வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) குழுமத்தில் நண்பர் சீ.ந.ராஜா எடுத்துவைத்த தமிழ்நாட்டு பழமொழிகள்:
ஒரு ஆவணச் சேமிப்பின் எண்ணத்தில் இங்கு பதிகிறேன்.
தமிழ்நாட்டுப் பழமொழிகள்
அ
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
ஆ
ஆடிப்பட்டம் தேடி விதை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
ஆறுவது சினம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலை விழுது தாங்கியது போல.
ஆடு பகை குட்டி உறவா?
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
ஆரம்பத்தில் சூரத்துவம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
இ
இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
இளமையில் கல்.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
இளமையில் கல். முதுமையில் காக்கும்.
இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.
ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
உ
உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
ஊ
ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
எ
எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிரே வந்த நாயை அடிச்சானாம்.
எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
எண்ணம்போல் வாழ்வு.
எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
ஏ
ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஐ
ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
ஒ
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
ஒழுக்கம் விழுப்பம் தரும்.
ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
ஒத்தடம் அரை வைத்தியம்.
ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
ஓ
ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
ஓடிப் பழகிய கால் நிற்காது.
ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.
க
கண்ணுக்கு இமை பகையா?
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
கடுங்காற்று மழைக்கூட்டும்.
கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
கல்வி விரும்பு.
கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
கணக்கு எழுதாதன் நிலைமை.
கழுதை புரண்ட இடம் மாதிரி.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
கடலில் கரைத்த பெருங்காயம் போல.
கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
கார்த்திகை கன மழை.
கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
கார்த்திகை கண்டு களம் இடு.
கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
காணிச் சோம்பல் கோடி நட்டம்.
காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி
கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
கிட்டப் போயின் முட்டப் பகை.
கிட்டாதாயின் வெட்டென மற.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ
கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு
குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
குருடனுக்கு ஒரே மதி.
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
குதிரையும் கழுதையும் ஒன்றா?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குடி குடியைக் கெடுக்கும்.
குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கூழானாலும் குளித்துக் குடி.
கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
கூலிப் படை வெட்டுமா?
கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ
கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
கெடுவான் கேடு நினைப்பான்.
கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை
கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
கை பட்டால் கண்ணாடி.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ
கொடிக்கு காய் பாரமா?
கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ
கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
கோமளவல்லிக்கு ஒரு மொழி
கோளாறுகாரிக்குப் பல மொழி
கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ
கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
ச
சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி
சிறுதுளி பெருவெள்ளம்.
சிறு புண்ணையும், ஏழை உறவினனையும் அலட்சியம் செய்யாதே.
சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
சித்திரை எள்ளைச்சிதறி விதை.
சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
சித்திரை மழை செல்ல மழை.
சீ
சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு
சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
சுக்கைப் போல மருந்தில்லை.
சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
சுத்தம் சோறு போடும்.
சுற்றம் சூழ வாழ்
சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ
சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
செ
செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே
சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ
சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
சோம்பித் திரியேல.
சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?
த
தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை கண்டது யாரு?
தண்ணீரே உணவுகளின் அரசன்.
தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
மனிதனுக்கச் சோதனை பெண்!
தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
தண்ணீரில் அடி பிடிக்கிறது.
தலை பகை, வால் உறவா?
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.
தலைக்குத் தலை பெரிய தனம்.
தன் தப்பு பிறருக்குச் சத்து
தன் உயிர்போல் மண் உயிர் நினை.
தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
தன் கையே தனக்கு உதவி.
தர்மம் தலை காக்கும்.
தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ
தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து
துறவிக்கு வேந்தன் துரும்பு.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
தூங்காதவனே நீங்காதவன்.
தூரமிருந்தால் சேர உறவு.
தெ
தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
தையல் சொல் கேளேல்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
ப
பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
பணம் பத்தும் செய்யும்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பணம் உள்ளவனுக்கு அச்சம்;
பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
பல் போனால் சொல் போச்சு.
பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
பங்குனி மாதம் பதர் கொள்.
பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
படுக்க படுக்க பாயும் பகை.
பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
பணம் பாதாளம் வரை பாயும்.
பா
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
பிச்சை புகினும் கற்கை நன்றே!
பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
பொறுமை கடலினும் பெரிது.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா.
ந
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
நன்றி மறவேல்.
நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
நன்மைக்கு நன்மை செய்
தீமைக்கு நன்மையே செய்
நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
நாளை என்பது நட்டாற்று ஓடம்.
நாளை என்று ஒருநாள் உண்டா?
நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
நாளும் அதிகாலையில் நீராடு.
நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
நீலிக்கு கண்ணீர் இமையிலே.
நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ
நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ம
மனம் போல வாழ்வு
மனம் ஒரு குரங்கு
மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
மனைவி வீட்டின் ஆபரணம்.
மனைவி சொல்லே மந்திரம்.
மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
மனித நேயம் வளர்ப்பதே மதம்.
மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
மதியாதார் வாசல் மிதியாதே!
மனசாட்சியை ஏமாற்றாதே!
மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
மந்திரம் கால்; மதி முக்கால்.
மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ
மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு
முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
முன் வைத்த காலை பின் வைக்காதே!
முயன்றால் முடியாதது இல்லை.
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி திருவினையாக்கும்.
மூ
மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை
மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
வ
வட்டியோடு முதலும் போச்சு.
வளைகிற முள் நுழையாது.
வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
வண்டி வந்தால் வழி உண்டாகும்.
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா
வாய் உள்ளவன் உள்ளே.
வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
கடந்த காலம் ஒரு கனவு
வருங்காலம் ஒரு பெருமூச்சு
வாய் அரை வைத்தியன்.
வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி
வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
விரலுக்கேற்ற வீக்கம்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ
வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ
வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே
வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்
நன்றி...
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
No comments:
Post a Comment