Tuesday, April 13, 2010

புவி வெப்பமயமாதல்...





















> புவி வெப்பமயமாதல்

> பற்றி உலகம் முழுவதுமே

> மிகுந்த அக்கறையுடன்

> விவாதம்

> நடைபெற்றுக்

> கொண்டிருக்கிறது.

> லாபம் மட்டுமே குறி

> என்ற நிலையில்

> இருக்கும் வளர்ந்த

> நாடுகளின் அரசுகள்

> மற்றும் அந்நாடுகளைச்

> சேர்ந்த

> பன்னாட்டு பகாசுர

> நிறுவனங்கள் ஆகியவை

> மட்டுமே இந்தப்

> பிரச்சனையில்

> வில்லன்களாகச்

> செயல்படுகின்றன.

> அண்மையில் நடந்த

> கோபன்ஹேகன்

> உச்சிமாநாடு

> தோல்வியடைந்ததற்கு

> அமெரிக்கா மற்றும்

> அதன் கோஷ்டி

> கானக்குழுவில் இடம்

> பெற்றிருக்கும்

> நாடுகளும்தான்

> காரணமாகும். தற்போது

> புதிய கோஷ்டி ஒன்றை

> உருவாக்கும் பணியில்

> ஈடுபட்டுள்ளது என்ற

> செய்தியும் ஏற்கெனவே

> வெளியாகியுள்ளது. ஐ.நா.

> சபையின் குழு

> வெளியிட்ட சில தவறான

> கணிப்புகளைக்

> கொண்டு வெப்பமயமாதல்

> ஒரு பிரச்சனையே இல்லை

> என்று திரித்துக்

> கூறும்

> முயற்சியும்

> நடக்கிறது.

>

> வெப்பமயமாதலால்



> நதிகள், ஏரிகள் காணாமல்



> போய்க்கொண்டிருக்கின்றன

> என்ற

> செய்திகள் ஒருபக்கம்.

> மறுபக்கத்தில்

> நதிகளைத்



> திருப்பிவிடுவதால்



> கடலே



> காணாமல் போகப்போகிறது

> என்ற அதிர்ச்சியான

> தகவல்கள்

> வெளியாகியுள்ளன. ஆரல்

> கடல் என்று

> அழைக்கப்பட்டாலும்

> உலகத்திலேயே

> நான்காவது பெரிய ஏரி

> என்றுதான்

> அதை புவியியல்

> வல்லுநர்கள்

> குறிப்பிடுகிறார்கள்.

> மத்திய ஆசியப்

> பகுதியில்

> உள்ள இந்த ஆரல்

> கடலுக்கு ஏற்பட்டுள்ள

> கதி அதிர்ச்சியான

> தகவல்களை

> அளித்துள்ளது.

>

> அமுதர்யா மற்றும்



> சிர்தர்யா என்ற இரு



> ஆறுகளின் இயற்கையான



> போக்கை மாற்றும்



> வகையில் திருப்பி



> விடப்பட்டதால்தான்



> இந்த ஆரல் கடல்



> சுருங்கிக்



> கொண்டிருக்கிறது.

>

> கடந்த 50 ஆண்டுகளில் 90

> விழுக்காடு ஆரல் கடல்

> பகுதி

> சுருங்கிவிட்டது.

> இன்னும் சில

> பத்தாண்டுகளில் ரியல்



> எஸ்டேட்காரர்களின்



> கைகளில் அந்தப்பகுதி



> போனாலும்



> ஆச்சரியப்படுவதற்கில்லை

> என்பதுதான் தற்போதைய

> நிலைமை. முன்னாள்

> சோவியத் நாடுகளான

> உஸ்பெகிஸ்தான்

> மற்றும் கஜகிஸ்தான்

> ஆகிய நாடுகளை

> எல்லைகளாகக்

> கொண்டுள்ள இந்த ஆரல்

> கடல், ஒரு காலத்தில் 67

> ஆயிரத்து 339

> சதுர கி.மீ. பரப்பளவைக்

> கொண்டதாக இருந்தது.

> நீர் மேலாண்மை பற்றி

> ஆய்வு

> செய்பவர்களும்,

> பேசுபவர்களும் இதைக்

> கணக்கில் எடுத்துக்

> கொள்ளாமல்

> இருப்பது, அவர்களின்

> கருத்தை முழுமை பெறச்

> செய்யாது என்ற

> அளவுக்கு

> இந்தப்பிரச்சனை

> தாக்கம்

> ஏற்படுத்தியுள்ளது.

>

> ஒவ்வொரு ஆண்டும் 31

> முதல் 35 அங்குலங்கள்

> வரை ஆரல் கடல் மட்டம்

> குறைந்துகொண்டே

> போயுள்ளது. இதன்

> தாக்கத்தை ஒவ்வொரு

> பத்தாண்டு

> காலத்திலும்

> எடுக்கப்பட்ட

> புகைப்படங்கள்

> காட்டுகின்றன. இதன்

> பாதிப்பு

> பற்றி ஆராய

> ஹெலிகாப்டரில் பயணம்

> செய்து பார்வையிட்ட

> ஐ.நா.சபை

> பொதுச்செயலாளர் பான்

> கி மூன், இந்த கடல்

> வற்றிப் போகும்

> பிரச்சனையைத்

> தீர்க்க அனைத்து

> மத்திய ஆசிய நாடுகளின்

> தலைவர்களும் இணைந்து

> செயல்பட

> வேண்டும் என்று

> வேண்டுகோள்

> விடுத்தார். ஆரல்

> கடலுக்கு ஏற்பட்டுள்ள

> கதிதான் உலகிலேயே

> பெரிய அளவில்

> நிகழ்ந்துள்ள

> சுற்றுச்சூழல்

> பேரழிவாகும்.

> பெரும் அதிர்ச்சியை

> ஏற்படுத்தும்

> அளவுக்கு பாதிப்பு

> ஏற்பட்டுள்ளது.

>

> அனைத்து தலைவர்களும்

> ஒன்றாக அமர்ந்து

> தங்களுக்குள்

> இருக்கும்

> வேறுபாடுகளை

> மறந்துவிட்டு, இந்த

> சுற்றுச்சூழல்

> பேரழிவைத் தடுக்க

> வேண்டும் என்று

> கடுமையான விமர்சனத்தை

> அவர் முன்வைத்தார்.

>

> உஸ்பெகிஸ்தான்

> மற்றும் கஜகிஸ்தான்

> ஆகிய நாடுகள்

> மட்டுமல்லாமல்,

> தஜிகிஸ்தான் போன்ற

> நாடுகளும் தண்ணீர்ப்

> பிரச்சனையை எழுப்பி

> வருகின்றன.

> நீரை எவ்வாறு



> பங்கிட்டுக் கொள்வது



> என்பதைத் தீர்வு



> காணுவதிலேயே இந்த



> நாடுகள் கவனம்



> செலுத்திக்



> கொண்டிருக்கின்றன.

> ஆனால் இருப்பதும்

> போகப்போகிறது

> என்பதைத்தான் பான் கி

> மூன் சுட்டிக்

> காட்டியுள்ளார்.

> தற்போது தண்ணீர்



> இல்லாமல் வெறும் மணற்



> பகுதியாக கணிசமான ஆரல்



> கடற்பரப்பு



> மாறியுள்ளது.

>

> அந்தப் பகுதியில்

> உருவாகும் மணற்காற்று

> வடக்கில் டென்மார்க்,



> ஸ்வீடன்,



> பின்லாந்து ஆகிய



> நாடுகள் வரையிலும்,



> கிழக்கில் ஜப்பான்



> வரையிலும் மணலை



> அள்ளிக் கொண்டு



> செல்கிறது என்று

> வல்லுநர்கள்

> கூறுகிறார்கள்.

>

> புதிது, புதிதாக

> ஏற்கெனவே பல்வேறு

> நோய்கள் உருவாகிக்

> கொண்டிருக்கும்

> சூழலில் இந்த மணற்

> காற்றும் மக்களை

> பாதிக்கிறது.

> வெப்பமயமாதல் பற்றிப்

> பரந்த மேடையில்

> விவாதம் செய்து

> கொண்டிருக்கும்

> வேளையில்,

> இப்போதைக்கு,

> இருக்கும் நீரை எப்படி

> சரியான முறையில்

> பயன்படுத்தலாம்

> என்பது பற்றிய

> விவாதமும் அவசியம்

> என்று நீர் மேலாண்மை

> வல்லுநர்கள்

> கூறுகிறார்கள்.

> இந்தியா உள்ளிட்ட

> பல்வேறு நாடுகள்,

> இருக்கும் நதிகளை

> இணைப்பது, திருப்பி

> விடுவது ஆகியவை

> தண்ணீர்ப்

> பிரச்சனையைத்

> தீர்க்கும் என்று

> ஆலோசனை

> நடத்திக்

> கொண்டிருக்கின்றன.

> குறுகிய

> காலத்திட்டமாக

> இத்தகைய ஆலோசனை

> நடத்தாமல், ஆரல்

> கடலுக்கு ஏற்பட்ட

> கதியை கருத்தில்

> கொண்டு நீண்டகாலத்

> திட்டத்திற்கு

> விவாதங்களை நடத்துவதே

> பூமிப்பந்தைக்

> காப்பாற்ற உதவும்

> என்பது அவர்களின்

> கருத்தாக இருக்கிறது.

No comments:

Post a Comment