பூச்சியினங்களில் பல தம் வண்ணமயத் தோற்றத்தால் நம் மனத்தைக் கவர்கின்றன. ஆனால் அவற்றில் பல கடுமையான விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும், அவை உருவத்தில் சிறியதாகவும், அழகாகவும் இருந்தாலும் அவற்றின் விஷம் நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் அறிந்துகொண்டு, அதனை சிறுவர்களுக்கும் அறிவூட்டதல் மிக்க அவசியம்.
சரி. இப்போது உலகின் 5 மிக ஆபத்தான பூச்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.
5. "டீட்ஸி / செட்ஸி" ஈ (Tsetse Fly):
ஆப்பிரிக்காவிலுள்ள இந்த இரத்தம் குடிக்கும் ஈ கடித்தால் முதலில் தொடர்ந்த தூக்கம், தலைவலி, காய்ச்சல் போன்றவை தோன்றி பிறகு அப்படியே விட்டால் கியாரண்டியாக மரணம் நோக்கிய பயணம்தான்.
4. ஆப்பிரிக்க இனத் தேனீ (Africanized Bee):
ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.
3. கொலைகாரத் தேள் (DeathStalker):
இந்தத் தேள் கொட்டினால் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மரணம் நேரிடும் அபாயம் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் விஷம், நீரிழிவு மற்றும் மூளைப் புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுவதுதான்!
2. கருவிதவைச் சிலந்தி (Black Widow Spider)
பாம்பை விட 15 மடங்கு கொடிய விஷத்தை தன் கொடுக்கில் கொண்டது இந்தச் சிலந்தி. இதன் உடலில் சிவப்பு வண்ண மணற்கடிகைக் குறியைக் காணலாம். இந்த வகைச் சிலந்திகளில் பெண்ணினம் ஆண் சிலந்தியுடன் கூடியிருந்து புணர்ச்சி செய்தபின் அந்த ஆணையே கொன்று தின்று விடுவதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. கூடிக் களித்தபின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடித் தப்பிக்கும் ஆண் சிலந்திகள் அதிஷ்டம் செய்தவை. ஆனால் கொஞ்சம் "கேரா"க சோம்பியிருந்தால் தன்னைவிட உருவத்தில் பெரியதும், விஷத்திலும் அதிகக் கடுமையும் கொண்ட பெண் பார்ட்னருக்கு ஆப்பிள் ஜூஸாக மாறவேண்டியதுதான்!
1.. மலேரியாக் கொசு (Anopheles Mosquito):
இந்தக் கொசுக்கள்தான் உலகில் மிக அதிகமான பேர்களைக் கொல்கின்றன. ஆண்டுக்கு 30 கோடி மக்களுக்கு மலேரியா, டெங்கு, யனைக்கால் போன்ற நோய்களை வாரி வழங்கி வருவது இந்த "துக்கினியூண்டு" கொசு வகைதான். என்னதான் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு நாம் அவற்றை அழிக்க முயற்சித்தாலும், இன்னும் முழுமையாக இந்தக் கொசுத் தொல்லையிலிருந்து மனிதன் மீள முடியவில்லை. இந்தப் போராட்டம் இவ்வுலகு உள்ள மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமோ என்று தோன்றுகிறது.
செய்தி உதவி: ஃபுல்கர், kichu.cyberbrahma.com
No comments:
Post a Comment