவக்கும்.

சமுதாயம்

அன்புள்ள சமுதாயம்...
என் இனிய சலாம் ... உங்களுடன் பல செய்திகளை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைபதிவை நான் உருவாக்கியுள்ளேன். நாம் நம் தவறை திருத்தி கொள்ளாதவரை தவறு செய்யும் (தவறு என்றால் கல்யாண வளமைமுதல்  நமது பெண்களின் ஆடம்பரம்,குறைவான ஒழுக்கம் பற்றி   சாதரணமாக பேசி மறந்துவிடும் வழமைவரை ) நமது குடும்பத்தாரை நாம் கண்டிக்காதவரை நாமும் தவறுக்கு உடந்தையாகிவிடுவோம். பயம் வந்து சரியாக நடந்து கொண்டோம் என்றால்  எங்களது சமுதாயம் எங்களது மக்கள் எங்களது கண்ணியம் எங்களது பாரம்பரியம் எங்களது கவுரவம் என்று மார்தட்டிகொளலாம். ....நமது குடும்பம் உண்டு நாம் உண்டு யாரும் எக்கேடு கேட்டு போகட்டும் என்று போகும் கபோதிகளில் நாமும்  ஒருவராக இருந்துவிட வேண்டாம் ..நமது சமுதாயம் மீதும் சிறிது அக்கறை வையுங்கள். நம் ஊரில் யாரும் சரியில்லை யாரும் யாரையும் மதிப்பதில்லை. இவர்கள் திருந்தபோவதில்லை என்று  இப்படி எல்லோருமே ஒருவரை ஒருவர் குறை கூறினால் யார்தான் சரியாக இருக்கமுடியும் .

முதலில் நம்மை நாமே குறைகூறும் பழக்கதைவிட்டு விட்டு நாமும்  நம் சமுதாயமும்  எப்படி  இருக்க  வேண்டும்  என்று  சிந்திப்போம் . சிந்திப்பதோடு 
 மட்டும் அல்லாமல் பின்னால்வரும் சமுதாயதிற்கு எந்தவொரு அவப்பெயரும்  வராவண்ணம்  சிந்திப்போம் செயல் முறைகளிலும் செய்து காண்பிப்போம். என்ன முறைகளில் செயல்படலாம் என்று உங்கள் கருத்துக்களை  இங்கே பதியுங்கள் விவாதியுங்கள் ..  ... ..வஸ்ஸலாம்..