Tuesday, June 22, 2010
தமிழக அரசு
தமிழக அரசு
இந்திய அரசியலமைப்பு
அடிப்படை உரிமைகள்
----------------------------------------------------------
செயலாட்சி
ஆளுநர்
முதல்வர்
அமைச்சரவை
--------------------------------------------------------------------------------
சட்டமன்றம்
பேரவைத் தலைவர்
எதிர்கட்சித் தலைவர்
--------------------------------------------------------------------------------
மாநகராட்சி மன்றம்
மன்றப் பேரவை
மேயர்
--------------------------------------------------------------------------------
நகராட்சி மன்றம்
நகராட்சி மன்றத் தலைவர்
--------------------------------------------------------------------------------
ஊராட்சி மன்றம்
ஊராட்சி மன்றத் தலைவர்
-------------------------------------------------------------------------------
பேரூராட்சி மன்றம்
பேரூராட்சி மன்றத் தலைவர்
--------------------------------------------------------------------------------
நீதிமுறைமை
சென்னை உயர் நீதிமன்றம்
சார் நிலை நீதிமன்றங்கள்
மதுரைக் கிளை உயர் நீதிமன்றம்
புதுவை நீதிமன்றங்கள்
தலைமை நீதிபதி
அரசு தலைமை வழக்குரைஞர்
--------------------------------------------------------------------------------
தேர்தல்கள்
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்
தலைமைத் தேர்தல் அதிகாரி
உள்ளாட்சித் தேர்தல்கள்
தமிழகத் தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையர்
--------------------------------------------------------------------------------
தமிழக அரசியல்
தேசியக் கட்சிகள்
தமிழகக் கட்சிகள்
--------------------------------------------------------------------------------
தமிழகக் கூட்டணி
இடது முன்னணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
--------------------------------------------------------------------------------
உள்ளாட்சிகள்
உள்ளாட்சி மன்றங்கள்
மாநகராட்சிகள்
நகராட்சிகள்
சிறப்பு நிலை நகராட்சிகள்
தேர்வு நிலை நகராட்சிகள்
முதல் நிலை நகராட்சிகள்
இரண்டாம் நிலை நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊராட்சிகள்
--------------------------------------------------------------------------------
தமிழகத் தேர்தல்கள்
நேரடித் தேர்தல்
தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.
--------------------------------------------------------------------------------
மறைமுகத் தேர்தல்
இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.
1 தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நட்த்தப்பெரும் தேர்தல்கள்
2 மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள்
தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நட்த்தப்பெரும் தேர்தல்கள்
நேரடித் தேர்தல்கள்
தேர்தல்கள் தொகுதிகள்
1 சட்டப் பேரவை 234
2 மக்களவை 39
மறைமுகத் தேர்தல்கள்
தேர்தல்கள் தொகுதிகள் / இருக்கை
1 மாநிலங்களவை 18
2 குடியரசுத் தலைவர் 1
3 குடியரசுத் துணைத் தலைவர் 1
--------------------------------------------------------------------------------
மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள்
உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள்[2]
எண் அலுவலகம் இருக்கைகள் / அலுவலகம்
1 மாநகராட்சி மேயர் 6 (தற்பொழுது 10)
2 மாநகராட்சி உறுப்பினர்கள்
(கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்) 474
3 நகராட்சித் தலைவர்கள் 102
4 நகராட்சி உறுப்பினர்கள் 3,392
5 மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள் 50
6 மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள் 969
7 மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள் 656
8 ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள் 6,570
9 பேரூராட்சித் தலைவர்கள் 561
10 பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள் 6,825
11 கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,618
12 கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள் 97,458
--------------------------------------------------------------------------------
உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்கள்[2]
1 நகராட்சி அமைப்புகள்
2 மாநகர மேயர் மற்றும் துணை மேயர்
3 நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
4 மூன்றாம் படி நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
5 பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
6 சட்டப்படித் தேவைப்படக்கூடிய நிரந்தர உறுப்பினர்க்ள
--------------------------------------------------------------------------------
thanks விக்கிபீடியா
Wednesday, June 16, 2010
ஆப்கானிஸ்தான் கனிம புதையல்
உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!
உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ''மோப்பம் பிடித்தவர்கள்'' அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.
"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.'' - அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ். உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ''மோப்பம் பிடித்தவர்கள்'' அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் மிகப்பெரும் அளவில் கண்டுபிடித்துள்ளனர்.
இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு
சொல்லப் பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும். ''இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்'' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம். இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.
ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட்எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம். மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும்
என்றார்.
இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?
அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம். சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.
ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத்தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!. இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ''பில்லியன் டாலர் கேள்வி''!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ''ட்ரில்லியன் டாலர் கேள்வி!''.
ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது. இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப்
பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில்,
இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியல் அறிஞர்கள். இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படி யெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க
ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர்
அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப்பார்த்தால், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா'' அல்லது ''தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா'' என்பது தெரியவில்லை.
உயிர்கொல்லிப் பூச்சிகள்
பூச்சியினங்களில் பல தம் வண்ணமயத் தோற்றத்தால் நம் மனத்தைக் கவர்கின்றன. ஆனால் அவற்றில் பல கடுமையான விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும், அவை உருவத்தில் சிறியதாகவும், அழகாகவும் இருந்தாலும் அவற்றின் விஷம் நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் அறிந்துகொண்டு, அதனை சிறுவர்களுக்கும் அறிவூட்டதல் மிக்க அவசியம்.சரி. இப்போது உலகின் 5 மிக ஆபத்தான பூச்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.
5. "டீட்ஸி / செட்ஸி" ஈ (Tsetse Fly):
ஆப்பிரிக்காவிலுள்ள இந்த இரத்தம் குடிக்கும் ஈ கடித்தால் முதலில் தொடர்ந்த தூக்கம், தலைவலி, காய்ச்சல் போன்றவை தோன்றி பிறகு அப்படியே விட்டால் கியாரண்டியாக மரணம் நோக்கிய பயணம்தான்.
4. ஆப்பிரிக்க இனத் தேனீ (Africanized Bee):
ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.
3. கொலைகாரத் தேள் (DeathStalker):
இந்தத் தேள் கொட்டினால் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மரணம் நேரிடும் அபாயம் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் விஷம், நீரிழிவு மற்றும் மூளைப் புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுவதுதான்!
2. கருவிதவைச் சிலந்தி (Black Widow Spider)
பாம்பை விட 15 மடங்கு கொடிய விஷத்தை தன் கொடுக்கில் கொண்டது இந்தச் சிலந்தி. இதன் உடலில் சிவப்பு வண்ண மணற்கடிகைக் குறியைக் காணலாம். இந்த வகைச் சிலந்திகளில் பெண்ணினம் ஆண் சிலந்தியுடன் கூடியிருந்து புணர்ச்சி செய்தபின் அந்த ஆணையே கொன்று தின்று விடுவதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. கூடிக் களித்தபின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடித் தப்பிக்கும் ஆண் சிலந்திகள் அதிஷ்டம் செய்தவை. ஆனால் கொஞ்சம் "கேரா"க சோம்பியிருந்தால் தன்னைவிட உருவத்தில் பெரியதும், விஷத்திலும் அதிகக் கடுமையும் கொண்ட பெண் பார்ட்னருக்கு ஆப்பிள் ஜூஸாக மாறவேண்டியதுதான்!
1.. மலேரியாக் கொசு (Anopheles Mosquito):
இந்தக் கொசுக்கள்தான் உலகில் மிக அதிகமான பேர்களைக் கொல்கின்றன. ஆண்டுக்கு 30 கோடி மக்களுக்கு மலேரியா, டெங்கு, யனைக்கால் போன்ற நோய்களை வாரி வழங்கி வருவது இந்த "துக்கினியூண்டு" கொசு வகைதான். என்னதான் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு நாம் அவற்றை அழிக்க முயற்சித்தாலும், இன்னும் முழுமையாக இந்தக் கொசுத் தொல்லையிலிருந்து மனிதன் மீள முடியவில்லை. இந்தப் போராட்டம் இவ்வுலகு உள்ள மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமோ என்று தோன்றுகிறது.
செய்தி உதவி: ஃபுல்கர், kichu.cyberbrahma.com
லேபிள்கள்:
insects,
killer,
venomous,
உயிர்க் கொல்லி,
பூச்சியினம்
Monday, June 14, 2010
சிவில் சர்வீசஸ் தேர்வு - ஓர் அறிமுகம்! (I.A.S)
இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.
அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.
சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்
சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:
1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)
2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)
3. இந்திய காவல் பணி (Indian Police Service)
4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')
5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')
6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')
7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')
8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A')
9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)
10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')
11. இந்தியக்குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service,Group 'A')
12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A')
13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')
14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force)
16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defence Estates Service, Group 'A')
17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')
18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)
19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)
20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)
21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)
22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'
23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B'
24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'
25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B
26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'
இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக் குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்
தேர்வுத் திட்டம்
சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)
2. பிரதானத்தேர்வு (Main Exam)
3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)
ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.
பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.
தேர்வு எழுத தகுதிகள்
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.
வயது வரம்பு:
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.
எத்தனை முறை தேர்வு எழுதலாம்?
நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.
பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.
விண்ணப்பித்தல்
ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.
முதனிலைத் தேர்வு (Preliminary Examination)
முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.
பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)
3. தாவரவியல் (Botany)
4. வேதியியல் (Chemistry)
5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)
6. வணிகவியல் (Commerce)
7. பொருளாதாரம் (Economics)
8. மின் பொறியியல்(Electrical Engineering)
9. புவியியல் (Geography)
10. புவியமைப்பியல் (Geology)
11. இந்திய வரலாறு (Indian History)
12. சட்டம் (Law)
13. கணிதம் (Mathematics))
14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
15. மருத்துவ அறிவியல் (Medical Science)
16. தத்துவம் (Philosophy)
17. இயற்பியல் (Physics)
18. அரசியல் அறிவியல்(Political Science)
19. உளவியல் (Psychology)
20. பொது நிர்வாகம் (Public administration)
21. சமூகவியல் (Sociology)
22. புள்ளியியல் (Statistics)
23. விலங்கியல் (Zoology)
போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.
பிரதானத்தேர்வு (Main Exam)
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.
பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது
* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி
(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)
இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்
* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.
பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)
3. மானிடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botany)
5. வேதியியல் (Chemistry)
6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)
8. பொருளாதாரம் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. புவியமைப்பியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (Law)
14. மேலாண்மை (Management)
15. கணிதம் (Mathematics)
16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical Science)
18. தத்துவம் (Philosophy)
19. இயற்பியல்(Physics)
20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)
21. உளவியல் (Psychology)
22. பொது நிர்வாகம்(Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
26. இலக்கியம் (Literature)
(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)
1. தமிழ் 2. ஆங்கிலம் 3. மலையாளம் 4. தெலுங்கு 5. கன்னடம் 6. இந்தி
7. மராத்தி 8. உருது 9. ஒரியா 10. சமஸ்கிருதம் 11. குஜராத்தி 12. வங்காளம்
13. பஞ்சாபி 14. நேப்பாளி 15. சிந்தி 16. மணிப்பூரி 17. காஷ்மீரி 18. கொங்கணி
19. பாலி 20. பெர்சியன் 21. அஸ்ஸாமி 22. அரபு 23. சீனம் 24. பிரெஞ்ச்
25. ஜெர்மனி 26. ரஷ்யன்
பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.
நேர்முகத்தேர்வு (Personality Test)
பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.
Thanks : பொது அறிவு உலகம்
Sunday, June 13, 2010
ஜாக்கி’கள் மூலம் வீட்டை அப்படியே தூக்கி உயர்த்தி கட்டும் அதிசய தொழில்நுட்பம்
சென்னை: மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 60 டன் எடை கொண்ட ஒரு அடுக்குமாடி வீட்டை பெயர்த்து, 260 "ஜாக்கி’கள் மூலம் அப்படியே தூக்கி, நான்கு அடி உயர்த்தும் புதிய கட்டட தொழில்நுட்ப பணிகள், தமிழகத்தில் முதல் முறையாக வேளச்சேரியில் நடந்து வருகிறது.
மழைக்காலம் என்றால் வேளச்சேரி, வெள்ளக் காடாகிவிடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ராமன் என்ற ஆடிட்டர் ஒருவர், நவீன தொழில்நுட்பம் மூலம் தனது வீட்டை பெயர்த்து, வாகனங்களுக்கு பயன்படுத்தும் "ஜாக்கி’கள் மூலம் நான்கு அடி உயரம் தூக்கி, கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ராமன் மனைவி லட்சுமி கூறியதாவது: நாங்கள் வேளச்சேரி, பேபி நகர், பட்டுக்கோட்டை முத்துக்குமாரசாமி சாலையில் 2001ம் ஆண்டு இடத்துடன் புதியதாக கட்டப்பட்ட வீட்டை வாங்கினோம். கீழ் தளம், மேல் தளம் 2,600 சதுர அடியில் கட்டப்பட்டது. குடிவந்த சில மாதங்களில் மழைக்காலம் துவங்கியது. அப்போது, வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கண்டு அதிர்ச்சியடைந்தோம். எங்கள் வீட்டிற்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். விமோசனம் கேட்டு மாநகராட்சியை அனுகினோம். பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள்; வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள்; கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் "பார்க்கிங்’ ஆக்கிவிடுங்கள் என தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
வீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது,"உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும்; உங்களுக்கு 40 சதவீதம்’ என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம். இறுதியில், என் கணவர் டில்லியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது, வீட்டை இடிக்காமல் பெயர்த்து, வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் "ஜாக்கி’களை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். அவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து நான்கு அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு லட்சுமி கூறினார்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் அரியானாவை சேர்ந்த அர்கேஷ் குமார் சவுகான் கூறுகையில்,""ஜாக்கி’கள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். முதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக ராமனின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 16ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளோம்’ என்றார்.
வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை: வேளச்சேரியில் உள்ள ராமன் வீட்டில் 16 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2,600 சதுர அடி, 60 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களின் இருபுறமும் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக "ஜாக்கி’கள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 "ஜாக்கி’கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான உயரத்திற்கு 16 பேரும் ஒரே நேரத்தில் "ஜாக்கி’களை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் செங்கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. மூன்று அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 225 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.80, ரூ.100 என வசூலிக்கின்றனர். ஒரு மாதத்திற்குள் வீட்டை உயர்த்தும் பணிகள் முடிக்கப்படுகின்றன.
source:dinamalar
முஸ்லீம்களின் பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு நடத்தும் முஸ்லீம்கள்
முஸ்லீம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களின் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்கள்
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்
2 மசூதிகளில் புகுந்து சுட்டனர்: 80 பேர் குண்டு பாய்ந்து பலி...
லாகூர், மே.29-
பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர்.
மசூதிகளில் நுழைந்தனர்
பாகிஸ்தானில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று லாகூர் நகரில் 2 மசூதிகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலி ஆனார்கள்.
லாகூரில் மாடல் டவுண், கர்கி சாகு ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை அகமதி பிரிவினரின் மசூதிகளில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.45 மணி அளவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் திடீரென்று தீவிரவாதிகள் அந்த மசூதிகளுக்குள் புகுந்தனர். அவர்களில் சிலர் உடலில் வெடிகுண்டு ஜாக்கெட்டுகளையும் அணிந்து இருந்தனர்.
தாக்குதல்
உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பாதுகாப்பு தேடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். சிலர் அங்குள்ள அறைகளுக்குள் சென்று பதுங்கினார்கள்.
இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் 2 மசூதிகளுக்கும் சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் பணயகைதிகளாக இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
80 பேர் பலி
தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடல் டவுண் மசூதி தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் ஒருவர் ஆவார்.
கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதல் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற டி.வி. நிருபர் ஒருவர் குண்டு காயம் அடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்தார். இதில் சில போலீசாரும் அடங்குவார்கள்.
தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சிலர் போலீசாரும் உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகளின் தலைகள்
மாடல் டவுண் மசூதியில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும், 2 பேர் காயத்துடன் பிடிபட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கர்கி சாகு பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதோடு, தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அவர்கள் பலியானதாகவும், துண்டாகி கிடந்த அவர்களுடைய தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தலைவர் சஜ்ஜத் புட்டா தெரிவித்தார்.
கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதலில் மட்டும் 40-க்கும் அதிகமான பேர் உயிர் இழந்ததாக மீட்புக்குழுவின் செய்தித்தொடர்பாளர் பாகிம் ஜகன்ஜெப் கூறினார்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.
source:dailythanthi
என் கருத்து
கடவுள் பெயரால் மற்றும் யாருடைய கடவுள் உண்மையானது மேலும் அதே கடவுளையே ஏற்றுகொண்டாலும் யாருடைய வழியில் வணங்கவேண்டும் என்னும் நிலைப்பாட்டால் இப்படி அறிவில்லாமல் செய்யும் செயலே தீவிரவாதம். தீவிரவாததிற்க்கு மதமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை மடத்தனமான மந்த புத்தி இருந்தால் போதும். இந்த அறிவிலிகள் செய்யும் செயல் கடவுள் இல்லை என்பதைவிட தேவை இல்லை என்னும் நிலைபாட்டிற்கு தள்ளவே செய்யும்.
Thursday, June 10, 2010
இந்தியா
இந்தியா (India), தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7000 கி.மீ. நீண்ட கடல் எல்லைக் கொண்டது . வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லையைப் பகிரிந்துக்கொண்டுள்ளது . இலங்கையும், மாலத்தீவும் இந்திய கிழக்கில் வங்காள விரிகுடாவையும், மேற்கில் அரபிக் கடலையும் தெற்கில்இந்தியப் பெருங்கடலையும் கொண்ட ஒரு தீபகற்பம் ஆகும்.
நூறுக் கோடி மக்கள்த் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின .பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றது. பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 , அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது
தலைநகரம் : புது தில்லி
பெரிய நகரம் : மும்பை (பம்பாய்) , : சென்னை (மதராஸ்)
ஆட்சி மொழி(கள்) : இந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் 21 ஏனைய மொழிகள்
அரசு கூட்டாட்சி : குடியரசு
குடியரசுத் தலைவர் : பிரதீபா பட்டீல்
பிரதமர் : மன்மோகன் சிங்
விடுதலை : ஐக்கிய இராச்சியத்திடமிருந்து பெற்றது ஆகஸ்ட் 15, 1947
பரப்பளவு : மொத்தம் 3,287,590 கிமீ² (7ஆவது) 1,269,346 சது. மை
நீர் : (%) 9.56
மக்கள்தொகை : - 2005 மதிப்பீடு 1,080,264,388 (2ஆவது)
2001 குடிமதிப்பு : 1,027,015,247
நாணயம்: ரூபாய் 1 (INR)
நேர வலயம் : இந்திய சீர்தர நேரம் : (ஒ.ச.நே.+5:30)
இணைய குறி : .in
தொலைபேசி : +91
மின்னழுத்தம்: 230 V
அலையெண்: 50 Hz
ஒரு ரூபாய் = 100 பைசா (Paise)
thanks to wikipedia
Subscribe to:
Posts (Atom)


























