Wednesday, June 2, 2010

உள்ள குமுறல்

இங்கே ஒரு  உள்ள குமுறல்  உங்களுக்கும் கேட்கட்டுமே
  


இடம்: துபாய் சர்வதேச விமான நிலையம் (International Airport)
நேரம்: இரவு 20:30

காட்சி  1

கொழும்பு வழியாக திருச்சி செல்லும் ஏர் லங்கா.. விமானத்துக்காக லக்கேஜ் ஸ்கேனிங் வரிசையில் நான் குடும்பத்துடன்... ஹேண்ட் பேக் தோளிலும் கையிலும் என்னிடம் என் மனைவியிடம் ஒரு கையில் பேக் மறு கையில் குழந்தை.. ஓடோடி வருகிறார் அந்த பிலிப்பினோ....பணியாளர்....வெயித் மேதம் ..ஐ ஹெல்ப் யூ.... (wait madam, i help you) என்று சொல்லிக் கொண்டே...என்னிடம் இருந்தும் என் மனைவியிடம் இருந்தும் பேக்கை வாங்கி ஸ்கேன் மெஷினுள் வைத்து மீதியுள்ள லக்கேஜ் எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்கிறார்... நான் நன்றி சொல்ல முயல்வதற்குள்....அவர் சொல்கிறார்...தேக்யூ சார்...தேக்யூ மேடம்!

காட்சி  2 போர்டிங்

போர்டிங் போடுவதற்காக நிற்கிறோம்....வெயிட் எல்லாம் சரியாக இருக்கிறது....ஒரு லக்கேஜ் மட்டும் 30 கிலோவிற்கு அதிகமாக இருக்கிறது...விமான விதிமுறைகள் படி.... நான் கொண்டு செல்ல முடியாது....அதனால் அந்த பேக்கிங் செய்யப்பட்ட லக்கேஜை பிரித்து வேறு ஒரு சிறிய பேக்கில் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது நேரம் 21:20 எனது விமான நேரம் 23:00....கைக்குழந்தையோடு மனைவி....ஒரு ஓரமாய் என்ன செய்வதென்றறியாமல் விழிக்கிறார்....எங்கிருந்தோ ஓடி வருகிறார் ஒரு பாகிஸ்தானி பட்டான்...க்யா... முஸ்கீலே சாப்... என்று எனக்குத் தெரிந்த அரை குறை இந்தியில் விளக்கியதை விளங்கிக் கொண்டு...என்னை போய் அருகில் இருக்கும் ஒரு டூட்டி ஃப்ரீ கடையில் சிறிய பேக் ஒன்று வாங்கிவரச் சொல்லி....விட்டு எனது பதிலுக்கு காத்திராமல் என்னுடைய லக்கேஜை... பிரிக்க ஆரம்பிக்கிறார்...! பிறகு...

நான் கொண்டு வந்த பேக்கிற்கு சில பொருட்களை மாற்றிவிட்டு.... பழைய பேக்கிங்கை சரியாக கட்ட எனக்கு உதவி செய்து விட்டு... அபி.. அச்சா ஹே சாப்..ன்னு சொல்றார்... நான் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய போது .....அல்லாஹ் ...கரீம் சாப் ந்னு சொல்லிட்டு... சிரித்துக்கொண்டே ஓடிவிட்டார் அந்த கூலித் தொழிலாளி!


காட்சி  3  பாஸ்போர்ட் கண்ட்ரோலில்

சுமார் 22:30 பாஸ்போர்ட் கண்ட்ரோலில் மிகப்பெரிய வரிசையில் நேரம் அதிகமாகிவிட்ட டென்சனில் நானும் என் மனைவியும் குழந்தையும்...அந்த வரிசையில்....எப்படியும் நேரம் ஆகிவிடுமே என்ற கவலை வேறு.....அப்போது அங்கே மேற்பார்வையில் ஈடு பட்டிருந்த அதிகாரி (அரபி)ஒருவர்....நாங்கள் கைக்குழந்தையோடு இருப்பதை பார்த்து விட்டு....வரிசையை விட்டு விட்டு நேரே கவுண்டருக்கு அழைத்தார்....நேரே செல்லுங்கள் என்று கூறி சைகையில் சொன்னார்... நன்றியோடு அவரது முகத்தை நோக்கிவிட்டு.அந்தப் பகுதியையும் கடந்து சென்றோம்.

காட்சி 1   ----  திருச்சி விமான நிலையம் நேரம்: காலை 7 மணி தாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்த



அயர்ச்சி எல்லாம் போக...விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து இறங்கி, திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழைகிறோம். தொடர்ச்சியான பயணமும் சீதோஷ்ண மாற்றமும் என் குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது, அழுது கொண்டிருந்த அவளை தோளில் தூக்கிய படி ஒரு கையில் ஹேண்ட் லக்கேஜ் எடுத்த படி குடியேற்றப் பகுதியினுள் நுழைகிறோம்...

துபாய் ஏர்போட்டில் உயர்தர நவ நாகரீகமாக நடந்து கொண்ட நமது குடிமக்கள் தாய் நாடு வந்தவுடன் மிருகங்கள் ஆகி விட்டார்களா என்று திடுக்கிடலோடு பார்த்தேன். ஆமாம்! யாரும் லைன் ஃபார்ம் பண்ணவும் இல்லை, சீர் படுத்தவும் யாரும் இல்லை. சினிமா தியேட்டர் கவுண்டர் போல வலிவுள்ள ஆட்கள் எல்லாம் முண்டி அடித்துக் கொண்டு குடியேற்ற அதிகாரியை சூழ்ந்து கொண்டிருந்தார்கள் அவரும் எந்த அக்கறையுமின்றி கையில் கிடைத்த பாஸ்போர்டை வாங்கி அதட்டோடு ஏதோ கேட்டு கேட்டு ஸ்டாம்ப் செய்து கொண்டிருந்தார்.

நான் துபாய் குடியேற்ற அதிகாரி வழிவிட்டு அனுப்பினாரே என்ற எண்ணத்தில் குழந்தையோடு அவரிடம் சென்று, ''சார்! குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை,கொஞ்சம் எங்களை அனுமதிக்கிறீர்களா? என்று கெஞ்சும் தோரணையில் கேட்டவுடன்,என்னை முறைத்துப் பார்த்து; ''போங்க சார்...போங்க...போய் லைன்ல
நில்லுங்க...கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டீர்களா?'' என்று அதட்டினார். லைன் எங்க சார் இருக்குன்னு கேட்க நினைத்த நான், பேசாமல் சென்று ஒரு மூலையில் நின்று விட்டேன், கூட்டம் போகட்டும் என்று!.

காட்சி 2 -- திருச்சி விமான நிலையம்
குடியுரிமைப் பகுதியில் கேட்கப்பட்ட எல்லா கடுமையான கேள்விகளையும் (கடைசியா எப்போ போனீங்க....? இந்தியாவில் உங்கள் வீட்டு முகவரி என்ன போன்ற....கஷ்டமான) கடந்து சுங்கம் எனப்படும் கஸ்டம்ஸ் பகுதிக்கு வந்தோம்...மீசை முறுக்கிய படி இருந்த அதிகாரி.....என்ன வேல்யூ ஆன பொருள் ஏதும் இருக்கா....(என் மனைவி நகையை மறந்து போய்ட்டேன்..) என்று கேட்டார். நான் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல சார்ன்னு சொன்னேன் சரி நீங்க போகலாம்னு சீல் குத்தி அனுப்பினார்.ஸ்கேன் செய்யும் போது அவர்களுக்கு பெட்டியில் இருக்குன் நகை கண்ணில் பட்டு விட்டது... என்ன சார் நகை கொண்டு போறீங்க...இந்த பக்கம் வாங்கன்னு கூப்பிட்டவர்....என் மனைவியை பார்த்துட்டு..உங்க பேமிலியா...ன்னு கேட்டார். ஆமாங்கன்னு சொன்னேன். இங்க இருந்து அவுங்க போட்டுடு வந்ததுங்கன்னு சொன்னேன்...! சரி சரி போங்கன்னு சொன்னார். அப்பாடா இவராச்சும் விட்டாரேன்னு வந்தா... பின்னால தனியா வந்து.... வழக்கமான கடமையை ஆற்ற ஆரம்பித்தார். என்ன கேட்டார்னு எழுத விரும்பலை (சென்ஸார்)
காட்சி 3 ---- திருச்சி விமான நிலையம்
ஒவ்வொரு லக்கேஜ் ஆக எடுத்து வைத்துக் கொண்டிருதேன்....தானாகவே வந்த ஒரு
விமான நிலைய உதவிப் பணியாளர்.....விடுங்க...சார்.... நான் எடுத்து வைக்கிறேன்.... நவுருங்க சார்ன்னு சொல்ல சொல்ல கேட்காம....எடுத்து வைத்து வலுக்கட்டாயமாக வண்டியையும் தள்ளிக் கொண்டு.... வெளியே வந்தார்....ச்சே....எவ்வளவு நல்ல மனிதர்கள் நம்ம ஊரிலும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிற்பதற்கு முன்னல்...வாசல் வருவதற்கு முன்னாலேயே (வெளியே நம்ம ஆளுங்க எல்லாம் நிப்பாங்கள்ள!) காசு கொடு(!!!) சார் என்றார்...சரி உதவி செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்.....20 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அதைக் கேவலமாக பார்த்த படி... என்ன இது....? என்று அலட்சியமாய் கேட்டார்....150 ரூபாய் வாங்குறது எப்பவும்.... நீ (!!!) 100 கொடு போதும் என்று கட்டளையிடுவது போல வாக்குவாதத்தில் இறங்கினார்.....100ரூபாய் கொடுத்து விட்டு மேற்கொண்டு வண்டி தள்ள முற்பட்டவரை தடுத்து விட்டு நானே வண்டி தள்ளிக் கொண்டு என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவள் பாவமாய் என்னைப் பார்த்தாள். எங்களுக்குள் ஏதேதோ கேள்விகள் இருந்தாலும் விடை தெரியாமல் ஏர்போட்டை விட்டு வெளியே வந்தோம்,.மெளனமாய்! உறவுகளைப் பார்த்தவுடன் இவை எல்லாம் மறந்து போனாலும்....1 வருடமாக தொடர்ச்சியாய் என்னுள் கேள்விகள் சில மட்டும் இருந்தன. அதை உங்கள் முன் இன்று இறக்கி வைக்கிறேன்.

1) யாரோ ஒரு பிலிப்பினோவும், பாகிஸ்தானியும் பாசத்தொடு உதவும் போது எம்மக்கள் பொருளுக்காய் மனிதாபிமானம் காட்டுவது அவன் தவறா? இல்லை, இப்படி அவனை அலைய விட்ட அரசாங்கத்தின் தவறா?

2) கரிசனத்தோடு, ஃபேமிலியா சார் என்று கேட்டு மேற்கொண்டு செல்ல அனுமதித்த
சுங்க அதிகாரி..இனாம் வாங்க அனுமதித்தது அவரது குடும்ப சூழ் நிலையா? இல்லை என்னைப் போல் வெளி நாட்டிலிருந்து வந்த மக்கள் தங்கள் சுயநலத்துகாக கொடுத்து கொடுத்து பழக்கியதன் காரணமா?

3) அதிகாரி என்றாலே நமது நாட்டில் ஏன் அதட்டுகிறார்கள்? இது பள்ளியில் இருந்தே ஆசிரியரிடம் கற்று வந்த பழக்கமா? இல்லை.....தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவமா? உங்கள் துறையின் அதிகாரிதானே நீங்கள் ....வேறு துறையில் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்?

4) பொருளாதர ரீதியாக துபாய் போன்ற நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ஆனால் இங்கே நான் குறிப்பிட்ட எந்த விசயத்திலும் பொருள் இல்லை மனிதவளமும்,நேயமும் பற்றிய விசயங்கள்தானே! அப்படியானால் பொருளாதரத்தை பொறுத்துதான் மனித நேயம் கூடவா?
5) வெளி நாட்டில் இருக்கும் வரை அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கும் நமது மக்கள் நம்ம ஊருக்கு வந்தவுடன்....ஏன் அதிக ஆடம்பரம் காட்டுவதும்.....மேலும் நமது சட்டதிட்டங்களை கேவலமாக பேசுவதுமாக ஒரு அதிக
பிரங்கித்தனம் காட்டுகிறார்கள். சர்வதேச சமுதாயம் கற்றுக்கொடுத்த நல்ல விசயங்களை ஏன் நீங்கள் நமது ஊரில் பின் பற்றுவதில்லை? என்னைப் பொறுத்த அளவில் அன்பு காட்டவும் , அரவணைக்கவும், ஆறுதலாய் பேசவும், இருக்கையில் இருந்து எழுந்து பெரியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தை வைத்துள்ளவர்களை அமரச் செய்யவும், பணம் தேவையில்லை; மனம் போதும்

நன்றி: மருதுப்பாண்டி நன்றி: நிஸார் அஹமது (PTM )

Tuesday, June 1, 2010

இஸ்லாம் அமைதியான மார்க்கம் (ஜாஹிர் நாயக்)

டாக்டர் ஜாஹிர் நாயக் பதில்கள்(2)


கேள்வி : இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம்முழுவதிலும்இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள்

இருந்திருக்கமாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல.

மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்

இஸ்லாம் என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. "ஸலாம்" என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப்படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் -நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்டமாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.  
3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரியின் கருத்து.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ'லியரி எழுதிய "இஸ்லாம் கடந்து வந்த பாதை" என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். குறைவதுடன் "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும்-மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது."

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள்.
 கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால்  இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்கமாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.   இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத
முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.
7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.   இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் -மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள்.எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் -மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?.அப்படி ஒரு வாள் இருந்தாலும் -இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை:
வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.
(அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்: அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் -உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத்தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்."

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான "அல்மனாக்" பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை "தி ப்ளெய்ன் டிரத்" என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது.

உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக்கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.


12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது: இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிகஅதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்  "ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும்என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்."என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

Wednesday, May 26, 2010

துபை கனவு

 துபைக்கு வருக! வருக!!


நிறைய இந்தியர்கள் தங்கள் கனவு நனவாக துபை போகும் அடுத்த விமான நம்பிக்கையில்.... இங்கு வந்த பின் வாழ்க்கை அதிர்ச்சியாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதை அறிவிக்கவே இவ்விடுகை.

பொதுவாக நம் இளைஞர்கள் குறைந்த கால அளவுக்குள் நிறைய பொருள் தேடி விட விரும்புகின்றனர். பெயர் பெற்ற அல்லது அதல்லாத எந்த ஒரு நாட்டிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்தாலும் அதன் நன்மை தீமை பற்றி யோசிக்காமலேயே இந்தியாவை விட்டும் வெளியேறத் துணிகின்றனர். UAE வர விரும்புபவர்களே!. நீங்கள் கொஞ்சம் நிதானித்து, வருவதற்காக முடிவெடுக்கும் முன்னரே, இங்கே குறிப்பிடப்படுவனவற்றை சீர் தூக்கிப் பார்ப்பது நல்லது.

முதன் முதலாக  உங்கள் துபை சம்பளத்தை உடனே 11ஆல் பெருக்கி இந்தியப் பணமாக கணக்கிடும் தவறை முதலில் நிறுத்துங்கள். பணமாற்றம் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதிலிருந்து கணக்கிடப்பட வேண்டும். மொத்த வருமானத்திலிருந்தல்ல.நீங்கள் திருமணமானவராயிருந்தால் அமீரகத்தில் குறிப்பாக துபையில் உங்கள் குடும்பம் தங்க எவ்வளவு செலவாகும் எனப் பாருங்கள்.

துபை நகரத்தில் எங்காவது ஒரு அறை, சிறு கூடம் (சிறு ஹால்), சமையலறை உள்ள ஒரு சாதாரண 1BHK வீட்டுக்கு வாடகை குறைந்தது 5000 திர்ஹம் ஒரு மாதத்துக்கு (ஒரு வருடத்துக்கல்ல) அவசியம். இந்த வாடகை வருடத்துக்கு குறைந்தது 15 முதல் 25 சதவீதம் வரை உயரும். உங்கள் சம்பள உயர்வு இதில் பாதி சதவீதம் கூட உயராதென்பதை அறியவும்.

நீங்கள் கொஞ்சம் விபரமான ஆளென்ற நினைப்பில் துபைக்கு வெளியில் (சார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன் ஆகிய அமீரகங்களில்) தங்கினால் மாதம் 500 முதல் 750 திர்ஹம் வரை சேமிக்க முடியும். ஆனால் அதற்காக அலுவலகம் சென்று வர பயணத்துக்காக நீங்கள் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும். சார்ஜாவிலிருந்து துபை வரை - (இலட்சக்கணக்கில் குடியேற்றங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகிரிப்பதால் வாகன நெரிசல் இன்னும் கூடுமே ஒழிய குறையாது). அதாவது வேலை நேரமாகிய 10 மணி நேரமானது 14 முதல் 15 மணி நேரமாகும்.துபையில் குடும்பமிருந்தால் குதுர்கலம் என்ற நினைப்பிருக்கும். உங்கள் கம்பெனி ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இல்லாததாக இருந்தால் (நிறைய கம்பெனிகள் இது போல் இருக்கிறது) சாதாரண மெடிக்கல் செக்கப்புக்கு 100 திர்ஹம் அழ வேண்டும். உடல் நலக்கேடு வராமலிருந்தால் நல்லது. வந்து விட்டால் அதற்காக மாதாமாதம் ஒரு பெருந்தொகையை இழக்க நீங்கள் தயாராக வேண்டி வரும்.


இந்தியாவின் வடநாட்டில் உள்ளது போன்ற வெப்பத்தை அறியாதவராக, பழக்கப்படாதவராக இருந்தால்.... அறிந்து கொள்ளுங்கள். கோடை நாட்களில் மதிய வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் - கோடையில் இங்கு இது சாதாரணம். சொல்லாமல் விடக்கூடாத முக்கியம் (Humidity)ஈரப்பதம் 95 சதவீதம்!. குழந்தையில்லாதவராக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர். 2 அல்லது 3 பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்காக வருடத்துக்கு 12000 திர்ஹம் செலவுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

இங்கு பெட்ரோல் விலை குறைவு அதனால் கார் வாடகையும் குறைவாக வரும் என நினைத்திருப்பீர்கள். விமான தளத்தில் இருந்து உங்கள் ஹோட்டலுக்கு செல்ல ஒரு வாடகை வண்டி எடுத்து அதில் அமர்ந்து உங்களை நீங்கள் சரிப்படுத்திக் கொள்வதற்குள் வாடகை முள் 75 முதல் 100 திர்ஹத்தைத் தொட்டு விடும்.

உலகத்தின் விலையுயர்நத கார்கள் எல்லாம் இங்கு கிடைக்கும். ஆனால் அதை பார்க்கிங் செய்ய தினம் ஒரு இடத்தை பிடிப்பதற்குள் கார் வாங்கும் எண்ணமே பறந்து விடும். கார் பார்க்கிங் செய்ய ஒரு மணி நேரம் சுற்றிச்சுற்றி வந்தால் இடம் கிடைக்கலாம் ஆனால் ஒரு மணி நேரத்துக்கு 2 திர்ஹம் இரண்டு மணி நேரத்துக்கு 5 திர்ஹம் கொடுத்து டிக்கட் எடுக்கவும். காரில் டிக்கட் வைக்காமல் விடுபட்டு விட்டால் தண்டம் அழ வேண்டும். 100 திர்ஹம் என்று எழுதி 110 திர்ஹம் வாங்குவார்கள். அத்துடன் முக்கிய வீதிகளுக்கு சுங்கத்தீர்வை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பெறும்.

கடைசியாக (இப்போதைக்கு)


ஊரில் உள்ள உங்கள் சொந்தங்களுக்கு தொலைபேச மூன்று மடங்கு பணம் செலவாகும். அமீரகத்திலிருந்து இந்தியாவுக்குப் பேச ஒரு நிமிடத்துக்கு சுமார் 30 இந்திய ரூபாய்கள் தேவை. ஆனால் இந்தியாவிலிருந்து அமீரகத்துக்குப் பேச 8 ரூபாய்கள்தான். இது துபையில் உங்களுக்கு என்னென்ன காத்திருக்கிறது என்பதற்கு சிறு விளக்கமாக இருக்கும். Skype உபயோகிக்கலாம் என நினைக்காதீர்கள். அது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி உபயோகிப்பது சட்ட விரோதமானது. ஆர்குட் கூட இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

புதிது புதிதாக உருவாக்கப்படும் ஷாப்பிங் மால்கள், மாறிக் கொண்டே வரும் வானுயர கட்டிடங்கள், துபையை பற்றி ஆங்காங்கே கேட்கும் வார்த்தைகள், விளம்பரங்கள், ஒவ்வொரு வியாழன் இரவிலும் படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்,அழகழகான கார்கள், அணிவகுக்கும் காபிக்கடைகள், புர்ஜ் துபை, புர்ஜ் அல் அரப், துபை மரீனா போன்றவை உங்களை வசீகரித்திருக்கிறதென்றால்....... கொஞ்சம் யோசியுங்கள். (உங்களின் வாழ்க்கையை இங்கே துபையில் தொலைத்து விட்டு நீங்கள் ஊருக்குப் போகும்போது என்ன கொண்டு போகப் போகிறீர்கள் என்பதை யோசியுங்கள்.) நீங்கள் எத்தனை வருடங்கள் இந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் வெளிநாட்டான்தான், அமீரக பாஸ்போர்ட் கிடைக்காது. ஒரு வீடு கூட இங்கு சொந்தமாக இருக்காது.


இதுதான் வளைகுடா

.1* லோக்கல் தொலைபேசி இணைப்பு இலவசம்

.2* பெட்ரோலை விட தண்ணீருக்கு விலை அதிகம். கழிவு நீருக்காகவும்  காசு தர வேண்டும்.

. 3* ஒவ்வொரு கட்டிடமும் மூன்று மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்.

.4* தகுதியில்லாதவர்கள் தகுதி படைத்தவரை விடவும் அதிகம் சம்பாதிப்பார்கள்.

. 5*  உண்மையை விடவும் படம் காட்டுவதற்கே மதிப்பு.

.6* அடிமட்டத் தொழிலாளர்களுக்கு நமது நாட்டில் கிடைப்பதை விட குறைந்த ஊதியமே கிடைக்கிறது.

.7* நிர்வாகம் எந்த ஒரு காரணமுமின்றி தன்னிடம் வேலை பார்ப்பவரை வெளியேற்றலாம்.

. 8*  பணத்தை விட வாஸ்தா (எனப்படும் பரிந்துரை) அதிக பலம் வாய்ந்தது.

.9* அலுவலர்களை விடவும் துடைப்பவர்களுக்கு அதிக பரிந்துரைக்கும் பலமுண்டு

. 10*  கட்டிட முதலாளியை விட கூடுதல் உரிமையுடையவர் வாட்ச்மேன்.

. 11* முதலாளியிடம் மேலதிகாரியை விடவும் அதிக செல்வாக்குள்ளவர்கள் ஆபீஸ் பாயும் டிரைவரும்தான்.

.12*  வளைகுடாவில் ஒரு மணி நேரத்துக்கள் மழை, புழுதிப்புயல், கடும் வெப்பம், கடுங்குளிர், வியர்ப்பு (உருக்கம்) போன்ற காலநிலை மாற்றங்கள் அதி வேகமாக மாறும்.

.13* வளைகுடா பாலைவனத்தில்தான் இருக்கிறது இருப்பினும் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று தாவரங்கள் காட்சி தரும்.

.14*  வளைகுடாவில் சம்பாதிக்கத் தெரியாதவன் உலகில் எங்கு போனாலும் சம்பாதிக்க முடியாது.

.15* வளைகுடாவில் நேரம் பறக்கும். ஒரு வெள்ளிக்கிழமை போய் அடுத்த வெள்ளி வந்ததே தெரியாது.

.16* இங்குள்ள ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் ஊரில் ஒரு வீடு கட்டுவதும் திருமணம் செய்வதும்தான் முக்கிய கனவு.

.17* நீங்கள் ஊரில் கூட இருக்கும்போது இருந்ததை விட 100 மடங்கு கூடுதலாக உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மீது அன்பு செலுத்துவீர்கள்.

.18* பணியில் இருப்பதை விடவும் வீட்டில் இருப்பதுதான் அதிக வலியைத் தரும்.

.19* இந்தியர்கள் உண்மையிலுள்ளதை விடவும் கூடுதல் பக்தியுள்ளவர்களாயும், கடவுள் பயமுள்ளவராகவும் இருப்பதாக காட்டிக் கொள்வர்

.20* சல்மான் கான் அல்லது ஷாரூக் கான் படங்கள் திரையிடப்பட்டால் திரையரங்குகள் அரபியர்கள் கூட்டத்தால் நிரம்பும்.

.21* அரபிப் பெண்கள் ஹிந்திப்பாட்டு பாடுவர் ஆனால் பாடலின் பொருள் தெரியாது.

.22*  டான்ஸ் பார்களும் 'பப்' களும் பெங்களுருவை விட அதிகம்

. 23*  ஒவ்வொரு ஐந்து மீட்டருக்கு ஒரு பெண்கள் சலூன் உண்டு

. 24*  உணவும் மளிகையும் உங்கள் வாகனத்தில் கொண்டு வந்து தரப்படும்

. 25*  10 மீட்டருக்கு ஒரு ஸ்டார்பக்ஸ்

. 26 * ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்குள் ஒரு ஷாப்பிங் மால் உண்டு

.27* விபச்சாரிகளும் உண்டு ஆனால் பிச்சைக்காரர்களை விடவும் மட்டமாக

.28* நெடுஞ்சாலைகளில் மெதுவாக அல்லது வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கென்று வரிசை வித்தியாமிருக்கும்.

. 29*  ஓட்டுநர் உரிமம் பெறுவது கார் வாங்குவதை விட மிகக் கடினமானது

.30* பூச்சிகளை விடவும் நொருங்கிய கார்கள் கூடுதலாக காணக் கிடைக்கும்

. 31*  வரிசையில் வரவேண்டுமென்பது பெண்களுக்கு விதி கிடையாது.
 
Thanks : sultangulam.blogspot.com

Tuesday, May 25, 2010

உலக மொழிகள் ( World's Languages )


 உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?

1. ஆங்கிலம் 2. ஸ்பானிஷ் 3. சீன மொழி 4. பிரெஞ்ச்...?

சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).

உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.
உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி - ஆங்கிலம்? என்றால் இல்லை,

ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 - அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.

ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் - 35க்கும் மேல்.

இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது. இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார் 18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் - இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.

திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?

தெலுங்கு.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர். உலக அளவில் பதினைந்தாவது இடம்.

தமிழ்:
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது. உலக அளவில் பதினெட்டாவது இடம்.

மலையாளம் & கன்னடம்:
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது. உலகில் அளவில் முறையே 29-வது, 31-வது இடங்களில் இருக்கிறது.

சீன மொழிகள்:
முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
சீன மொழி பேசும் மக்கள் தொகை உலக அளவில் இடம்
மந்தாரின் (Mandarin) 88.5 கோடி 1
வூ (Wu) 7.72 கோடி 10
யூ (Yue) (Cantonese) 6.62 கோடி 16
மின் நான் (Min Nan) 4.9 கோடி 21
ஜின்யூ (Jinyu) 4.5 கோடி 22
க்ஸியாங் (Xiang) 3.6 கோடி 28
ஹக்கா (Hakka) 3.4 கோடி 30
கான் (Gan) 2.06 கோடி 45

இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற வட்டார வழக்குகளை புரிந்து கொள்ள இயலாத அளவு வேறுபட்டிருப்பதால் தனி மொழிகள் என்றே கணக்கிடப்படுகிறது.

குறிப்பு:
நாடுகளைப் பட்டியலிடும் போது 1%க்கும் குறைவாக அந்த மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப் படவில்லை. மேலும் இது ஒரு உத்தேசக் கணக்கீடு.

நன்றி : களஞ்சியம்



Monday, May 24, 2010

அமெரிக்க ஐக்கிய நாடு



அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ , அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுகிறது) என்பது ஐம்பது மாநிலங்களும் ஒரு ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஒரு ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு ஆகும். இந்நாடு மத்திய வட அமெரிக்க கண்டத்தில் தான் அதிகமாய் அமைந்துள்ளது, இங்கு இதன் நாற்பத்தி-எட்டு அடுத்தடுத்த மாநிலங்களும் தலைநகர் மாவட்டமான வாஷிங்டன் டி.சி.யும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்திருக்கின்றன,

வடக்கே கனடாவும் தெற்கே மெக்ஸிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன.அலாஸ்கா மாநிலம் கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் பேரிங் நீரிணைப்புக்கு குறுக்கே கொண்டுள்ளது.ஹவாய் மாநிலம் மத்திய பசிபிக்கில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும்.இந்நாடு கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள், அல்லது தனிமைப்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கிறது.


3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்காவானது மொத்த பரப்பளவில் மூன்று அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது.உலகில் பன்முக இனங்களையும் பலவித கலாச்சாரங்களையும் மிக அதிகளவில் கொண்ட தேசங்களில் அமெரிக்காவும் ஒன்றாகும்,

இது பல்வேறு நாடுகளில் இருந்தும் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.[7]அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).
அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று காலனிகளால் தான் இந்த நாடு ஸ்தாபிக்கப்பட்டது.

ஜூலை 4, 1976 இல், சுதந்திர பிரகடனத்தை அவர்கள் வெளியிட்டனர், இது இங்கிலாந்தில் இருந்து அவர்கள் சுதந்திரமடைந்து விட்டதாயும் ஒரு கூட்டுறவு ஒன்றியம் உருவாக்கப்பட்டிருப்பதையும் பிரகடனப்படுத்தியது.அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன, இது தான் வெற்றிகரமான முதல் காலனி சுதந்திர போராகும்.[8][9][10] தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அது அடுத்த வருடத்தில் உறுதி செய்யப்பட்டதானது மாநிலங்களை ஒரு வலிமையான மத்திய அரசாங்கத்தின் கீழான ஒரு ஒற்றை குடியரசாக மாற்றியது.பல அடிப்படை சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது, அத்துடன் டெக்சாஸ் குடியரசு மற்றும் ஹவாய் குடியரசை இணைத்துக் கொண்டது.மாநிலங்களின் உரிமைகள் விஷயத்தில் விவசாய தெற்கிற்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் மற்றும் அடிமை ஸ்தாபனத்தின் விரிவாக்கமும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு தூண்டி விட்டது.வடக்கின் வெற்றியானது நாடு நிரந்தரமாகப் பிரிவதை தடுத்ததோடு அமெரிக்காவில் சட்டப்பூர்வமான அடிமைமுறை முடிவுக்கு வருவதற்கு இட்டுச் சென்றது.1870கள் வாக்கில், தேசிய பொருளாதாரம் உலகின் மிகப்பெரியதாக இருந்தது.

 ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது.1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் ஒரு ஸ்தாபன உறுப்பினராக, அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றாக்கியது.உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது

நன்றி : விக்கிபீடியா

Sunday, May 23, 2010

ஃபேஸ்புக்


இஸ்லாமாபாத்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான படங்கள் இடம் பெற்ற ஃபேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் ஒருவர், தனது தளத்தில், பேச்சுச் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் படங்களை அனுப்பி வைக்கலாம் என அழைப்பு விடுத்திருந்தார். இது பாகிஸ்தானில் பெரும் புயலைக் கிளப்பி விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இழிவுபடுத்தும் செயலை ஃபேஸ்புக் நிர்வாகம் அனுமதித்ததைக் கண்டித்து ஃபேஸ்புக்கை தடை செய்தது பாகிஸ்தான் அரசு. மேலும் யூடியூப் மற்றும் ட்விட்டர் தளங்களையும் அது தடை செய்தது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த பக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அதை உருவாக்கியவரே அப்பக்கத்தை நீக்கி விட்டதாகவும் அது கூறியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவதூறாக சித்தரிக்கும் இதுபோன்ற தகவல்கள் உள்ளிட்டவற்றை நீக்கினால் மட்டுமே தடை விலக்கப்படும் என பாகிஸ்தான் அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் ஃபேஸ்புக்கின் இந்த
அறிவிப்பு குறித்து அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த 2005ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு செய்தித் தாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறி ஒரு கார்ட்டூன் படத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களை கடும்கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து உலகின் பல பகுதிகளிலும் மோதல்கள் வெடித்தன. பாகிஸ்தானிலும் அது பெரிதாக வெடித்தது. பெருமளவில் அங்கு வன்முறைச் சம்பவங்களும் நடந்தன.

நன்றி :நிசார் அஹமது (PTM )