பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. இவ்வுலகில்பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறுபரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது'தாய்' என்ற ஸ்தானமாகும்.
வணிகமயமாக்கப்பட்ட அன்னையர்தினம்
பல்வேறு சர்வதேச தினங்களைப் போன்றே அன்னையர் தினமும் வணிகமயாக்கப்பட்டது. அதுவும் அன்னையர் தினம் துவக்கப்பட்டு 9 ஆண்டுகள் கழித்து. யார் அன்னையர் தினத்தை துவக்கி வைத்தாரோ அவரே அதன் எதிர்ப்பாளாராகவும் மாறினார். ஆம், அன்னா ஜார்விஸ் அன்னையர் தினத்தை வணிகமயமாக்கியதற்கு எதிராக போராட ஆரம்பித்தார்.
1948 ஆம் ஆண்டில் அன்னையர் தினம் வணிகமயாக்கப்பட்டதைக் கண்டித்துபோராட்டம் நடத்தியதால் அமைதியை சீர்குலைத்தார் எனக்கூறி கைதுச்செய்யப்பட்டார் அவர். அன்னா ஜாரவிஸ் கடைசியாக கூறியது என்னவெனில், "இதுபோல் நடக்கும் எனத்தெரிந்திருந்தால் நான் இந்த நாளை துவங்கியிருக்க மாட்டேன். ஏனெனில் அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது." என்று.வர்த்தக ரீதியாக வெற்றிப் பெற்ற அமெரிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர்தினம் மாறிவிட்டது. தேசிய விடுதிக் கூட்டமைப்பின் கணிப்பின்படி அன்னையர்தினமானது இப்பொழுது அமெரிக்காவின் உணவு விடுதிகளில் இரவு விருந்துக்குஆண்டின் பிரபல நாளாக மாறிவிட்டது.
IBIS World என்ற வணிக ஆராய்ச்சி வெளியீட்டு நிறுவனத்தின் கணிப்பின்படி
அமெரிக்கர்கள் மலர்களுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், விரும்பிய பரிசுப்
பொருட்களுக்கு 1.53 பில்லியன் டாலர்களும், வாழ்த்து அட்டைகளுக்கு 68
மில்லியன் டாலர்களும் செலவு செய்கின்றனர்.2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்அன்னையர்தினத்தில் அன்னையர்களுக்கானமோதிரங்களின் விற்பனை அமெரிக்காவின் நகைத்தொழில் துறையின் ஆண்டுவருமானத்தில் 7.8 சதவீதத்தை பெற்றுக் கொடுத்தது கார்ப்பரேட் தாய்மார்கள்அன்னையர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் தாய்மையின் புனிதத்தைக்கெடுக்கும் தாய்மார்களின் அவலத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வாடகைத்தாய் என்ற பெயரில் அன்னிய ஆண்களின் குழந்தைகளை சுமந்து தனது புனிதமானகருவறையை கார்ப்பரேட் அறைகளாக மாற்றி வருகின்றனர் சில பெண்மணிகள். இவர்கள் தாய்மையையும் பெண்மையையும் காசுக்காக சீரழிக்கும் வெட்கங்கெட்டபெண்மணிகளாவர்.கருவறையை கழிப்பிடமாக மாற்றுபவர்கள் முறைகேடான உறவுகள் மூலம் தந்தை யார் என்று தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிய பெருமை கருவறைகளை கழிப்பிடமாக மாற்றிய பெண்மணிகளை சாரும்.தவறான உறவில் பிறந்தக் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசும் கல்நெஞ்சம்படைத்தவர்களை நாம் எவ்வாறு அன்னையர் இனத்தில் சேர்க்க இயலும்.கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள் குழந்தை என்பது இறைவனின் அருட்கொடையாகும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் தான் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை அல்லது தான் கருவறையில் சுமக்கும் குழந்தைகளை அது பெண்ணாக இருக்கும் காரணத்தினால கருவிலேயே அழிக்க நினைக்கும் பாவிகளை நினைத்தால் மனம் பதறிப்போகிறது. இவர்கள்தான் கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள். இவர்கள்குழந்தையின் அழுகுரலுக்கு பதிலாக மரண ஓலத்தை கேட்க விரும்புகிறார்கள்.
பாசிசமும் தாய்மையும்
தாயை தெய்வமாக மதிக்கிறோம் என்று கூறிவிட்டு தாய்மையை காலில் போட்டு மிதிக்கும் கயமைத் தன்மைக் கொண்ட பாசிஸ்டுகளின் இரட்டை வேடத்தை இந்த அன்னையர் தினத்தில் அடையாளம் காட்டுவது அவசியமாகும். பாரத மாதா, கோ மாதா என எதற்கெடுத்தாலும் மாதா கோஷம் எழுப்பும் இந்தக்கயவர்கள் இந்தியாவில் நடந்த பல கலவரங்களிலும் சிறுபான்மையின தாய்மார்களின் தாய்மையை சூறையாடியவர்கள். அதன் உச்சக்கட்டம் தான் குஜராத்தில் நாம் கண்ட கோர நிகழ்வு. கெளஸர் பானு என்ற தாயின் வயிற்றைக்கிழித்து கருவறையிலிருந்த சிசுவைத் தூக்கி தீயில் போட்டு பொசுக்கிய இந்தஅரக்கர்கள் ஒரு தாய்க்குத்தான் பிறந்தார்களா? என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
பத்துமாதம் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிடும் பாதகர்களும் மனித போர்வையில் நடமாடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அகதிகளாக்கப்படும் அன்னையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதனால்தான் ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்:
''அன்னையர்க்கு தினம் ஒன்று வேண்டாம்- அன்றாடம் அன்பு செய்யும் மனம் தான்வேண்டும்'' என, மனித நேயம் மக்கிப்போன காலக்கட்டமாக மாறி வருகிறது இன்றைய நவீன உலகம். அன்னையர் தினம் என்ற பெயரால் வருடத்தில் ஒரு நாளை சிறப்பித்து கொண்டாடுவதினாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதினாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த 'தாய்' என்ற உறவுக்கு நாம்
பிரதி உபகாரம் செய்திட இயலாது.
தாய்மைக்கு உயர்வளித்த ஒப்பற்றக் கொள்கைதாயை தெய்வமாக மதிக்கிறோம் எனக்கூறி என போலிவேடம் போடுவதை இறை மார்க்கமான இஸ்லாம் ஏற்கவில்லை. இறைவனுக்கு நிகராக எவரும் எப்பொருளும் இல்லை என்பதுதான் இஸ்லாம் கூறும் இறைக்கொள்கை.
அதே வேளையில் அன்னயருக்கு இஸ்லாம் மனித உறவுகளில் உன்னத இடத்தை அளித்து கெளரவிக்கிறது. தாய் காலடியில்தான் சுவனம் இருக்கிறது என்ற நபிகளாரின் வாக்கு அன்னைக்கு பணிவிடைச் செய்வதன் மூலமே மரணத்திற்கு பின்னர் வரும் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும் என்ற உயரிய தத்துவத்தை போதிக்கிறது. மிகப்பெரிய பாவங்களில் ஒன்று பெற்றோரை துன்புறுத்துவது எனக்கூறி அன்னையரை அபலைகளாக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம். நபித்தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நபி(ஸல்...) அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்கள்.
அன்னையானவள் இஸ்லாத்தை தழுவாவிட்டாலும் கூட அவருக்கு இவ்வுலகில் நீ மதிப்பளிதேயாக வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த மார்க்கம் தான் இஸ்லாம்.
பெற்றோருக்கு கடமையாற்ற வேண்டிய முக்கிய காலக்கட்டம்தான் அவர்களுடைய வயோதிக காலம். அவ்வேளைகளில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டுமென்பதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
"நபியே! உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்றும் கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கின்றான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை(நிந்தனையாகச்) ''சீ'' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம்(எதைக் கூறிய பொழுதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாகவும் அன்பாகவுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றியும் ''என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீரும் பிரார்த்திப்பீராக."
(அல்குர்ஆன் 17:23,24).
இத்தகையதொரு இஸ்லாமிய சமூக சூழலில் முதியோர் இல்லங்களுக்கு ஏது இடம்? அதனால்தான் முஸ்லிம் சமூகத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் நிலை குறைவாகவே உள்ளது. இஸ்லாமிய குடும்பங்களைப் பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறையல்ல மாறாக
வருடம் முழுவதுமே அன்னையர் தினம் தான். அங்கு போலியான பாசாங்கான நடவடிக்கைகளுக்கு சாத்தியமே இல்லை. மார்க்கத்தின் வழி நின்று அன்னையரை போற்றுவோம்!
நன்றி : J.நிசார் அகமது (P.T.M)
No comments:
Post a Comment