Tuesday, March 16, 2010

ஈடேற்றம் பெற இறையச்சதின் அவசியம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...


ஈடேற்றம் பெற இறையச்சதின் அவசியம்!

வேகமான இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். மனித வாழ்கையின் முழு பிரச்சனைகளுக்கும் இஸ்லாமே தீர்வு! என்ற நிலை எல்லா தரப்பு மக்ககளிடமும் ஏற்பட்டுள்ளதையும் பிரச்சனைகளை தீர்க்க அல்குர்ஆனும், அஹாதிஸ்களுமே போதிய ஆதாரமாகும். வேறு மூலங்கள் தேவையில்லை என்பதை மக்கள் உணர துவங்கியுள்ளார்கள். அறிவுப்பூர்வமான சட்டதிட்டங்களை கொடுத்து மனிதனை மேன்மைப்படுத்தும் இஸ்லாமிய கருவூலங்கள் ஏனோ கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களிடம் கொடுக்கப்படவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் மாறி வருகிறது. தெளிந்த கண்ணாடியாக இருந்து இஸ்லாம் மீது படிந்த தூசுகள் அகற்றப்பட்டு அந்த கண்ணாடி ஒளிவீச துவங்கியுள்ளது. அறிவை தேடி அலையும் மனிதனுக்கு அவன் தேவைக்கு அதிகமான அதேசமயம் அவசியமான அறிவைப் புகட்டக் கூடிய கலாச்சலையான அல்குர்ஆன், அஹாதீஸ்கள் சிந்தனைக்கு விருந்தாக அறியாமை மூட நோய்களுக்கு மருந்தாக உலா வர துவங்கியுள்ளன.


இஸ்லாத்தின் மூல ஆதாரங்களை மக்கள் எளிதாகப் புரிந்துக்கொள்ளும் வகையில் எந்த அளவிற்கு இலகுபடுத்திக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கான முயற்சிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க மிக முக்கியமாக இஸ்லாம் மனிதனிடம் எதை போதிக்கிறது? எதை விரும்பிகிநது? என்பது மக்களுக்கு எடுத்துக்காட்டுவது அவசியமாகும். இதை சிந்தனையில் நிறுத்தி இறைமறையையும் நபிமொழிகளையும் அணுகுவோமேயானால் மனித வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக ஆறு அம்சங்களை இஸ்லாம் கூறுவதை காணலாம்.

அ) மனிதனிடம் எதிர்பார்க்கப்படும் தக்வா -இறையச்சம்

ஆ) தக்வா (இறையச்சம்) விற்கு பிறகு அவன் இணைந்து கொள்ள வேண்டிய பேரியக்கம்.


இ) அந்த இயக்கத்திற்குட்பட்ட சட்டங்கள் மற்றும் திட்டங்கள்.

ஈ) அவன் இணைந்த இயக்கம் அவனுக்காக தெனிவுபடுத்தும் இருவழிகள் 1) இறை நேசவழி 2)'தாகூத்' தீயவழி

உ) தக்வா (இறையச்சதை)வை நிராகரிக்கும் மனிதறிவுகள் தொடுக்கும் கேள்விகளும். அதற்கான பதிலுரைகளும் அடங்கியுள்ளன்.

ஊ) பொதுப்படையான அறிவுரைகள்.

இந்த ஆறு அடிப்படைகளையும் சந்தேகமின்றி உணர்வது அவசியமாகும்.


தலைமை தேவை இதுவே!


மனிதன் தன்னை தானே உருவாக்கிக் கொள்ளவில்லை அவ்வாறு உருவாக்கிக் கொள்ளவும் முடியாது. ஏதோ ஒரு நிலையிலேயே அவன் உருவாக்கப்படுகிறான். இப்படி உருவாக்கப்பட்ட மனிதன் நாளடைவு வளர்ச்சியில் அவன் மனம் விரும்பும் ஏதாவது ஒரு கடவுள் சக்திக்கு தன்னை அடிமைபடுத்திக்கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு. ஆனாலும் அவன் தேர்ந்தெடுக்கும் கடவுள் சக்தியை அவன் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து பார்ப்பது நலம்.


கடவுள் சக்தி என்பது அறிவுக்கு அப்பார்பட்டது. உணர்வுக்கு கட்டுப்பட்டது. எனவே அறிவை கொண்டு மட்டும் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று ஒரு சிலர் கூறினாலும் அதை சரியாக அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது உண்மை

கடவுளுடைய உருவை, அமைப்பை, தோற்றத்தை, வளர்ச்சியை, தற்கால நிலையை இதுபோன்ற விஷயங்களை தான அறிவை கொண்டு நிர்மாணிக்க முடியாது. ஆனால் கடவுள் இருக்கிறான் என்பதை அறிவைக் கொண்டு நிற்ணயித்து விடலாம்.

ஒரு மையப் பொருள் இல்லாமல் எந்த வேலையும் இந்த உலகில் நடக்காத என்பது திட்டவட்டமாக உணர்த்தப்பட்ட ஒன்று. விதைகள் இல்லாமல் மரத்தையோ, சுவாசம் இல்லாமல் மனிதனையோ வளர்க்கவும், இயக்க - இயங்கவும் முடியாது. இதுவே மெய்ப்பொருள் எனப்படும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு மெய்ப்பாருள் இருக்கும் போது இவையனைத்தையும் உள்ளடக்கம் செய்த ஒரு மெய்ப் பெருள் இருக்கிறது. இருந்தேயாக வேண்டும் என்பதை நம் அறிவு ஒப்புக் கொள்கிறது. அந்த மைய்யப் பொருளையே கடவுள், இறைவன் என்று அழைக்கிறோம். இந்நிலையில் சிலவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் நாம் நமது இறை கொள்கையை திடப்படுத்திக் கொள்ள முடியும்.


இங்குதான் பகுத்தறிவு தோல்வியை தழுவுகிறது. கடவுளின் தோற்றம், வளர்ச்சியை நாம் தெரிந்துக் கொள்வதால் மனித வாழ்க்கைக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை . மாறாக அந்த கடவுள் அல்லது இறைவன் நிர்ணயம் செய்து அந்த வழியை பின்பற்றி நடப்பதே நமது வாழ்க்கையை சரியான வழியில் செப்பனிடுவதாகும்.

இதற்கு ஓர் உதார்ணம் கூறலாம். 'மாவிதை' யை எடுத்துக் கொள்வோம்!


பகுத்தறிவு மீது கனத்த நம்பிக்கையுள்ள ஒருவன் அந்த விதையை கையில் எடுத்துக் கொண்டு 'இது' எப்படி மரமாகிறது இந்த விதைக்குள் இது பெருத்த மரமாக வளர்வதற்குரிய அறிகுறிகள் இருக்கின்றனவா? இலைகளின் நீளம் , பூக்களின் வீரியம் , காய்களின் எண்ணிக்கை, பழங்களின் கனம் போன்றவை எந்த அளவு உள்ளது? என்று சிந்திக்கத் துவங்கினால் அவன் ஆயுட்காலம் முடிந்தாலும் விடைகான முடியாது "மாவிதை" யை இரண்டாக பிளந்து அதன் உள்ளேயுள்ள பொருள்களை ஆராய்ச்சி செய்தாலும் அவன் எண்ணத்தில் எழும் கேள்விகளுக்கு தெளிவு ஏற்படாது. இப்படிப்பட்ட பகுத்தறிவு அவனை 'புத்தி சுவாதீனன்' என்ற நிலைக்குதான் கொண்டு போய்விடும். 'எனது பகுத்தறிவு வாதமான சந்தேகங்களுக்கு விடை கிடைத்தால்தான் இதை நடுவேன்' என்று அவன் பிடிவாதம் பிடித்தால் அந்த விதையின் மூலம் அவனுக்கு எவ்வித லாபமும் கிடைக்காது என்பது திண்ணம்.

அதே சமயம் வேறொரு பகுத்தறிவுவாதி இதே'மாவிதை' யை எடுத்து அதை எப்படி புதைக்க வேண்டும் 'எந்த அளவிற்கு தண்ணீர் விட வேண்டும் அது முளைத்த பின் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று சிந்திக்கிறான்' நன்கு சிந்தித்து அதுபடி செயலாற்றுகிறான்' விதைக்கு உதவக்கூடிய இவனது சிந்தனையின் விளைவால் பிறகு நல்ல மகசூலை பெறலாம் ' இப்படித்தான் பகுத்தறிவின் எதார்த்ததை பிரித்தறிய வேண்டும்'

பகுத்தறிவை கொண்டு இறைவனின் தோற்றம் ' வளர்ச்சி' தற்கால சூழ்நிலையை அறிய நாடுபவன் ' மாவிதையை' கையில் வைத்துக் கொண்டு ' மலர் ' இலை' காய் ' கனி ஆகியவற்றைப்பற்றி சிந்திப்பவன் போலாவான்' அவன் தன் ஈயுள் முழுவதும் இதுபற்றி தெரிந்துக் கொள்ள நாடினாலும் எப்படி அவனுடைய முயற்சிகள் பூஜ்ஜியமாக ஆகி விடுமோ அதேபோன்று தான் இறை தோற்றம்' வளர்ச்சி மற்ற நிலைகளை ப் பற்றி சிந்திப்பதுமாகும் ' அங்கு பகுத்தறிவு' புத்தி சுவாதீனன்' என்ற நிலையை தான் ஏற்படுத்தும்'


அதே சமயம் இறைகட்டளையை ஏற்று செயல்படுவது என்பது மாவிதையை புதைத்து தண்ணீர் ஊற்றி' வளர்ந்து இறுதியில் சிறந்த லாபத்தை ஈட்டுவதற்கு ஒப்பாகும் இங்கு தான் பகுத்தறிவு அதன் சரியான பாதையில் செல்கிறது என்பதை உணரலாம் அதனால் தான் இஸ்லாம் இறைதோற்றத்திற்கு முக்கியத்தும் கொடுக்காமல் இறைசட்டங்களுக்கும்' திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது' இறை தோற்றம் பற்றிய சிந்தனை' தாகூத்' திய சிந்தனையாகும்' என இறை தூதரால் எச்சரிக்கை செய்யப்பட்டது'

இறை வேதத்தை நாம் ஆராய்வோமேயானால் இறைவனின் கண்ணியம்' அவனின் ஆற்றல்' அவன் மேற் கொண்டுள்ள பணி' அவனின் பண்புகள்' அவனது ஆக்ரோஷ தண்டனைகள் ஆகியவற்றைப் பற்றியே திரும்ப திரும்ப வருவதை காணலாம்' இதை விடுத்து அவனின் பிறப்பு' வளர்ச்சி நிலைகள் பற்றிய ஆக்கங்களை குர் ஆனில் எங்கும் காணமுடியாது'

தேவையான இடங்களில் அவனுக்கு நிகராக எவருமே எதுவுமே இல்லை theve is hone like unto hem என ஒட்டுமொத்தமாக உதாரணங்கள்' கற்பனைகள் அனைத்திற்கும் பதிலாளிக்கப்பட்டு விட்டன எனவே கடவுள் சத்தி அறிவுக்கு உட்பட்டது தான் அறிவை செலுத்த வேண்டிய முறையில் செலுத்தினால்'

இந்த விளக்கத்தின் மூலம் கடவுளின் தோற்றம்' வளர்ச்சிப் பற்றிய சிந்தனையில் உள்ள கோளாறுகளையும்' அவன் கட்டளைகளை ஏற்று நடப்பதால் ஏற்படும் நன்மைகளைம் 'ஓரளவு புரிந்திருப்பீர்கள்'

இப்போது இறைவன் நம்மிடம் எதிர்பாப்பது என்ன? என்பதை காணவேண்டும்'
மனிதனிடம் '' தலைமைத் தேவையாக'' இறைவன் ஒன்றை எதிர்பார்க்கிறான்' அது ' இத்தகுல்லாஹ்' அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்பதேயாகும்' குர்ஆனின் மைய கருத்து அது மனிதனுக்கு போதிக்கும் போதனைகளில் தலைமையானது' இத்தகுல்லாஹ்' revenence god என்பதேயாகும்' இதை மனிதன் பெற்றுவிட்டால் இவன் சுபீட்சத்திற்கு வழி வகுத்துக் கொண்டான் என்பது பொருளாகும்' இந்த இறை அச்சத்திற்கு ஒரு அடிப்படையை இறைவன் கூறுகிறான் 'எதற்காக இறையச்சம் வேண்டும் ?

இந்த இறையச்சம் நன்றிக் கடனாகவோ அல்லது கூலியாகவே என்றால் இரண்டுமேயில்லை. மாறாக அதான் மனித ஈடேற்றத்திற்குரிய அளவுகோல்.


இறைவன் கூறுகிறான்:


மனித இனமே! உங்கள் 'ரப்' புக்கு பயந்து நடவுங்கள் அவன் தான் உங்கள் அனைவரையும் ஒரேயொரு ஆத்மாவிலிருந்து படைத்தான் . அந்த ஆத்மாவிலிருந்தே அதற்கு வாழ்க்கைத் துணையையும் வெளிபடுத்தினான்' அவ்விருவரிலிருந்து எண்ணில்லா ஆண்களையும் பெண்களையும் பிரபஞ்ச பெருவெளியில் பரவ செய்தான். இதன் காரணமாக' இத்தகுல்லாஹ்' அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்' (அல் குர் ஆன் 4:1)

மனிதன் 'பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம்' என்று நிலையில் இருக்கிறான் ' இது முற்றிலும் அறியாமையாகும்' எதற்காக பிறந்தோம்' ஏன் பிறந்தோம்? பிறப்பின் நோக்கம், முடிவு, இடைப்பட்ட வாழ்க்கையின் அவசியம் போன்றவற்றை சிந்திக்கும் மக்களுக்கு ' இத்தகுல்லாஹ்'' வின் பொருள் புரிந்து விடும்.

' இறைவனுக்கு அஞ்சுங்கள்' எப்படி அஞ்ச வேண்டும்' குறிப்பிட்ட வணக்க முறையில் மட்டுமா ? இல்லை

வேறு கோணத்தில் அஞ்சவேண்டும்' அதாவது அவனுக்கு அஞ்சுவதே வாழ்க்கையாக இருக்க வேண்டும்' இதை தான் மனிதனிடம் இறைவன் தலமைத் தேவையாக எதிர்பார்க்கிறான்' நாம் செய்யும் செயல் ஒவ்வென்றிலும் நமது வழிக்காட்டியாக' இத்தகுல்லாஹ்' இருக்க வேண்டும்' இந்நிலை ஏற்பட்டு விட்டால் பிறகு உலகம் அமைதியைப் பெற்று விடும்'

புரிந்துக் கொள்ள'


இறையச்சம் மிக்க ஒருவன் பெறும் பதவி வகிக்கிறான் அவனை கொண்டு முடிய வேண்டிய வேலைக்காக சிலர் அவனை அணுகுகிறார்கள்' இவர்கள் நாடும் வேலைக்காக அவன் அவர்களிடம்' லஞ்சம்' கேட்டு கை நீட்டமாட்டான்' ஏனெனில் உழைக்காமல் வரும் பணம் பற்றிய அச்சம் அவன் மனதில் குடி கொள்ளும்' இறை தண்டனைக்கு அஞ்சுவான் ' இந்த ஒரு உதாரணத்தைக் கொண்ட இன்று பிரபஞ்சத்தில் நடக்கும் சரி நிலை' தவறு நிலைகளை கணித்து விடலாம்' எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் மனிதன் கண்ணியவான் ஆவதற்கு இறையச்சமே பிரதானமாக இருக்கிறது.

எவன் தூய்மையான அச்சமுள்ளவனாக இருக்கிறனோ அவன் தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன் (அல்குர்ஆன் 49: 13)

மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கை வெகு அழகாக ஆக்கப்பட்டுள்ளது' திரும்பும் திசையெல்லாம் இன்பமயமான இடங்கள் இயற்கை, பெண்கள், பொன் ஆபரணங்கள் மற்றும் விவசாயம், மிருகங்கள் இவைகளனைத்தையும் மனிதன் நேசிக்கிறான். இவைகளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொள்கிறான். அவைகளுக்கு மத்தியில் உல்லாசமாக இருக்க வேண்டும் என ஆவல் கொள்கிறான் ' இஸ்லாமும் இதை கூடாது என்று சொல்லவில்லை' அனுபவிக்க சொல்லி வரவேற்கிறது' அதே சமயம் அதை விட சிறந்தததையும் குர் ஆன் எடுத்தோதுகிறது'

பெண்கள், ஆண்கள், பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்டக் குதிரைகள்' ஏனைய கால் நடைகள்' சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள ஆசை மனிதனுக்கு அழகாகப்பட்டுள்ளது இவைகளைல்லாம் அழிய போகும் உலக வாழ்வின் சுக பொருள்களாகும்' அல்லாஹ்விடம் தங்குமிடம் உண்டு' இவற்றைவிட சிறந்த, மேன்னையான செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ? என்று நபியே நீர் கேளும்' அதுதான் தக்வா. இறையச்சத்தின் மூலம் அவர்களுடைய இறைவனிடத்தில் சுகன சோலைகள் உண்டு' அச்சோலைகளுக்குக் கீழ் வற்றா நீரருவிகள் ஓடிக் கொண்டே இருக்கும்' இத்தகுல்லாஹ்வை திடமாக ஏற்றுக் செயலாற்றியவர்களுக்கு தூய துணைவர்களும் உண்டு (அல்குர்ஆன் 3:14,15)


இப்படி இறைவன் எச்செயலிலும் இறையச்சத்தையே பிரதானமாக எடுக்க சொல்கிறான். இறைபயம் அற்ற நிலையை இந்த உலகம் முழுமையாக ஏற்றுக் கொண்டால் பிறகு உலகம் சின்னாபின்னாப் படுத்தப்பட்டு விடும்


இன்று பிரபஞ்சமெங்கும் நடக்கும் வன் செயல்களுக்கு காரணம் தன்னை படைத்தவன் பற்றிய அறியாமையும் அவனிடம் பெறப்போகும் கொடூரமான தண்டனையையும் உணர திருப்பதேயாகும். மனிதனின் தன் மீது,தன் பலத்தின் மீது தன் குலத்தீன் மீது ,தன் சொத்தின் மீது, கொண்ட ஆர்வம் அவனை இறையச்சமற்ற நிலைக்கு ஆக்கிவிடுகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல. மானிடப் பெருக்கத்தின் ஆரம்ப முதலே நடக்க துவங்கிவிட்டது. இறைபயம் இல்லாத மனிதனின் கர்வநிலை அவனை எந்த செயலையும் செய்து காட்ட தூண்டி விடுகிறது. தன் கூடப் பிறந்த சகோதரணையே தன் ரத்தத்தையே கொலை செய்யும் அளவிற்கு மனிதன் வந்து விடுகிறான்.

இறையச்சமில்லாததால் ஏற்பட்ட கொலை நிகழ்ச்சி இறையச்சமிருந்ததால் அதை மன நிறைவோடு ஏற்றக் கொண்ட நிகழ்ச்சி இன்றைய தக்வாதாரிகளுக்கு தக்க ஆதாரமாகும்.

Thanks,
Madukkur Thawheed Charitable Trust
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை


No comments:

Post a Comment