Sunday, June 13, 2010

முஸ்லீம்களின் பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு நடத்தும் முஸ்லீம்கள்

முஸ்லீம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களின் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்கள்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்
 2 மசூதிகளில் புகுந்து சுட்டனர்: 80 பேர் குண்டு பாய்ந்து பலி...

லாகூர், மே.29-
பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர்.
மசூதிகளில் நுழைந்தனர்
பாகிஸ்தானில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று லாகூர் நகரில் 2 மசூதிகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலி ஆனார்கள்.

லாகூரில் மாடல் டவுண், கர்கி சாகு ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை அகமதி பிரிவினரின் மசூதிகளில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.45 மணி அளவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் திடீரென்று தீவிரவாதிகள் அந்த மசூதிகளுக்குள் புகுந்தனர். அவர்களில் சிலர் உடலில் வெடிகுண்டு ஜாக்கெட்டுகளையும் அணிந்து இருந்தனர்.

தாக்குதல்
உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பாதுகாப்பு தேடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். சிலர் அங்குள்ள அறைகளுக்குள் சென்று பதுங்கினார்கள்.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் 2 மசூதிகளுக்கும் சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் பணயகைதிகளாக இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

80 பேர் பலி
தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடல் டவுண் மசூதி தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் ஒருவர் ஆவார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதல் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற டி.வி. நிருபர் ஒருவர் குண்டு காயம் அடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்தார். இதில் சில போலீசாரும் அடங்குவார்கள்.

தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சிலர் போலீசாரும் உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் தலைகள்
மாடல் டவுண் மசூதியில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும், 2 பேர் காயத்துடன் பிடிபட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கர்கி சாகு பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதோடு, தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அவர்கள் பலியானதாகவும், துண்டாகி கிடந்த அவர்களுடைய தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தலைவர் சஜ்ஜத் புட்டா தெரிவித்தார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதலில் மட்டும் 40-க்கும் அதிகமான பேர் உயிர் இழந்ததாக மீட்புக்குழுவின் செய்தித்தொடர்பாளர் பாகிம் ஜகன்ஜெப் கூறினார்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.
source:dailythanthi

 என் கருத்து
கடவுள் பெயரால் மற்றும் யாருடைய கடவுள் உண்மையானது மேலும் அதே கடவுளையே ஏற்றுகொண்டாலும் யாருடைய வழியில் வணங்கவேண்டும்   என்னும் நிலைப்பாட்டால்   இப்படி அறிவில்லாமல் செய்யும்  செயலே  தீவிரவாதம். தீவிரவாததிற்க்கு மதமும்  இல்லை ஒரு மண்ணும் இல்லை மடத்தனமான மந்த புத்தி இருந்தால் போதும். இந்த அறிவிலிகள் செய்யும் செயல் கடவுள் இல்லை என்பதைவிட தேவை இல்லை என்னும் நிலைபாட்டிற்கு தள்ளவே செய்யும்.   


No comments:

Post a Comment