Tuesday, April 6, 2010
Monday, April 5, 2010
இந்தியாவின் முதல் தர நிறுவனத்தில் இலவசமாக ஐபிஎஸ்.தேர்வுக்குப் படிக்க வேண்டுமா
IAS,IPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு!
நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்
அரசின் இலவச கல்வி உதவி தொகை
IAS,IPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு!
நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
2013-ல் MBBS , BE படிப்பு-தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு!
மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளிகூடங்கள் – மாயையும், தீர்வும்
குழந்தைகள் கல்வியில் சிறக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
2013-ல் MBBS , BE படிப்பு-தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு!
மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளிகூடங்கள் – மாயையும், தீர்வும்
குழந்தைகள் கல்வியில் சிறக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
Thanks to adirai farook..
லேபிள்கள்:
இலவசமாக ஐபிஎஸ்.தேர்வுக்குப் படிக்க வேண்டுமா
Saturday, April 3, 2010
கதவை மூடு! கடன்காரன் போகட்டும்!
தில்லாலங்கடிதுர இப்போ தெளிவா கதவைத் தொறந்து காண்பிச்சுட்டாரு!
- கதவை மூடு! கடன்காரன் போகட்டும்!
(இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்கு மைன்டே ரிலாக்ஸ் ப்ளீஸ், டோரைத் திற – காற்று ‘கம்’மட்டும், ALL-க்கும் ஆசைப்படு – போன்றவை ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல, அது உங்கள் ஞாபக சக்தியின் கோளாறு!)
மனம் ஒரு மங்காத்தா! உள்ளே வெளியே உள்ளே வெளியே எனத் துள்ளிக்குதிக்கும் புனிதச் சாத்தான்! மனம் ஒரு பத்தி மானாவாரியா பேசலாம்! இது (கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்) உங்கள் உள்ளங்களின் உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் உற்சாகத் தொடர். உங்கள் இதயக் கதவைப் படாரெனத் திறந்து சடாரென (தொறந்த வீட்டில் வாலாட்டிக் கொண்டே) நுழையும் டானிக் தொடர். ஆனால் இது தொடரல்ல!
உங்களை நீங்களே உற்றுப் பார்க்க வேண்டிய தருணம் இது. நன்றாகப் பாருங்கள். ஆழமாகப் பாருங்கள். அழுத்தமாகப் பாருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். அதற்கு மேலும் உங்களை உங்களாலேயே பார்க்க முடியாது. வெறுப்பு வந்து விடும். செருப்பைக் கழற்றி விடு! அடுப்பை அணைத்து விடு! பழைய சோற்றைத் தின்னுவிட்டு பரலோகத்தை அடைந்துவிடு!
ஒரு குட்டிக்கதை! ஷங்கன் பிள்ளை ரொம்ப நல்லவர். ஆனால் தன்னை அறியாமல் கெட்டவராக வாழ்ந்து வந்தார் நல்லவிதமாக! அவருக்கு ‘அல்வா’ சாப்பிட ஆசை வந்தது. ஒரு கடையில் சென்று அல்வா சாப்பிட்டுவிட்டு வந்தார். ஆனால் காசு கொடுக்கவில்லை. அது தவறில்லை. ஏனென்றால் அது வெற்றிலை பாக்குக் கடை. அங்கு அல்வா கிடைக்காது. யாருக்காகவோ வாங்கி வைக்கப்பட்டிருந்த அல்வாவை ஷங்கன் பிள்ளை எடுத்துச் சாப்பிட்டார். நீதி : இருக்கும் என்று நினைத்துப் போகுமிடத்தில், இல்லாத பொருள் இருக்கும்போது, அதை இல்லாமல் செய்துவிடுதல் தவறில்லை. ஷங்கன் பிள்ளை அதைச் செய்தார். அவர் நல்லவர்தான். கெட்டவராகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார். அதனால் உங்களை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ளுங்கள்!
பார். கண்ணால் பார். கண்டதை அகக் கண்ணால் நோக்கு. ‘கண்டதை’யெல்லாம் காணாதே! பசியுள்ளவன் கண்ணுக்கு இடியாப்பம், பாயா தான் தெரியும்; அதை விற்கும் இடுப்பொடிஞ்ச ‘ஆயா’ தெரியாது. தூக்கம் உள்ளவன் கண்ணுக்குப் பாய்தான் தெரியும். பக்கத்துல கிடக்குற நாய் தெரியாது. கண்ணாடி போட்டவன் கண்ணுக்கு முதலில் அந்தக் கண்ணாடிதான் தெரியவேண்டும். ஆனால், கண்ணடிக்கிற ஃபிகர் தெரிஞ்சா அது வயசுக் கோளாறு. தெரியாவிட்டால் வாயுக் கோளாறு! வாஸ்துக் கோளாறு!
ஒரு ‘ஸென்’ கதை! அவருக்கு வாழ்வில் எப்படியாவது தான் விரும்பிய ‘அதை’ வாங்கி விட ஆசை. அதனால் தன்னிடமிருந்த விமானத்தை விற்றார். சொகுசுப் பேருந்துகளை விற்றார். ஆடம்பர பங்களாக்களை விற்றார். எல்லாவற்றையும் செலவழித்துவிட்டு, மீதித் தொகையில் தான் வாங்க விரும்பியதை, அந்த ‘ஸென்’ காரை வாங்கினார். இந்தக் கதை விளக்குவது என்ன?
உன் லட்சியம் என்னவோ அதை நோக்கி ஓடு; முடியவில்லையா, ஆட்டோ வைத்துப் போ. அவ்வளவு காசில்லையா? லட்சியத்தை மாற்றிக் கொள்! ஏனெனில் மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது!
யார் நீ? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? எதற்காக வந்தாய்? இப்படி கேள்விகள் நிறைந்தது வாழ்க்கை. பதில் சொல்லிக்கொண்டிருந்தால் பஸ் போய் விடும். பல்லை விளக்கிவிட்டுப் பள்ளிக்கூடம் கிளம்பு. அது தான் வாழ்க்கை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதுதான் வாழ்க்கை.
அந்தக் கதையில் ஷங்கன் பிள்ளை என்ன சொன்னார்? என்னென்னமோ சொன்னார். அவர் அங்கு சொன்னதைத்தான் இங்கு நான் மீண்டும் சொல்கிறேன். என்னவென்று கேட்கிறீர்களா? கேட்பது சுலபம். எதைச் சுலபமாக நினைக்கிறீர்களோ அதைச் செய்யாதீர்கள். அது அந்நியருக்கு நம்மை நாமே அடிமைப்படுத்தும் செயல். யார் அந்நியன்? நாம்தான் அந்நியன்! நமக்குள் ஒரு அந்நியன்! உன்னைத் திற. ஒரு எழவும் பொங்காது! பீர் டின்னைத் திற. உற்சாகம் பொங்கும்!
ஒரு சிஷ்யன் என்னைத் தேடி வந்தான். ‘சாமி! முக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?’ என்றான். சொன்னேன். விளக்கமாகச் சொன்னேன். ‘முதலில் இரண்டு கைகளையும் நன்றாய் விரி. பற. கைகளைச் சிறகாய்ப் பாவித்து வேகமாக அசை. அசைத்துக்கொண்டே மொட்டை மாடிக்குப் போ. நீ இப்போது உயரத்திலிருப்பாய்! பல படிகள் உயர்ந்திருப்பாய்! கால்களால் ஓட ஆரம்பி. சுற்றிச் சுற்றி ஓடு. கண்களை மூடிக்கொண்டு ஓடு. மோனத்தைத் தேடி ஓடு. கண்ணு மண்ணு தெரியாமல் ஓடு. கட்டாயம் முக்தி நிலை கிடைக்கும். மோட்ச நிலை கிடைக்கும்’ என்றேன். செய்தான். ‘கபால’ மோட்சம் பெற்றான்.
‘பற்று’ என்பது வேண்டும். எப்பொழுதும் வேண்டும். எங்கேயும் வேண்டும். பற்று இல்லாவிட்டால் வாழ்க்கையை வாழ முடியாது. டீக்கடை முதல் மளிகைக் கடை வரை பற்றின்றி வாழுதல் உற்றதல்ல உடம்புக்கு! உனக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ‘பற்று’ வை. முடியவில்லையா ஓரமா உட்கார்ந்து ஒரு ‘தம்’மை பற்ற வை!
நடப்பதுதான் நடக்கும். நாற்காலி நடக்காது. மலை மீது மழை பொழியும். மழை மீது மலை பொழியுமா? ‘எண்ணு’வதெல்லாம் எண்ணமாகாது. சில்லறையாகக் கூட இருக்கலாம். சம்சாரம் மீது மின்சாரம் பாய்வதற்கும், மின்சாரம் மீதும் சம்சாரம் பாய்வதற்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் உள்ளதே! லுங்கி கட்டிக்கொண்டு வங்கி போகலாம். வங்கியைக் கட்டியவன் லுங்கி கட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, ஒன்றுமில்லை! ஒன்றுமில்லாததுதான் பூஜ்யம்! ஆனால் பூஜ்யத்திற்கு மதிப்பு உண்டு. அதுதான் மனம்.
மனதைத் திறந்து வை! மூடி வைப்பதற்கு அது முந்திரிப்பருப்பு அல்ல! கதவைத் திறந்தால் காற்று வரலாம். காத்து, கருப்புக் கூட வரலாம்! பன்றிக் காய்ச்சலும் வரலாம்! முதலில் மூடி வை! கடன்காரன் வந்துவிடப்போகிறான்! ஏனெனில் மனம் ஒரு கடன்காரன்!
Thangappa...
Friday, April 2, 2010
காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்
நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
முள்ளங்கி: வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
இன்சுலின் ஊசி வேண்டாம் இனி வருகிறது இன்ஹேலர் -
உலகம் >> இன்சுலின் ஊசி வேண்டாம் இனி வருகிறது இன்ஹேலர்
இன்சுலின் ஊசி வேண்டாம் இனி வருகிறது இன்ஹேலர்
பதிவு செய்த நாள் 3/26/2010 2:03:47 AM
வாஷிங்டன் : டயபடீஸ் நோயாளிகள் (நீரழிவு நோய்) இனி, வலி தரும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்காது. இன்ஹேலர் வடிவில் இன்சுலின் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மேன்கைண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘அப்ரீசா’ என்ற பெயரில் இன்சுலின் இன்ஹேலரைத் தயாரித்துள்ளது. அது பற்றி அந்நிறுவன ஆராய்ச்சிக் குழுத் தலைவர் ஆண்ட்ரியா லியோன் பே கூறியதாவது:
நீரழிவு நோயாளிகள் அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது கொடுமையாகும். அவர்களுக்கு இனி எளிய மருத்துவம் கிடைக்கப் போகிறது. அப்ரீசா இன்ஹேலர், வழக்கமான இன்சுலின் ஊசியை விட வேகமாக செயல்படக் கூடியது. ரத்தத்தில் சர்க்கரை அளவை நார்மலாக உடனடியாக மாற்றக் கூடியது. அதேநேரம், சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறையக்கூடிய ஆபத்து இல்லாதது.
இந்த இன்ஹேலரில் டெக்னோஸ் பியர் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாய் மூலம் உள்ளிழுக்கப்படும் இன்சுலின் பவுடர், நுரையீரலுக்கு சென்று உடனடியாக ரத்தத்தில் கலக்கும். உடனடியாக செயல்படத் தொடங்கும். இன்ஹேலரை உறிஞ்சிய 12 நிமிடங்களில் நோயாளிக்கு நிம்மதி கிடைக்கும். அதேபோல, இன்சுலின் ஊசி ரத்தத்தில் செயல்படுவதைவிட கூடுதல் நேரம் செயல்படும்.
அப்ரீசா இன்ஹேலர் இப்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அது கிடைத்ததும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்றார்.
சர்க்கரை நோய்க்கு இன்சுலின் இன்ஹேலர் அறிமுகமாவதை மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். அமெரிக்க டயபடீஸ் ஆராய்ச்சி பவுண்டேஷன் இயக்குனர் சஞ்சய் தத்தா கூறுகையில், ‘‘அப்ரீசா தயாரிப்பில் தேவையான பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் நோயாளிக்கு பக்கவிளைவுகள் ஏதும் இருக்காது என்று நம்புகிறோம். இன்சுலின் ஊசியைவிட இன்ஹேலர் பயன்படுத்துவது டயபடீஸ் நோயாளிகளுக்கு எளிதாக இருக்கும்’’ என்றார்.
இன்சுலின் ஊசி வேண்டாம் இனி வருகிறது இன்ஹேலர்
பதிவு செய்த நாள் 3/26/2010 2:03:47 AM
வாஷிங்டன் : டயபடீஸ் நோயாளிகள் (நீரழிவு நோய்) இனி, வலி தரும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்காது. இன்ஹேலர் வடிவில் இன்சுலின் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மேன்கைண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘அப்ரீசா’ என்ற பெயரில் இன்சுலின் இன்ஹேலரைத் தயாரித்துள்ளது. அது பற்றி அந்நிறுவன ஆராய்ச்சிக் குழுத் தலைவர் ஆண்ட்ரியா லியோன் பே கூறியதாவது:
நீரழிவு நோயாளிகள் அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது கொடுமையாகும். அவர்களுக்கு இனி எளிய மருத்துவம் கிடைக்கப் போகிறது. அப்ரீசா இன்ஹேலர், வழக்கமான இன்சுலின் ஊசியை விட வேகமாக செயல்படக் கூடியது. ரத்தத்தில் சர்க்கரை அளவை நார்மலாக உடனடியாக மாற்றக் கூடியது. அதேநேரம், சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறையக்கூடிய ஆபத்து இல்லாதது.
இந்த இன்ஹேலரில் டெக்னோஸ் பியர் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாய் மூலம் உள்ளிழுக்கப்படும் இன்சுலின் பவுடர், நுரையீரலுக்கு சென்று உடனடியாக ரத்தத்தில் கலக்கும். உடனடியாக செயல்படத் தொடங்கும். இன்ஹேலரை உறிஞ்சிய 12 நிமிடங்களில் நோயாளிக்கு நிம்மதி கிடைக்கும். அதேபோல, இன்சுலின் ஊசி ரத்தத்தில் செயல்படுவதைவிட கூடுதல் நேரம் செயல்படும்.
அப்ரீசா இன்ஹேலர் இப்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அது கிடைத்ததும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்றார்.
சர்க்கரை நோய்க்கு இன்சுலின் இன்ஹேலர் அறிமுகமாவதை மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். அமெரிக்க டயபடீஸ் ஆராய்ச்சி பவுண்டேஷன் இயக்குனர் சஞ்சய் தத்தா கூறுகையில், ‘‘அப்ரீசா தயாரிப்பில் தேவையான பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் நோயாளிக்கு பக்கவிளைவுகள் ஏதும் இருக்காது என்று நம்புகிறோம். இன்சுலின் ஊசியைவிட இன்ஹேலர் பயன்படுத்துவது டயபடீஸ் நோயாளிகளுக்கு எளிதாக இருக்கும்’’ என்றார்.
Wednesday, March 31, 2010
உயிர்கொல்லி காதலுக்கெதிரான விழிப்புணர்வு தேவை...
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதாரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்படி எஸ்.எம் எஎஸ் அனுப்பு இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பரிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கண்ணி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பரிபொகின்றது. என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்பொய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைளில் அதிகம் பார்த்திருப்பிர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கிய என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடு சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்காக்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்ட வேண்டும்.
தொகுப்பு: எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா
> > திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
> > வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
> > சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல....
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
> > பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...
> > மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
> > அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது... பதறி எழுந்து நிலை.
> உணர்ந்து சிரிக்கிறாய் ! கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையைபோல அழுகிறாய் !
> > மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
> > கெஞ்சுவதும்...மிஞ்சுவதும்... அழுவதும்...அணைப்பதும்...கண்டிப்பதும்...
> > கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா
> > "அடி கள்ளி "..... இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
> > எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
> > எல்லாமே கனவா.......? கணவனோடு இரண்டுமாதம்....கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> > 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....
2 வருடமொருமுறை கணவன்...
> > நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய் திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
> > வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் விட்டுகொடுத்து...தொட்டு பிடித்து... தேவை அறிந்து... சேவை புரிந்து... உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து....தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு.
வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம்
> பரிமாறிக்கொள்ளவேண்டும் இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு
> உல்லாச பயணம்..பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
> > தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
> > எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
> > இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
> > விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
> > பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
> > நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
> > அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
> > விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
> > பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய்
> > சென்றாயே?
> > பாலையில் நீ வறண்டது என் வாழ்வு! வாழ்க்கை பட்டமரமாய்
> > போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த
> > புகைப்படம் அனுப்புகிறாய்!
> > உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..? விழித்துவிடு கணவா!> விழித்து விடு -
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!
> > விசாரித்து விட்டு போகாதே என் கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
Subscribe to:
Posts (Atom)












