Saturday, March 27, 2010

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க.....

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க.....

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.

உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.

தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.
இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.
இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

Thanks to,
www.mkrpost. blogspot. com

நரகில் பெண்கள் - ஓர் விளக்கம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...


''இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911)

உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.)

''நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்''. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- 3241, 5198)

மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க மதம் என்று வழக்கம் போல், விமர்சிக்கக் கிளம்பியுள்ளார்கள். இதனால் இவர்கள் பெறும் ஆதாயம் என்ன? ''ஆஹா அப்படியா?'' என்று நாலு பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள், என்ற எதிர்பார்ப்பா? அல்லது ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்று சொல்லும் மதம் எங்களுக்குத் தேவையில்லை என, முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற ஆவலா? திறந்த கண் கனவாளிகள்!

ஒரு பேரூந்தில் 42 பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். 20 ஆண்களும், 22 பெண்களிருந்தால், பேரூந்தில் அதிகமாக இருப்பவர்கள் பெண்களே. அதற்காக, பேரூந்தில் ஆண்களே பயணிக்கவில்லை என்று அர்த்தம் செய்வது அனர்த்தமாகும், நரகத்தில் பெண்களே அதிகம் என்ற வார்த்தையே, நரகத்தில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1000 ஆண்களும், 1010 பெண்களுமிருந்தால், ஆண்களை விட பெண்களே நரகத்தில் அதிகம். இதில், ஆணாதிக்கமும் - பெண்ணடிமைத்தனமும் எங்கிருந்து வந்தது.

முழுமையான விபரங்களுடன் மற்றொரு நபிமொழி.


''எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்'' (புகாரி- 29, 1052, 5197)

நரகத்தில் பெண்கள் அதிகமாவதற்குக் காரணம் என்ன? என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம். கவனிக்க:-

''அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள்.''

''உதவிகளை நிராகரிக்கிறார்கள்.''

''நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்''

மனைவியின் தேவைகள் அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்து - மனைவி விரும்பியதையெல்லாம் கணவன் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அற்பமான சிறு குறைகளுக்காக ''உனக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? என்று கணவனை எடுத்தெறிந்து பேசி விடுவார்கள் பெண்களில் சிலர். உண்டா, இல்லையா?

மாலையில் கடை வீதிக்கு, அல்லது சினிமாவுக்கு அழைத்துப் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு காலையில் கணவன் வேலைக்குப் போவான். போன இடத்தில், எதிர்பாராத விதத்தில் மேலதிகாரியின் வருகை, அல்லது கூடுதலான பணியின் காரணமாகவும், அப்பணியை அன்றே முடிக்க வேண்டுமென்றக் கட்டாயத்தாலும் கணவன் வீடு திரும்ப தாமதம் ஆகிவிடும். இந்த தாமதம் மனைவிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பது உண்மைதான் ஆனாலும் கணவனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பெண்களில் சிலர், ''உன்னைக் கட்டிக்கிட்டு ஒரு சுகத்தையும் நான் காணவில்லை'' என்று நன்றி கெட்டத்தனமானப் பேசிவிட்டு, பெட்டியுடன் தாய் வீட்டுக்குச் செல்ல தயராகி விடுவார்கள். உண்டா இல்லையா? (இவற்றை மறுப்பவர்கள் மனசாட்சியை மறைத்து விட்டுத்தான் மறுக்க வேண்டும்)

இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. ''கணவனை நிராகரிக்கும்'' ''கணவன் செய்யும் நன்மைகளை நிராகரிக்கும்'' பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியே, ''நல்ல கணவனுக்கு நன்றி மறக்கும்'' பெண்களே நரகத்தில் அதிகம் என்று நபிமொழியில் விளக்கப்படுகிறது. ''நல்ல மனைவிக்கு நன்றி மறக்கும்'' கணவனுக்கும் நரகம்தான் என்பதற்கும் இது பொருந்தும் - (இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் ஆதாரங்களுடன் பார்ப்போம் இறைவன் நாடட்டும்) - துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு சிந்தித்தால் மட்டுமே இதிலுள்ள நடுநிலையை விளங்க முடியும்
Thanks to,
Madukkur Thawheed Charitable Trust








குர்ஆனும் நீர்ச் சுழற்சியும்

இஸ்லாத்தில், நீர் என்பது அல்லாஹ்வின் மிகப் பெரும் கொடையாகக் கருதப்படுகின்றது. அது தனிநபருக்கு மாத்திரம் உரியதல்ல. மனித சமுதாயம் முழுவதற்குமுரிய நீர் மற்றும் ஏனைய வளங்கள் அனைத்தினதும் பாதுகாவலர்கள், மனிதர்களே.


நீர் விநியோகமானது இஸ்லாத்தில் மிகத் தெளிவான சட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது. பொதுப் பிரயோகத்தில், அதன் சட்டங்கள், அதனைப் பயன்படுத்தும் அனைத்து மக்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். நீர்ச் சட்டங்கள் அதன் மூலப்பொருளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன. வளத்தின் அளவு, நீரின் வகை, மற்றும் அதன் பாவனை என்பவற்றின் அடிப்படையில் இந்த நீர்ச் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.



இதன்படி, இந்த நீர் வளங்களானவை, ஆறுகள், கிணறுகள், மற்றும் மழை நீர் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இயற்கை ஆறுகள், சிறிய மற்றும் பெரிய ஆறுகள், மற்றும் மனிதன் உருவாக்கிய கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசனங்கள் என ஆறுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

நீர்ச் சுழற்சி பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனம் அறிவுறுத்துகின்றது:

'(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கின்றான். பின்னர், அதனைக் கொண்டு பல வர்ணங்களையுடைய (பலவகைப்) பயிர்களை அவன் வெளிப்படுத்துகின்றான். பின்னர் (கதிர்) முற்றி, அவை மஞ்சள் வர்ணமாக இருக்கக் காண்கின்றீர். பின்னர், அதனைக் (காய்ந்த) சருகுகளாக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது' (அல்குர்ஆன் 39:21)

மனித ஜீவியத்தில் நீரின் பங்கு பற்றி வலியுறுத்தும் அல்குர்ஆன் வசனங்கள் இன்று நிரூபணமாக ஏற்கப்படுகின்றன. இதற்கான காரணம் எளிமையானது. எமது காலத்திலும் இன்றைய நாட்களிலும் இயற்கையிலுள்ள நீர்ச் சுழற்சி பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.

நீர்ச்சுழற்சி பற்றியும், மனித வாழ்வில் நீரின் இன்றியமையாத் தன்மை பற்றியும் விளக்கிய முதலாவது நூல் புனித அல்குர்ஆனாகும். புதிய நீர், சுவைநீர், மற்றும் தூய்மையான நீர் என்பவற்றை அவற்றின் இயல்பைக் கொண்டு மனிதன் பிரித்து நோக்க முயன்ற வேளை, அவற்றின் அமைவிடத்தைக் கொண்டு பிரித்து நோக்கியது அல்குர்ஆனாகும். அந்த புனித அல்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் அற்புதமானவையும் சத்தியமானவையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக உள்ளது.

ஆக்கம்: செய்யித் மபூப் அலம்



மூலம்: புதிய தேசம், பங்களாதேஷ் Thanks: http://www.iqna.ir/

சச்சார் குழு அறிக்கையை அமுல்படுத்த நடடிவக்கை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித்

சச்சார் குழு அறிக்கையை அமுல்படுத்த நடடிவக்கை எடுத்து வருகிறோம் அமைச்சர் சல்மான குர்ஷீத் தமுமுக தலைவரிடம் விளக்கம்



Friday, 26 March 2010 19:27
மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் நேற்று புதுடெல்லியில நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்குக் கொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சிறுபான்மை சமூகத்தின் முக்கிய பிரமுகர்களுடன் இந்நிகழ்ச்சியின் போது அமைச்சர் சல்மான் குர்ஷீத் கலந்துரையாடினார். சிறுபான்மை நலனுக்காக தனது அமைச்சகம் செய்து வரும் பணிகளை அமைச்சர் விவரித்தார்.


இந்த கலந்துரையாடலில் பங்குக் கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பின் வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:


மத்திய அரசு நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அப்படியே செயல்படுத்த வேண்டும்.


வகுப்பு கலவர தடுப்பு மசோதா 2009ஐ அவசரப்பட்டு மத்திய அரசு சட்டமாக்கக் கூடாது. இந்த மசோதா வகுப்பு கலவரங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நீதியை பெற்று தரும் வகையில் அமையவில்லை. காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் மிதமிஞ்சிய அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. எனவே இந்த மசோதாவை சட்டம் ஆக்குவதற்கு முன்பு மத்திய அரசு மனிதஉரிமை அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ள சமசீர் கல்வி திட்டத்தினால் சிறுபான்மையினரின் மொழிகளான உருது, அரபி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உருது வழி பள்ளிக்கூடங்களில் காலியாகும் உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இந்த அவல நிலையை நீக்க சிறுபான்மை விவகார அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




2011ல் நடைபெறும் மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது அனைத்து பிற்படுத்த வகுப்பினரின் சமூக நிலை குறித்தும் புள்ளி விவரம் திரட்டப்பட்டு இதன் அடிப்படையில் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட ஆவணச் செய்யப்பட வேண்டும்.

இடஒதுக்கீட்டின் உச்ச பட்ச அளவு 50 சதவிகிதம் என்று உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள வரம்பை நீக்குவதற்கும் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கேற்ப இடஒதுக்கீடு அளவை நிர்ணயித்துக் கொள்ளவும் சிறுபான்மை அமைச்சகம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்ச திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை உரிய முறையில் மாநில அரசுகள் கண்காணிப்பதில்லை. எனவே இந்த திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு இருப்பது போல் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.


வட்டியில்லா நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு இருக்கும் தடைகளை நீக்க சிறுபான்மை அமைச்சகம் ஆவணச் செய்ய வேண்டும்.




சிறுபான்மை மாணவர்களுக்கும் அமைச்சகம் தரும் 3 வகையான கல்வி உதவிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் மிக சிக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமுமுக தலைவரின் கருத்துகளை உன்னிப்பாக கேட்ட அமைச்சர் சல்மான குர்ஷீத் பின் வரும் விளக்கங்களை அளித்தார்:



சச்சார் குழு அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அமுல்படுத்த நடடிவக்கை எடுத்து வருகிறோம்.


மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நாங்கள் இன்னும் ஆய்வுச் செய்யவில்லை. ஆந்திரா முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்து இருக்கிறோம். வகுப்பு கலவர தடுப்பு மசோதா 2009ஐ நிறைவேற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருடனும் சட்ட அமைச்சருடனும் பேசுகிறேன். தமிழகத்தில் உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழிகள் நிலை குறித்து தமிழக அரசுடன் பேசுகின்றோம். பிரதமரின் 15 அம்ச திட்டத்தை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறு ஏற்கெனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.




சிறுபான்மைனயினர் கல்வி உதவி படிவங்களை எளிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்''என்றார்.

Thanks
Madukkur TMMK







Wednesday, March 24, 2010

உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி எயிட்ஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


இன்று உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொடிய உயிர்கொல்லி எயிட்ஸ் எனும் தொற்று நோய் முதன் முதலில் 1981ல் அமெரிக்காவில் ஒருவரைத் தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டது.


அதற்கான மருந்தை கண்டு பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டும் முடியாமல் போகவே உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் அசுர வேகத்தில் அமெரிக்காவின் மூலை, முடுக்குகளில் பரவத் தொடங்கியது.


அது முதல் இதுவரை அதற்கான மருந்தை கண்டுப் பிடிப்பதற்காக அமெரிக்காவுடன் உலக மருத்துவக் குழு முயற்சித்தும் முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றது.






இது முறையற்றப் பாலுறவின் பல வழிகளில் தொற்றுகிறது என்றும் இது தொற்று நோய் என்பதால் அதிகபட்சம் மேற்காணும் விலைமாதர்கள் மூலமே இதுப்பரவுகிறது என்றும், தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விடாது துரத்தும் என்றும் மருத்துவ ஆய்வறிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.






கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் அமெரிக்காவில் பரவிக் கொண்டிருக்கும் தகவல் அறிந்து அமெரிக்காவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கு கடைவிரிக்கப்பட்டிருக்கும் விபச்சாரத்தில் விழாமல் கவனத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.






அமெரிக்காவிற்கு சென்று திரும்புபவர்கள் மிக கவனமாக திரும்பினாலும், அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் ஒன்றிரண்டுப் பேர் மூலமாக இக்கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் நோய் அமெரிக்காவிற்கு வெளியிலும் பரவத் தொடங்கியது.






1981ல் அமெரிக்காவில் மட்டும் கண்டுபடிக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளி இன்று உலகின் ( விபச்சாரம் அனுமதிக்கப்படாத நாடுகளைத் தவிற ) பெரும்பாலான நாடுகளில் புற்றீசல்கள் போல் பெருகி விட்டனர்.






இக்கொடிய உயிர்கொல்லி நோய் தொற்று நோயாகவும் இருப்பதால் முறையற்றப் பாலுறவில் ஈடுபடும் சேடிஸ்டுகள் மட்டுமல்லாமல் இதில் அறவே சம்மந்தப் படாத எண்ணிலடங்கா அப்பாவிகளையும், குழந்தைகளையும் கூட காவு கொண்டிருக்கின்றது.






இக்கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் கவலை அடைந்த உலக சுதாதார மையம் ( W H O ) (The World AIDS Campaign) தொடர்ந்து உலகம் முழுவதிலும் கீழ்காணும் தலைப்புகளில்






Ø எயிட்சும், இளைஞர்களும்,

Ø எயிட்சும், பெண்களும்,


Ø எயிட்சும், குடும்பமும்,


Ø எயிட்சும், குழந்தைகளும்,

Ø பெண்களும், எச்.ஜ.வி யும்,


Ø சவாலை எதிர் கொள்,



Ø சமூகத்தின் ஈடுபாடு.



Ø உரிமைகளும், பொறுப்புகளும்,



Ø ஒரு உலகம், ஒரு நம்பிக்கை,



Ø மாற்றத்திற்கான சக்தி,



Ø செவி கொடு, கற்றுக் கொள்,



Ø எயிட்சை மாற்றும் சக்தி,



Ø நான் பாதுகாப்புடன் நீ ?



Ø எயிட்ஸை நிருத்து சத்தியத்தைக் காப்பாற்று,






போன்ற இன்னும் பல தலைப்புகளில் 1988 லிருந்து 2010 வரையிலும் எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை சடவடையாமல் நடத்திக் கொண்டிருக்கின்றது. http://www.worldaidscampaign.org/






இவ்வேளையில்






தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் உலகம் முழுவதிலிமிருந்து குவியவிருக்கும் பணக்கார ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக 40 ஆயிரம் விலைமாதர்கள் அங்கு குவிக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டெய்லி நியூஸ்; கூறுவதாக தினகரன் 10-03-2010 கூறுகிறது.






ஓருப்பக்கம் எயிட்ஸின் தீமைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை உலக சுகாதார மையங்களும், தண்ணார்வ அமைப்புகளும் நடத்திக் கொண்டிருக்கையில் ஏற்கனவே 16சதவிகிதம் எயிட்ஸ் நோயாளிகள் நிறைந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு 40ஆயிரம் விலை மாதர்களை அனுப்பவிருக்கும் விபரீத முடிவை நாட்டு மக்களின் ஆரோக்கியம் கருதி தென்னாப்பிரிக்க அரசு முணைப்புடன் தடுத்து நிருத்த முன்வர வேண்டும்.






விலை மாதர்கள் அனுப்புவது நிருத்தப்பட வில்லை என்றால் உலக கோப்பை கால்பந்து போட்டியை தடை செய்வோம் என்று அறிவிக்க வேண்டும்.






இந்த போட்டிகள் நடத்தப்படும் நாடுகளே அதிகபட்சம் கப்புகளை வாங்கிக் குவிக்கும் அதனால் ஒரு சில நாட்கள் அந்த நாட்டின் வீர, தீர விளையாட்டுக்களைப் பற்றி உலகம் பேசும்.






அது அந்த ஓண்றிரெண்டு நாட்கள் மட்டும் பேசப்பட்டு முடிந்துவிடும் ஆனால் அங்கு பரப்பப்பட்ட கொடிய உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் ஒருவர் மற்றொருவர் மூலமாக பரப்பி அதனால் நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் சிறிது, சிறிதாக அப்பாவி மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள்.






ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் ஆஹா, ஓஹோ வென்று உலகம் புகழுகின்ற வெறும் புகழை நாட்டுக்கு சேர்க்க தென்னாப்பிரிக்க அரசு விரும்புகின்றதா ?






அல்லது






கொடிய உயிர் கொல்லி எயிடஸ் தொற்று நோயினால் சிறிது சிறிதாக மண்ணின் மைந்தர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் மரணத்தை விரும்புகின்றதா ?






உலக சுதாதார மையமோ, தண்ணார்வ அமைப்புகளோ இதில் தலையிட்டு தடுத்து நிருத்த முடியாது அவர்களால் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும். இதைத் தடுத்து நிருத்தும் சக்தி தென்னாப்பிரிக்க அரசிடம் உள்ளது.






உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துக் குவியும் ஓரிடத்திற்கு இப்படி ஒரு ஈனச்செயலை வருடந்தோறும் செய்து இன்னும் எயிட்ஸ் பரவாதப் பகுதிகளுக்கும் பரவச் செய்யும் நோக்கில் இந்த சேடிஸ்டுகள் செயல்படுவதால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களும் இதற்கு எதிராக களம் இறங்க வேண்டும்.






விளையாட்டு விளையாட்டாக இருக்கும் வரை விளையாட்டுக்கு இஸ்லாம் தடையாக இருக்காது வீர விளையாட்டுகளுக்கும், உடற்பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.






அபிசீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(உமரே!) அவர்களை விட்டு விடுங்கள் அபீசீனியர்களை நோக்கி 'அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்! என்று கூறினார்கள். 988. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.






நல்லோர்களின் நடுநிலையாளர்களின் கவனத்திற்கு






Ø ஏற்கனவே இந்த விளையாட்டுக்களில் சூது கோலோச்சிக் கொண்டிருக்கின்றது, ஒவ்வொரு அணியினர் மீதும் கோடிக்கணக்கானத் தொகை பந்தயமாக கட்டப்படுகின்றது.






Ø விளையாட்டு வீரரகளில் சிலர் இரகசியமாக ஊக்க மருந்துகளை உட்கொண்டு உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி இயற்கைக்குப் புறம்பான மோசடியில் ஈடுபட்டு தானும் கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு, சூதாடிகளுக்கும் கோடிக் கணக்கில் ஈட்டிக் கொடுக்கின்றனர்.






Ø சில பிளேயர்கள் பணத்திற்காக, இன்னும் பல நோக்கத்திற்காக திறமை இருந்தும் வேண்டுமென்றே சொதப்பி நாட்டை தலைகுணியச் செய்யும் துரோகிகளாக மாறியும், மாறிக் கொண்டுமிருக்கின்றனர்.






Ø இன்னும் இதில் மதம் புகுத்தப்பட்டு விளையாட்டு வீரர்கள் மதவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் விளையாடும் ஆடுகளம் கொத்தி சிதைக்கப்பட்டிருக்கின்றது,






உலகம் கண்டு களிக்கும் இந்த விளையாட்டுக்களில் புகுந்துவிட்ட மேல்படி தீமைகளை களைவதுடன், பலநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களின் ஆரோக்கியம் கெட்டு, தாய் நாட்டில் பிறருக்கும் பரவச் செய்யும் எயிட்ஸ் வைரஸ் கிருமிகளைப் பரப்பும் விபச்சாரம் தடுத்து நிருத்தப் பட்டால் தீமைக்கு அஞ்சும் மக்களும் அச்சம் தவிர்ந்து கண்டு களிக்கும் நிலை உருவாகலாம்.






இல்லையேல் தீமைக்கு அஞ்சும் நன்மக்கள் இதை வெறுத்து ஒதுங்கட்டும், பிறருக்கும் இதில் புகுந்து விட்டத் தீமைகளை விளக்கிக் கூறித் தடுக்கட்டும். நமக்கென்ன என்று விட்டு விட்டால் நமக்கும் இதுத் தொற்றும் அபாயம் உள்ளது.






1400 வருடங்களுக்கு முன் எளிய நடையில் உலக மாந்தர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கீழகாணுமாறு விளக்கிக் கூறினார்கள்.






அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும்இ இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போதுஇ கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்இ நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று அறிவின் பொக்கிஷம் அன்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரிஇ திர்மிதீ)






وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ






3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.




நன்றி......
 அதிரை ஏ.எம்.ஃபாரூக்.










விளம்பர மோகத்தில் இழிச் செயலில் ஈடுபடும் நக்கீரன்

நான் தான் நபிகள் நாயகம்: முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரன்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, March 24, 2010, 13:28
தலைமைகழக செய்தி >> முக்கியச் செய்திகள்

நான் தான் நபிகள் நாயகம் என்று தலைப்பிட்டு காமுகன் நித்தியானந்தாவை முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்படுத்தி எழுதி முஸ்லிம்களை சீண்டி பார்த்துள்ளது நக்கீரின் இதழ்!

விளம்பர மோகத்தில் இது போன்ற இழிச் செயலில் ஈடுபடும் நக்கீரன் இதழை தொடர்பு கொண்டு உங்களின் கண்டனங்கைள பதிவு செய்யுங்கள்!

தொலைபேசி
+ 91 – 44 – 4399 3007

+ 91 – 44 – 4399 3000

+ 91 9677091358

மின்னஞ்சல்
news@nakkheeran.in

nakkheeran@in.com

Tuesday, March 23, 2010

ஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது?

                       ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு முக்கியமாக இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது பிரிலிம்ஸ். மற்றொன்று மெயின்ஸ். இதில் பிரில்ம்ஸ் என்பது ஸ்கிரீனிங் டெஸ்ட் மாதிரிதான். இதற்கு புவியியல், வரலாறு.. இப்படிப்பட்ட 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

‘ஜெனரல் ஸ்டடிஸ்’ என்றும் ஒரு பேப்பர் இருக்கிறது. இதில் நம் நாட்டின் இப்போதைய நடப்புகள், இந்திய அரசியல், வரலாறு இப்படி பல துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மதிப்பெண்ணைக் கொண்டுதான் மெயின்ஸ்க்கு தேர்ந்தெடுப்பார்கள்.

மெயின்ஸில் இரண்டு தேர்வுகள் உண்டு. முதலாவது எழுத்துத் தேர்வு. இதற்கென முதலில் சொன்ன 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஏதாவது இரண்டைத் தேர்வு செய்ய வேண்டும். பிரிலிம்ஸில் எடுத்த சப்ஜெக்டையே மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அதையே தேர்வு செய்தாலும் பரவாயில்லை. இந்தத் தேர்வோடு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மாநில மொழியில் தேர்வு எழுத வேண்டும். அதில் போதுமான மதிப்பெண் வாங்கினால்தான், மெயின்ஸில் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்துவார்கள்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் அடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி வரும். இதில் பர்சனாலிட்டி, பேசும் திறன் எல்லாமே உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

டிகிரி எந்த சப்ஜெக்டில் படித்தாலும், பிரிலிம்ஸ் தேர்வுக்கு அதே சப்ஜெக்டைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
எதில் விருப்பம் இருக்கிறதோ, எந்த சப்ஜெக்டுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதை எடுத்துப் படிக்கலாம். U.P.S.C. கேள்விகளைத் தேர்வு செய்யும் குழு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு முறை கேள்வி எளிதாக இருந்தால் மறுமுறையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த சப்ஜெக்டில் நீங்கள் ஸ்டிராங்கோ, அதைத் தேர்வு செய்வது நல்லது.

(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்)