Tuesday, April 27, 2010

இசுலாமியப் பிரிவுகள் - சன்னி, சியா, சுஃபியிசம்

இசுலாமியப் பிரிவுகள் 
இசுலாம் மதம் பொதுவாக சன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவாக உள்ளார்கள். இதை தவிர சுஃபி போன்ற சில பிரிவுகளும் உள்ளன.
சன்னி இசுலாம்
சன்னி இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 85சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்பதற்கு அராபிய மொழியில் 'முகம்மதை பின்பற்றுதல்' என்று அர்த்தமாகும்.இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இந்த பிரிவு தன்னகத்தே மேலும் நான்கு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. ஃஅனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஃஅம்பிலி என்ற இவைகள் மத்ஃகப்புகள் என அழைக்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளைவிட சன்னி இசுலாமே, தீவிரமாக இசுலாமிய கொள்கைகளை பின்பற்றுகின்றது.

சியா இசுலாம்
சியா இசுலாம்,இசுலாமிய பிரிவுகளில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், இரான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் இருக்கின்றது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.
 சுஃபியிசம்
சுஃபியிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். மற்ற பிரிவுகளில் இருந்து மாறுபட்டு மிகவும் மாறுபட்ட சுதந்திர உணர்வை கொண்டவர்கள் இவர்கள். தனியே தங்களுக்கான சட்டங்கள்,பிரார்த்தனை முறைகள் ஆகியவற்றை கொண்டிராத இவர்கள்,பொதுவாக சன்னி மற்றும் சியா இசுலாம் முறைகளையே பின்பற்றுகின்றனர். 

நன்றி :  விக்கிபீடியா

No comments:

Post a Comment