Saturday, April 24, 2010

இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள் சகோதரர் யூஸா எவன்ஸ்

 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.
"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ளே குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது.

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,


"நீ பைளிளை படித்திருக்கிறாயா"

எனக்கு ஆச்சர்யம், "அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்"


"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை"


நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது. புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், "பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை"


அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.

பிறகு அவர் கூறினார், "நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?"


சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று "Genesis" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.

அதிர்ச்சிகள் பல காத்திருந்தன...

ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?


உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ............ .....(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).


இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.


நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா?

அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்?

அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்?

ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?

புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது"...

அதையேத்தான் அவரும் கூறினார். "சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது".

சரியென்று "New Testament" டை படிக்க ஆரம்பித்தேன்.

இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே "New Testament"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...

என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.

"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்"

பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,

"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)"

என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?

அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?

என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்? நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, "நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.


கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், "உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்".

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.  நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.

பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்"

நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே...

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்"

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற "Moon God" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்" என்று என்னென்னவோ இருந்தது.
அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். "நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை"

பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. இரண்டு, முஸ்லிம்கள் என்றால் யார் என்று போட்டிருந்த அந்த புத்தகத்தில், அவர்கள் பகுதி நேர போதை மருந்து வியாபாரிகளாகவும் இருப்பார்கள் என்று போட்டிருக்கவில்லையே?
ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,


"இஸ்லாமைப் பற்றி தெரியுமா?" என்று கேட்டார்..

"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.

"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்"

"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்"

நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?"

"ஆம், அதனால் என்ன?"

"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே"

"என்ன?" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா"

"ஜும்மாஹ் என்றால்?"

"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது" (அரங்கத்தில் சிரிப்பு)

"எங்கே இருக்கிறது மசூதி?"
அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.

அவருடன் சென்றேன். பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே போனவர்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். அமெரிக்கர்களை காண முடியவில்லை, ஒரே ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரை தவிர.

அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.
என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். "என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா இது அதற்குண்டான செட்அப்பா" ஒருவித பயம்.

பின்னர் குத்பா ஆரம்பித்தது "இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு" என்று ஆரம்பித்தார் இமாம்.

அவ்வளவுதான் பயம் அதிகரித்தது...

"அட கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.

அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, "இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?

குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.

"என்ன செய்யப் போகிறீர்கள்" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.

"தொழ போகிறோம்"

"யாரை"

"இறைவனை"

"எந்த இறைவன்?"

"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை"

என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.

தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.

சஜிதா செய்தார்கள். "ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.

தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.
தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம், "இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?"

"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்"

"அதை நான் படிக்கலாமா"

"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்"

எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.

முஸ்லிம்கள் என்றால் யார், எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.

"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.

கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக் கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.

திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...

இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள். என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?

அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பற்றிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.

இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.

தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.

என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.

நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.

அல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.

இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அலாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்"

அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம். இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.

நன்றி அயூப்கான் JJ

பொன்மொழிகள்...

*மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன. - நபிகள் நாயகம். *
*தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம். - சிம்மன்ஸ்.*
*உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும். - மான்ஸ்பீல்டு.*
*நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம். - அன்னை தெரசா.*
*எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. - ஜேம்ஸ் ஆலன்.*
*மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய  சுமையாகிவிடும். - பெர்னார்ட்ஷா.*
*இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. -ஸ்ரீசாரதாதேவி. *
*மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
- சாணக்கியர். *
*நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான். - ஜான்மில்டன்.*
*உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை. - வோல்டன். *
*அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.*

நன்றி அயூப்கான் JJ

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்....

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்



1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்..

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன்! இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?

'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!! இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா!நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.

மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். (ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்)
நன்றி அயூப்கான் JJ

Friday, April 23, 2010

"சத்தியமே ஜெயம்" என்ற பெயரில் சமுதாய சீரழிவு எச்சரிக்கை....



ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!

இன்று மாறிவரும் உலகில் நம் சமுதாயங்களின் பிளவுகளை சொல்லி மாளாது தினம் ஒரு இயக்கம் உருவாகிகொண்டுதான் உள்ளன. எத்தனை ஜமாத்துக்கள்,கழகங்கள், லீகுகள். இது போன்ற சமுதாய(?)அமைப்புகள் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை தந்தாலும் சந்தர்ப்பு சூழ் நிலை காரணமாக ஆதரித்தும் விமர்ச்சித்தும் வருகிறோம்.

ஆனால் தற்பொழுது "சத்தியமே ஜெயம்" என்ற பெயரில் சமீப காலமாக ஒரு இயக்கம் சிங்கப்பூரை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள். இறைவனால் தடுக்கப்பட்ட சூது,மது,மாது, விபச்சாரம் இவையனைத்தும் விதியின்படி தான் நடக்கிறது.அல்லாஹ் எனக்கு விதியாகியுள்ளான் நான் குடிப்பதற்கு இறைவன் நாடியுள்ளான் நான் குடிக்கிறேன் .. என இது போன்ற பதில்கள் தான் வருகிறது.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது எந்த ஒரு செயலும் இறைவன் நாடினால் தான் நடக்கும் அது போல்தான் இதுவும் என்றார் கொள்கை பிடிப்புடன் இவ்வியக்கத்தின் முக்கிய நபர் சிங்கப்பூரில் வசிக்கும் முத்துப்பேட்டையை சார்ந்தவர் ஆவர் இவர் நடத்தும் மினிமார்ட்டில் மது போன்ற போதை வஸ்த்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன இவரை நண்பர் மூலம் தொடர்புகொண்டு இது விஷயமான சில சந்தேகங்களை கேட்ட பொழுது என்னை நேரில் வருமாறு அழைத்தார்.

எனது வேலை பளு காரணமாக நேரில் செல்ல இயலவில்லை. எனவே அன்பார்ந்த அருமை நண்பர்களே ... நாம் இயக்கங்களால் பிரிந்து கிடந்தாலும் இது போன்ற அபாயகரமான, அல்லாஹ் ரசூல் சொல்லித்தராத மிகவும் கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ற இயக்கங்களின் பெயரை சொல்லி ஊருக்குள் வந்தால் விரட்டியடிக்க தயாராக இருக்க வேண்டும். பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளை சலவை செய்யப்பட்டு இந்த பாவத்தின் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.

இவ்வலையில் விழுந்த பல இளைஞர்கள் தங்களுக்கு சாதகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இதனால் அவர்களை நம்பி பல லட்சம் செலவு செய்து அங்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள் கவலையில் இருந்து வருவதும் இவர்களின் பார்வையில் இதுவும் "விதி" தான் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர் போலும் இவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் SJ சிம்பல் போட்டுவைத்துள்ளனர்.

எனவே அன்பு நண்பர்களே... இதுபோன்ற ஷிர்க்கான இயக்கங்களை ஊருக்குள் ஊடுருவ விடாமல் காப்பது உலமாக்களுக்கும் நமக்கும் தலையாய கடமையாக உள்ளது. அல்லாஹ் அனைவரையும் காப்பாற்றி நேர்வழி காட்டுவானாக ஆமீன் .


“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

படிப்பதோடு மட்டுமல்லாமல்....இச்செய்தியை மின்னஞ்சல்
மூலம் தன் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்
நன்றி : அயூப்கான் JJ

Wednesday, April 21, 2010

Tamil Nadu Today







































Thanks to Akbarali alfajer...dubai

கொள்கை இல்லாக் கூட்டத்தார்!

கொள்கை இல்லாக் கூட்டத்தார்!
தமக்கென தெளிவான ஒரு கொள்கையும், அக்கொள்கையில் உறுதியான பிடிப்பும் உள்ளவர்கள், தம் கொள்கையைப் பற்றி பெருமையாகப் பேசவோ, அதைப் பற்றி விளக்கம் கொடுக்கவோ தயங்குவதில்லை!
ஆனால், தமக்கென எந்த ஒரு கொள்கையும் இல்லாதவர்கள், அல்லது வெளியில் சொல்ல முடியாத கொள்கைகளைக் கொண்டவர்கள், பிறரின் கொள்கைகளை குறை சொல்வதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாம் மத இணைய தளங்களில் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. தமிழில் கூட இதுபோல நிறைய இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் இஸ்லாம் மதம் பற்றிய மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். கிருஸ்துவ மதம் பற்றி இப்படிப்பட்ட இணைய தளங்கள் தமிழில் இல்லையே தவிர ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

ஆனால், இதுப்போன்ற வசதி பார்ப்பன ஹிந்துத்துவ கொள்கைகளைப் பற்றி மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த பார்ப்பன மனுதர்ம கொள்கைகளைப் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).
ஆனால் இணையங்களில் பார்ப்பனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கிருஸ்துவ பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாம் மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு கிருஸ்துவ மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இந்த இரு மதத்தினரும் சண்டை போட்டுக் கொள்வதை தாம் பார்த்து ஆனந்தமடைய வேண்டும் என்ற கேடுகெட்ட நோக்கமே இதன் காரணம். மேலும் பார்ப்பனர்கள் புனைப்பெயர்களின் பின்னே ஒழிந்து கொண்டு பெரியாரை திட்டுகிறார்கள். ஆபாச கதைகளை எழுதி பதிவேற்றுகிறார்கள். மாட்டிக் கொண்டால் காலில் விழாத குறையாக கெஞ்சி கேவலப்பட்டுப் போகிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் கிருஸ்துவர்கள் செய்வது போல தமது பார்ப்பன மதத்தின் கொள்கைகளை விளக்கி இவர்கள் இணையத்தில் எழுத மாட்டார்கள். அந்த கொள்கைகளைப் பற்றி கேள்விகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் என்ன?

ஏன் இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்கள் போல பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? பார்ப்பன மனுசாஸ்திர கொள்கைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளனவா? பார்ப்பன கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? பார்ப்பனர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

 
கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் அதிகம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடதுவதில்லை என்றாலும் மாற்று மதத்தவர்கள் கேட்கும் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.

 
இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் கேள்வி பதில் வசதி செய்து பதில் கொடுக்கும்போது, ஏன் பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். பார்ப்பன சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள்.

 
பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தாததற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

 
காரணம் 6. இன்று உலகில் நிலவும் சமூக அவலங்களுள் மிக அசிங்கமானவை சாதிப் பிரிவினையும் தீண்டாமைக் கொடுமையுமே. இவ்விரண்டிற்கும் ஆணி வேராக இருப்பது பார்ப்பனர்களின் மனுசாஸ்திர கொள்கைகளே. முழு உலகமும் சேர்ந்து எதிர்த்தாலும் பார்ப்பனர்கள் சாதிப்பிரிவினையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிப்பிரிவினை என்ற இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டார்கள்தான். ஆனால் அவர்களெல்லாம் பபர்ப்பனர்களல்ல. சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று உண்மையாய் பாடுபட்ட ஒரு பார்ப்பனரையாவது காட்ட முடியுமா? பாரதியார் கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாப்பாவைப் பார்த்து பொய்தான் சொன்னார். பார்ப்பன சமுதாயமே நால்வர்ண சாதிப்பிரிவினையின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்டதுதான். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் பார்ப்பனர்களுக்கு இல்லாததால் தமது கொள்கைகளைப் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்தவே மாட்டார்கள்.

காரணம் 5. பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பவை பார்ப்பன வேதங்களே. மனுசாஸ்திரம் பெண்களை ஒரு கேவலமான பிறவிகளாக சித்தரிக்கிறது. பண்டைய காலத்திலிருந்தே வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும் ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தி வருபவர்கள் பார்ப்பனர்கள். கோவிலுக்கு பொட்டு கட்டுதல், தேவதாசி முறை போன்ற பெயர்களில் பெண்களை போகப்பொருளாக நடத்தியவர்கள் இவர்கள். கேள்வி பதில் என்று வந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும். அங்கு கேள்விகளைக் கேட்கும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைவாதிகளுக்கு பார்ப்பனர்களால் பதில் சொல்லி மாளாது. எனவே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 4. பார்ப்பனர்கள் அக்கால அரசர்களை மூளைச் சலவை செய்து பொன்னையும் பொருளையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த ஈனச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது பார்ப்பனர்கள் வேதங்களை கற்றவர்கள் என்ற ஒரு தகுதி மட்டுமே. மங்கலம்' என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு 'மங்கலம்', 'அகரம்' என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும். இதற்கு போட்டியாக மற்றவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேதத்தை படிக்கும் மற்றவர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் அச்சுறுத்தி வைத்திருந்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் பார்ப்பனர்கலின் இந்த ஈனச்செயல்களெல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். அதனால் பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 3. பார்ப்பனர்களின் வேதங்களும் சட்டங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுகூலமானவை. "அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)" என்று சொல்கிறது மனுசாஸ்திரம். இது போன்ற, எண்ணற்ற, பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சட்டதிட்டங்களை கொண்டதுதான் பார்பனர்களின் வேதங்கள். இதுபோன்ற சட்டங்களை இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்களால் எவ்வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது. கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவை பற்றி கேள்வி வந்தால் பார்ப்பனர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

காரணம் 2. மேலும் பார்ப்பனர்களின் மனுசாஸ்திரத்தின்படி பார்ப்பனர்கள் என்ன குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே விதிக்கப்பட வேண்டும். அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு வேறு மாதிரியான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

 
எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)


அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)


பார்ப்பான்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லும் மனுசாஸ்திரம் மற்றவர்களுக்கு பாரபட்சமான தண்டனைகளை வழங்குகிறது. இதற்கெல்லாம் பார்ப்பனர்களால் ஒருக்காலும் பதில் சொல்லவே முடியாது. அதனாலேயெ பார்ப்பனர்கள் கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடத்தாமல் ஒளிந்து கொள்கிறார்கள்.

காரணம் 1. கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அவரவர்கள் மதம் சிறந்தது என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை தழுவினால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவர்கள் இறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் மற்ற மதத்தினருக்கு தங்கள் மதத்தின் சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி அவர்கள் தங்கள் மதத்தை தழுவும்படி அழைக்கிறார்கள். இது மற்ற மதத்தினர் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதன்மூலம் தங்கள் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியோ பிறப்பினால் வருவது. வேறு மதத்தை சேர்ந்தவர்களல்ல, வேறு சாதியை சேர்ந்த இந்து கூட பார்ப்பனராக சாதி மாற முடியாது. அதனால் தங்கள் சாதியின் (இல்லாத) அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு இல்லை. தவிரவும் பார்ப்பனர்கள் மற்றவர்கலை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இந்த உண்மையை எப்படி கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் விளக்குவார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

நன்றி : http://unmaiudaiyaan.blogspot.com


Monday, April 19, 2010

ஒளரங்கசீப் - ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது..?

ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.

ஆனால் முஸ்லிம்கள் மீதுள்ள 'ஜக்காத் ' பற்றி குறிப்பிடவில்லை. அதை இங்கே சொல்வது நலம் என்று நினைக்கிறேன்.

முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத் ' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.

முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத் ' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத் ' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது. எனவே 'ஜகாத் ' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.

குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத் 'தை விதிக்க முடியாது.



ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.
வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?

எனவேதான் 'ஜிஸ்யா ' வந்தது.

இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?

சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா ' விதிக்கப்பட்டது.தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.

இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.

இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா '.
இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டனஅவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.



T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :



'ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல.

ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.


' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது ( பக்கம் 228).

கரைகண்டம் நெடுஞ்செழியன் பேசுகிறார்.
'பொதுமக்களின் வருவாயில் ஆட்சி செய்யும் இன்றைய ஜனநாயகத் தலைவர்களுக்குப் பல செய்திகளையும், பாடங்களையும் தமது செயல்கள் மூலம் விட்டுச் சென்றிருக்கிறார் பாதுஷா ஒளரங்கசீப் ஆலம்கீர்.
பொதுவாக ஆனால் தவறாக முஸ்லிம் ஆட்சியாளர் என்று கருதப்பட்ட இவர் தன் குடிமக்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் அந்த அன்பு எப்படி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தது என்பது தெளிவாகப் புலனாகின்றது.

புனித மக்கா நகரத்தின் ஷெரிப் இரு முறை தமது தூதர்கள் மூலம் ஒளரங்கசீப்பிடம் தமது நகர மக்களுக்குப் பெரும் பொருள் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.அதற்கு ஒளரங்கசீப், 'எனது தேசத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்கக் கூடாதா ? 'என்று வினவி வெறுமே திருப்பி அனுப்பினார்.

இதிலிருந்து அவர் ஒரு முஸ்லிம் மதப்பற்றாளர் என்பதை விடவும் தம் குடிம்மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட பாதுஷா என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி நெடுஞ்செழியன். பக்: 226)

ஒரு சமயம் வரிகட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட, அது குறித்து பாதுஷாவின் யோசனைக் கேட்டு கவர்னர் கடிதம் எழுதினார்.
பாதுஷா பதில் - 'நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மழையோ இல்லாமல் போனாலோ அல்லது இயற்கையின் எதிர்பாராத சதியாலோ விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலோ, அதற்காக விவசாய மக்களைப் பிரச்சினைக்குள்ளாக்க வேண்டாம்.

வரியைத் தள்ளுபடி செய்துவிடவும். கூடவே வரிகட்ட முடியாமலிருப்பது உண்மைதானா என்பதை நன்கு விசாரிக்க வேண்டும் ' என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகிறார் பாதுஷா. ' (வந்தார்கள் வென்றார்கள் - மதன். பக்: 169)ராஜாங்க விஷயங்களிலும் ஆஸ்தான சபையிலும் மரபுகளும் சம்பிரதாயங்களும் சட்டத்திட்டங்களும் மீறப்படக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் ஆலம்கீர்.
பாதுஷாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று குறிப்பாளர் விவரிக்கிறார்....

'பாதுஷா ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது சபையில் ஒரு கெளரவமான அமைதி நிலவும். யாரும் தப்பும் தவறுமாகப் பேசி நான் பார்த்ததில்லை. சபையில் இல்லாத ஒருவரைப் பற்றி கேலியாகப் பேசுவது பெரும் குற்றமாக கருதப்பட்டது.யாராக இருந்தாலும் சரி மிகவும் மரியாதையான, அடக்கமான வார்த்தைகளையே பேச்சில் உபயோகிக்கவேண்டும். சொல்வதைத் தெளிவாக, தீர்க்கமாகச் சொல்லவேண்டும்.தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார் ஒளரங்கசீப்.



அப்போது யார் வேண்டுமானாலும் நேரடியாகத் தங்கள் பிரச்சினைகளை மன்னரிடம் கூறலாம். சாமானியராக இருந்தாலும் அவர் சொல்வதை சக்கரவர்த்தி மிகுந்த கவனத்துடன் கேட்டு உடனே தீர்ப்பு வழங்குவார்.
'உடல் நலம் கருதி ஆலம்கீர் சற்று ஓய்வு எடுக்கவேண்டும்.... ' என்று ஒரு தளபதி பாதுஷாவுக்கு கடிதம் எழுதியதற்கு
'இறைவன் கருணையால் நான் நாடாள அனுப்பப்பட்டிருக்கிறேன். கடைசிவரை உழைக்க வேண்டியது என் கடமை. எனக்காக அல்ல, குடிமக்கள் நலனுக்காக. மக்கள் மகிழ்ச்சியில் பின்னிப் பிணைந்தால் ஒழிய எனக்கு என்று தனிப்பட்ட மகிழ்ச்சி எதுவும் கிடையாது.... ' என்று ஒளரங்கசீப்பிடமிருந்து பதில் போனது. (வந்தார்கள் வென்றார்கள் - மதன் பக்: 167-168)



தன் இரண்டாவது மகனுக்குக் கடிதம் மூலமாக சொல்லிய அறிவுரை....
ஓய்வு எடுப்பது, உல்லாசமாக விடுமுறை எடுப்பது... இதிலெல்லாம் ஆளப்பிறந்தவர்கள் நாட்டம் செலுத்தக்கூடாது. மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பது ஒன்றே ஆட்சியாளர்களின் கடமை. அரசரும் சரி, தண்ணீரும் சரி.. ஒரே இடத்தில் தேங்கக்கூடாது. தேங்கினால் தண்ணீர் கெட்டுப்போய்விடும், அரசரும் மதிப்பிழந்து போய்விடுவார்...!

'....வேண்டுமானால் நாட்டைப் பிரித்துக்கொள்ளுங்கள் தலைகள் உருள வேண்டாம், ரத்த ஆறு ஓட வழி வகுக்காதீர்கள்... ' என்று தன் மகன்களுக்கு கடைசி காலத்தில் கெஞ்சல் கடிதம் எழுதிய அரசர்தான் மக்களை குறிப்பாக இந்துக்களைக் கொடுமைப் படுத்தினான், மதவெறிப் பிடித்தவன்... ?

மூளைக்கு சிறிது வேலை கொடுங்கள். சிந்தனை என்ற ஒரு இயக்கம் உள்ளே இருக்கிறது. அழுக்காறு மனம் படைத்தவர்களுக்கு சமத்துவமும் தெரியாது, சகோதரத்துவமும் தெரியாது. நல்லிணக்கத்தின் இலக்கணம் எங்கே தெரியப்போகிறது ?

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்திருக்கும்போது நட்புணர்ச்சியின் விதையை அங்கே தூவ முடியாது!

பிரம்மாவின் உயர் படைப்பு நாங்கள்தான் என்று ஆயிரமாயிராண்டு காலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த இவர்களின் ராஜபோகம், சென்ற நூற்றாண்டில் அம்பேத்காரர்களாலும் பெரியார்களாலும் பரிக்கப்பட்டு விட்டன;
மக்கள் விழித்துக்கொண்டனர். அவற்றை ஜீரணிக்க முடியவில்ல. கொஞ்சநஞ்சமிருந்தது தேவதாசி, அதுவும் பறிபோய்விட்டது.
குலக்கல்வியைக் கொண்டுவந்தோம், கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது; சமீபத்தில் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்துப் பார்த்தோம், அதையும் புதைக்கவேண்டியதாகிவிட்டது;

முஸ்லிம்கள் குர்பானியை தடை செய்ய கோயிலில் பலி தடை என்று முன்னோடியாக வைத்துப்பார்த்தோம், அது கொண்டு வந்தவர்களையே குர்பானி(பலி) கொடுத்துவிடும் போலாகிவிட்டது. என்ன செய்வது ?

இப்படியாவது பிழைப்பை நடத்திப் பார்ப்போம், பழய குப்பையை கிளறினால் எதாவது கிடைக்காலாமல்லவா ? அதிலாவது குளிர் காயலாமல்லவா ? சங்கு சும்மாத்தானே கிடக்கிறது, ஊதுவோமே!

ஐயா! நம்மிடம் ஆயிரம் குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றை முதலில் சரி செய்வோம். பிறகு ஒளரங்கசீப்பைப் பார்ப்போம், அவர் எங்கேயும் போய்விடமாட்டார். என்ன சொன்னாலும் ஒளரங்கசீப், cheap ஆகிவிடமாட்டார்.
 நன்றி: வாஞ்சூர்.பிளக்சபாட்.காம்   http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_01.html