Friday, March 5, 2010

பிளவு உதடுகள் (Cleft Lips) மற்றும் பிளவு அண்ணம் (Cleft palate)





பிளவு உதடுகள் (Cleft Lips) மற்றும் பிளவு அண்ணம் (Cleft palate)காரணங்கள்:-

* பிளவு உதடு[Cleft Lip] மற்றும் பிளவு அண்ணம் [Cleft Palate] என்பவை பிறவி குறைபாடுகள் ஆகும். இவை கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிறது.
* மரபு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இரண்டும் இணைந்து இக்குறைபாட்டினை தோற்றுவிக்கின்றன.
* பிளவு நிலை மறுபடியும் ஏற்படும் ஆபத்து, குடும்பத்தில் எத்தனை நபர்கள் இக்குறைபாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களின் நெருக்கம், பாதிக்கப்பட்டவர்களின் இனம் மற்றும் பாலினம் மற்றும் பாதிப்பின் தன்மை போன்றவற்றை உள்ளடக்கி பல காரணிகளைப் பொறுத்து ஏற்படுகிறது.

அறிகுறிகள்:-
* பிளவு உதடு என்பது ஒரு உதடு இரண்டாக பிறிந்திருத்தலாகும்.
* இப்பிளவு மேல்தாடை எலும்புகள் மற்றும் மேல்பல்ஈறுகளிலும் ஏற்படலாம்.
* பிளவு அண்ணம் என்பது வாயின் உள் மேற்கூரையில் ஏற்படும் துவாரம் ஆகும்.
* இந்நிலை, வயிற்றில் வளரும் குழந்தையின் இரண்டு பக்கத்திலும் உள்ள அண்ணம் ஒன்று கூடாததால் ஏற்படுகிறது.
* பிளவு உதடு மற்றும் பிளவு அண்ணம் ஒரு பக்கத்திலேயோ அல்லது இரண்டு பக்கத்திலும் ஏற்படலாம். மேலும் பிளவு உதடு மற்றும் அண்ணம் இரண்டும் இணைந்தே ஏற்படலாம்.
மற்றபிற அறிகுறிகளாவன:-

* உடல் எடை அதிகரியாமை
* உணவு உட்கொள்ளுவதில் பிரச்சினைகள்
* உணவு செல்லும்போது பால் உணவுக்குழாய்க்கு பதிலாக மூச்சுக்குழல்களில் செல்லுதல்.
* பல்வரிசை ஒழுங்கின்றி மாறி அமைதல்.
* குறைந்த வளர்ச்சி
* காதில் நோய்தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுதல்
* பேசுவதில் கடினம்
* மூக்கின் வடிவில் மாற்றம்

தேவையான பராமரிப்பு:-
பிளவுக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு பல வகையான உதவிகள் தேவைப்படுகிறது. உ.ம். அறுவை சிகிச்சை, பல்பராமரிப்பு, பேசுவதிற்கான மருத்துவ சிகிச்சை, காதுபராமரிப்பு மற்றும் பிற. தேவையான அனைத்து பராமரிப்புகளையும் ஒருங்கிணைந்த முறையில் பல ஆண்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.


தேவையான சிகிச்சைமுறை திட்டம்:-
* குழந்தை பிறந்த பிறகு - முதலில் பெற்றோர்க்கு, குழந்தைக்கு பால் கொடுப்பது மற்றும் குழதையின் உடல் எடை அதிகரிக்க செய்ய வேண்டுய முறைகளை பற்றி ஆலோசனை கொடுக்க வேண்டும்.
* 3-5 மாதங்கள் - மூக்கை சரி செய்வதோடு பிளந்த உதடுகளையும் பழுதுபார்த்தல்.
* 9-12 மாதங்கள் - பிளவு அண்ணம் பழுது பார்த்தல்.
* 1-2 ஆண்டுகள் - காது கேட்கும் தன்மையை ஆய்ந்தறிந்து, நடுக்காதுகளில் ஏற்படும் நோய் தொற்றுவினை தடுக்கும் வண்ணம் காதுகளில் சேரும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல்.
* 2-4 ஆண்டுகள் - பேச்சுத்திறனை கூர்ந்து ஆய்ந்தறிந்து, தேவைப்படின், அதற்கான சிகிச்சை அளித்தல். குழந்தை மருத்துவருடன் தவறாமல் கலந்து ஆலோசனை செய்தல்
* 4-6 ஆண்டுகள் - பிளவு அண்ணத்திற்கான அறுவைசிகிச்சைக்குப் பின், 1-15 சதவிகித குழதைகளுக்கு பேச்சுத்திறனை அதிகரிக்கத் தேவையான அறுவைசிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
* 6-12 ஆண்டுகள் - பல் மருத்துவச் சோதனை மற்றும் பல் சீரமைப்புச் சிகிச்சை.
* 9 ஆண்டுகள் - பற்குழியில் உள்ள குறைபாடுகளை நீக்க எலும்பு மாற்று சிகிச்சை.
* விடலைப் பருவ ஆண்டுகள் - நோயாளியின் வேண்டுதலின் பேரில், முகத்தின் தோற்றத்தை அழகுபடுத்த மூக்கை சரிசெய்ய தேவையான அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளுதல்.
* வாலிபபருவம் - இது போன்ற மரபுசார்ந்த குறைபாடுகள் தொடராதிருக்க ஆலோசனைகள் கொடுத்தல்

No comments:

Post a Comment