Sunday, April 11, 2010

விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

----- c-(புத்தக விமர்சனம்)

இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நூல்: விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

ஆசிரியர்: வி.என். சாமி

விலை: ரூ. 500

பக்கங்கள்: 1112

வெளியீடு: பாவலர் பதிப்பகம்

37, குருபக்காரன் சாலை,

மதுரை: 625 009

தொலைபேசி: 04524512250



இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும், உயிர் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொலை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம் என்றார் மூத்த பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங். ஆனால் இன்றளவிலும் முஸ்லிம்களின் தியாக மற்றும் வீர வரலாறு மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது.

இந்நூலாசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்நூலாசிரியர் வி.என். சாமி அவர்கள் தினமணி நாளிதழின் மூத்த செய்தியாளராக பணியாற்றியவர், நூலாசிரியர் பத்திரிக்கையாளர் என்பதால் விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வீர வரலாற்றை விரிவாகவும், ஆழமாகவும் தகுந்த சான்றுகளுடனும் எழுதியிருக்கிறார்.


நூலில் இருந்து சில பகுதிகள்........

 
குஞ்சலி மரைக்காயர்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக திகழ்ந்த கேரளத்து குஞ்சலி மரைக்காயர், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால் பதிப்பதற்கு முன்னர் வருகைப் புரிந்த போர்ச்சுகீசியரை விரட்ட, கடற்போரில் பல்வேறு சாகஸங்களைப் புரிந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் சுதந்திர இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு குஞ்சலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.



ஹைதர் அலி-திப்புசுல்தான்

ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி மைசூர் சுல்தானக உயர்ந்து பின்னர் இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட மிகுந்த துணிச்சலுடன் போரிட்டவர். ஆனால் மராத்தியரும், நிஜாமும், ஆற்காட்டு நவாபும் துரோகமிழைத்தால் ஹைதர் அலியின் நோக்கம் நிறைவேறாமல் போனது. ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் தந்தை வழி நின்று தனது இறுதி மூச்சிறுக்கும் வரையிலும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர்.



மருதநாயகம் கான்சாகிப்
இந்திய மண்ணிலிருந்து வெள்ளையரை வெளியேற்ற வேண்டும் என்னும் உறுதியுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு வரலாறு படைத்தவர் மருதநாயகம் கான்சாகிப். கான்சாகிப் மதுரையில் ஆங்கிலேயரின் கொடியை பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திர பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டு துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். மதுரையை அடுத்த சம்மட்டிபுரம் என்னுமிடத்தில் 15-03-1764 அன்று கான்சாகிபை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். மூன்று நாள்கள் கழித்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, தலையை திருச்சியில் புதைத்தனர். வெட்டி எடுத்த கை, கால்களைத் திருநெல்வேலி, திண்டுக்கல், நத்தம் ஆகிய ஊர்களில் புதைத்தனர். கை, கால்கள் இல்லாத உடல் மதுரையில் சம்மட்டிபுரத்தில் புதைக்கப்பட்டது.

மாப்பிள்ளைமார் கிளர்ச்சி

மாப்பிள்ளைமார்கள் செய்த புரட்சி மகத்தானதாகும். இது நாடு தழுவிய போராட்ட இல்லாவிடினும் கூட, 1857ல் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் நடந்த மிகப் பெரிய புரட்சியாகும். கேரளத்தில் எறநாடு, வள்ளுவநாடு முதலிய மலபார் தாலுக்காகளில் இப்புரட்சி நடைபெற்றது.


இந்த கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான மாப்பிள்ளைமார்கள் கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப்பட்டனர். கூட்ஸ் வண்டியின் கதவுகள் இறுக்கமாக பூட்டப்பட்டதால் காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத நிலையில் தாகத்தாலும் மூச்சுத் திணறலாலும் சித்திரவதைப்பட்டு ஏராளமான மாப்பிள்ளைமார்கள் இறந்தனர்.



பெண் போராளிகள்

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.

அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.

என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்கு நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு

வள்ளல் ஹபீப்

மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை
என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.



மேலும் மரண தண்டனை பெற்ற முஸ்லிம் வீரர்கள், முஸ்லிம் பக்கிரிகள் உயர்த்திய போர்கொடி, சிப்பாய் புரட்சியில் இன்னுயிர் ஈந்தவர்கள், ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்த முஸ்லிம்கள், விடுதலைப் போரில் அலிகர் பல்கலைக் கழக மாணவர்கள், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்னுயிர் ஈந்த முஹம்மது ஹபீப், உலமாக்களின் விடுதலை வேட்க்கை, விடுதலைப் போரில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், கவிஞர்களும் கலைஞர்களும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளில் பல்வேறு புதிய தகவல்களையும் நூலாசிரியர் இணைத்திருக்கிறார். நூலில் முத்தாய்ப்பாக சிறை சென்ற தியாகிகளின் ஊர்வாரியான விவரங்கள் மற்றும் நூலின் பிற்பகுதியில்விரிவான பெயர் மற்றும் பொருட் குறிப்பகராதியும் உண்டு. கெட்டி மேப்லித்தோ தாளில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கேற்ப பல்வேறு கோட்டோவியங்களும் நூலில் உண்டு.



இந்நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், '80 வயதை கடந்தப் பின்பும் அவர் இன்னும் எழுதிக் கொண்டிருப்பது அவரது அற்பணிப்பு மனப்பான்மையின் வெளிப்பாடு தான். இந்த நூலை வெளியிட அவர் பட்ட சிரமங்கள் சாதாரணமானவை அல்ல. இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் வேளையில் திரு. வி.என். சாமி அவர்களின் இந்த அற்புதமான ஆய்வு நூலை இளைய தமிழகத் தலைமுறை மக்களுக்கு ஓர் ஒளி விளக்காக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க விரும்பும் தமிழக மக்கள் என்னென்றும் திரு.வி.என். சாமிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார்கள். இந்த நன்றிக் கடனின் அறிகுறியாக இந்த நூல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும். இது பாடநூலாக அமைவதற்கு அரசு முன்வர வேண்டும்.

இந்நூல் முஸ்லிம்களின் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று.


thanks
-akbar ali - al fajer.





காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா

காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?

Post under ஆரோக்கியம் நேரம் 11:03 இடுகையிட்டது பாலைவனத் தூது

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.



இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.


காரட்:தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.



இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.



வெங்காயம்:வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.



ஆப்பிள்:இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.



அன்னாசி:இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.



எலுமிச்சம்பழம்:உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.



பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.

தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.



சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.



வெள்ளரிக்காய்: இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.



முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
 
நன்றி அக்பர் அலி (al fajer)

மணிகன்டனின் மனித நேயச் செயல்.

நெஞ்சை நெகிழச் செய்த மணிகன்டனின் மனித நேயச் செயல்.

சவூதி அரேபியா ரியாத் மாநகரில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் தமிழ்நாட்டைச்சேர்ந்த மனிகண்டன்.

அவர் தன் வேலையை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர்பேண்டால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பணக்கட்டு ஒன்று தரையில் கிடப்பதை கண்டார்.
அதை எடுத்து பார்த்த அவர் ஒருகணம் திகைத்து போனார். அத்தனையும் 500 ரியால் நோட்டுகளால் ஆன 50,000 ரியால்.

அதில் இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய்) தன் மனசாட்சி உறுத்தவே அருகிலிருந்த ஃபாஸ்ட்புட் கடையை அனுகி அக்கடை முதலாளியான கேரளாவைச்சேர்ந்த ஹம்ஜா என்பவரிடம் , இப்பணம் தாங்கள் கடையின் வாடிக்கையாளர் யாராவது ஒருவர் தான் தவற விட்டிருக்கவேண்டும் அப்படி யாராவது வந்து கேட்டால் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

மனிகண்டன் கூறியதைப்போலவே 15 நிமிடம் கழித்து சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதைபதைப்புடன் வந்து, தன் பணம் காணாமல் போனதை கூறினார். அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணிகன்டனின் மனிதநேய செயலை அனைவரும் பாராட்டினர். இச்செய்தி மலையாள பத்திரிக்கையான கல்ஃப் மாத்யமம் -ல் வெளிவந்துள்ளது.

நன்றி அதிரை பாரூக்

இதிலிருந்து நம் படிப்பினை
இறைவன்மீது பயம் இருந்தால் மட்டுமே நாமும் நடந்துகொள்ள முடியும்.

Saturday, April 10, 2010

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?



அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.



நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.



முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்

https://passport. gov.in/pms/ Information. jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.


அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர்

உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்

Mobile No : மொபையில் எண்

Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்

Father's Name: தந்தை பெயர்

Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்



[] கண்டிப்பாக எழுதவும்

[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)


ரேசன் கார்டு

குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

வாக்காளர் அடையாள அட்டை

வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)

Thanks to Mr.Akbar ali (OPM)


இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டதா?

இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டதா?

Posted on ஜனவரி 10, 2010 by masdooka

 ஜாகிர் நாய்கின் பதில்

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.

இஸ்லாம் என்ற வார்த்தை ‘ஸலாம்’ என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ஸலாம்’ என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் – இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி – குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் – உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் – சமுதாய எதிரிகளை அடக்கவும் – குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ – அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் – நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் – நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி ( De Lacy O’Leary) யின் கருத்து.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ’லியரி ( De Lacy O’Leary) எழுதிய ‘இஸ்லாம் கடந்து வந்த பாதை’ (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் – மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது – வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.’

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் – ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians).

கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் – பிரிட்டிஷ்காரர்களும் – சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் – இன்று கூட – 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians). இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் – இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

ஷார்ஜாவில் வேட்டி அணிய தடை? Sharjah bans South Asian attire lung i in public


ஷார்ஜாவில் வேட்டி அணிய தடை? Sharjah bans South Asian attire lung i in public

ஷார்ஜாவில் சாரம்(வேட்டி) அணிய தடை?

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவில், பொது இடங்களில் சாரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் சாரம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் பலர், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணி புரிகின்றனர். இவர்கள் பொது இடங்களில் சாரம் அணிந்து சென்று வந்தனர்.

கடந்த வாரம் ஷார்ஜாவில் சாரம் அணிந்து சென்ற ஆசிய நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள தெற்காசிய நாட்டவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அரசிடமிருந்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில் சாரம் அணிந்து சென்றவரை போலீசார் ஏன் கைது செய்ய வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரபு நாடுகளை பொறுத்தவரை உடல் முழுக்க மறைக்கும் படியான ஆடைகளை அணிய வேண்டும். ‘கைது செய்யப்பட்ட நபர் சாரம் இருபுறமும் தைக்காமல் வேட்டியை போல அணிந்து சென்றிருப்பார். இதனால், காற்றில் சாரம் பறக்கும் போது அவரது கால்கள் மற்றவர்கள் பார்க்கும் படியாக தெரிந்திருக்கும். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்’ என, கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவர், வீட்டைத் தவிர வெளியிடங்களில் சாரம் அணிவதில்லை, என தெரிவித்துள்ளார்.
thanks mannadi kakka

சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.


சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.

இலவச பயிற்சி திட்டம், சமூகம், தமிழ்நாடு அரசு.


வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.

வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

1. Hardware and Networking ,2 C, C++ 3,DTP, 4,Tally, with MS office

(10-வது வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்).

இப்பயிற்சி கீழ்க்காணும் இடங்களில் அளிக்கப்பட உள்ளன,


சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை, இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, தாராபுரம், விருத்தாச்சலம், சிதம்பரம், திண்டிவனம், மார்த்தாண்டம், தக்கலை, திருச்செந்தூர், நாசரேத், கோவில்பட்டி, ஆரணி, செய்யார், போளுர், செங்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆத்தூர், இராசிபுரம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடியாத்தம்,



பேரணாம்பட்டு, அரக்கோணம், பள்ளப்பட்டி, அரவங்குறிச்சி, குளித்தலை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையாங்குடி, தேவக்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூந்தமல்லி,கூத்தாநல்லூர், பர்க்கூர்,



தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேலப்பாளையம், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளியங்குடி, கடயநல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குன்ணூர், மேட்டுப்பாளையம்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.


5. Multimedia @ Animation
(10-வது வகுப்பில் தேர்ச்சி (ம) தோல்வி அடைந்தவர்கள், (ம) மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)


6. Dot.net (.net)
(பட்டதாரிகளும் (ம) பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)

இப்பயிற்சியில் சேர்வதற்குக் கீழ்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.



1) பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/லிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2) மாணவ/மாணவியர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

(இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள்)

சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)



1) சாதிச் சான்றிதழ் நகல்

2) குறைந்த பட்சம் 10லிஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்கலாம்.

3) வருமான சான்றிதழ் நகல்

4) பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்.

நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும்.



பயிற்சி அளிக்கப்படும் விவரங்கள்

CSC ComputerEudcation(தொலைபேசி எண் Chennai 044 – 25393783, 65698566) மூலம் மேற் குறிப்பிட்ட எல்லா 92 இடங்களிலும்.

IECT(தொலைபேசி எண். 044-42066684/85) மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் , புதுக்கோட்டை ஆகிய இடங்களில்.

Hindustan Sorfware Ltd(தொலைபேசி எண், 044-28511411,2,3) மூலம் மதுரை, கோயம்பத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில்.

Jayaram InfoTech (தொலைபேசி எண், 98421 58228, 9894288350) மூலம் அரியலூர், பெரம்பலூர், நாகபட்டிணம், கோயம்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில்.

Students Software training (தெலைபேசி எண், 98847 58845) மூலம் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகபட்டிணம் (ம) மதுரை ஆகிய இடங்களில்.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் உடனே சேர்ந்து பயிற்சி பெறலாம்.

இப்பயிற்சியின் மூலம் 8818 சிறுபான்மையின் மாணவ/ மாணவியர்கள் பயனடைவார்கள்.