Wednesday, June 2, 2010

உள்ள குமுறல்

இங்கே ஒரு  உள்ள குமுறல்  உங்களுக்கும் கேட்கட்டுமே
  


இடம்: துபாய் சர்வதேச விமான நிலையம் (International Airport)
நேரம்: இரவு 20:30

காட்சி  1

கொழும்பு வழியாக திருச்சி செல்லும் ஏர் லங்கா.. விமானத்துக்காக லக்கேஜ் ஸ்கேனிங் வரிசையில் நான் குடும்பத்துடன்... ஹேண்ட் பேக் தோளிலும் கையிலும் என்னிடம் என் மனைவியிடம் ஒரு கையில் பேக் மறு கையில் குழந்தை.. ஓடோடி வருகிறார் அந்த பிலிப்பினோ....பணியாளர்....வெயித் மேதம் ..ஐ ஹெல்ப் யூ.... (wait madam, i help you) என்று சொல்லிக் கொண்டே...என்னிடம் இருந்தும் என் மனைவியிடம் இருந்தும் பேக்கை வாங்கி ஸ்கேன் மெஷினுள் வைத்து மீதியுள்ள லக்கேஜ் எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்கிறார்... நான் நன்றி சொல்ல முயல்வதற்குள்....அவர் சொல்கிறார்...தேக்யூ சார்...தேக்யூ மேடம்!

காட்சி  2 போர்டிங்

போர்டிங் போடுவதற்காக நிற்கிறோம்....வெயிட் எல்லாம் சரியாக இருக்கிறது....ஒரு லக்கேஜ் மட்டும் 30 கிலோவிற்கு அதிகமாக இருக்கிறது...விமான விதிமுறைகள் படி.... நான் கொண்டு செல்ல முடியாது....அதனால் அந்த பேக்கிங் செய்யப்பட்ட லக்கேஜை பிரித்து வேறு ஒரு சிறிய பேக்கில் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது நேரம் 21:20 எனது விமான நேரம் 23:00....கைக்குழந்தையோடு மனைவி....ஒரு ஓரமாய் என்ன செய்வதென்றறியாமல் விழிக்கிறார்....எங்கிருந்தோ ஓடி வருகிறார் ஒரு பாகிஸ்தானி பட்டான்...க்யா... முஸ்கீலே சாப்... என்று எனக்குத் தெரிந்த அரை குறை இந்தியில் விளக்கியதை விளங்கிக் கொண்டு...என்னை போய் அருகில் இருக்கும் ஒரு டூட்டி ஃப்ரீ கடையில் சிறிய பேக் ஒன்று வாங்கிவரச் சொல்லி....விட்டு எனது பதிலுக்கு காத்திராமல் என்னுடைய லக்கேஜை... பிரிக்க ஆரம்பிக்கிறார்...! பிறகு...

நான் கொண்டு வந்த பேக்கிற்கு சில பொருட்களை மாற்றிவிட்டு.... பழைய பேக்கிங்கை சரியாக கட்ட எனக்கு உதவி செய்து விட்டு... அபி.. அச்சா ஹே சாப்..ன்னு சொல்றார்... நான் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய போது .....அல்லாஹ் ...கரீம் சாப் ந்னு சொல்லிட்டு... சிரித்துக்கொண்டே ஓடிவிட்டார் அந்த கூலித் தொழிலாளி!


காட்சி  3  பாஸ்போர்ட் கண்ட்ரோலில்

சுமார் 22:30 பாஸ்போர்ட் கண்ட்ரோலில் மிகப்பெரிய வரிசையில் நேரம் அதிகமாகிவிட்ட டென்சனில் நானும் என் மனைவியும் குழந்தையும்...அந்த வரிசையில்....எப்படியும் நேரம் ஆகிவிடுமே என்ற கவலை வேறு.....அப்போது அங்கே மேற்பார்வையில் ஈடு பட்டிருந்த அதிகாரி (அரபி)ஒருவர்....நாங்கள் கைக்குழந்தையோடு இருப்பதை பார்த்து விட்டு....வரிசையை விட்டு விட்டு நேரே கவுண்டருக்கு அழைத்தார்....நேரே செல்லுங்கள் என்று கூறி சைகையில் சொன்னார்... நன்றியோடு அவரது முகத்தை நோக்கிவிட்டு.அந்தப் பகுதியையும் கடந்து சென்றோம்.

காட்சி 1   ----  திருச்சி விமான நிலையம் நேரம்: காலை 7 மணி தாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்ததாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்த



அயர்ச்சி எல்லாம் போக...விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து இறங்கி, திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழைகிறோம். தொடர்ச்சியான பயணமும் சீதோஷ்ண மாற்றமும் என் குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது, அழுது கொண்டிருந்த அவளை தோளில் தூக்கிய படி ஒரு கையில் ஹேண்ட் லக்கேஜ் எடுத்த படி குடியேற்றப் பகுதியினுள் நுழைகிறோம்...

துபாய் ஏர்போட்டில் உயர்தர நவ நாகரீகமாக நடந்து கொண்ட நமது குடிமக்கள் தாய் நாடு வந்தவுடன் மிருகங்கள் ஆகி விட்டார்களா என்று திடுக்கிடலோடு பார்த்தேன். ஆமாம்! யாரும் லைன் ஃபார்ம் பண்ணவும் இல்லை, சீர் படுத்தவும் யாரும் இல்லை. சினிமா தியேட்டர் கவுண்டர் போல வலிவுள்ள ஆட்கள் எல்லாம் முண்டி அடித்துக் கொண்டு குடியேற்ற அதிகாரியை சூழ்ந்து கொண்டிருந்தார்கள் அவரும் எந்த அக்கறையுமின்றி கையில் கிடைத்த பாஸ்போர்டை வாங்கி அதட்டோடு ஏதோ கேட்டு கேட்டு ஸ்டாம்ப் செய்து கொண்டிருந்தார்.

நான் துபாய் குடியேற்ற அதிகாரி வழிவிட்டு அனுப்பினாரே என்ற எண்ணத்தில் குழந்தையோடு அவரிடம் சென்று, ''சார்! குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை,கொஞ்சம் எங்களை அனுமதிக்கிறீர்களா? என்று கெஞ்சும் தோரணையில் கேட்டவுடன்,என்னை முறைத்துப் பார்த்து; ''போங்க சார்...போங்க...போய் லைன்ல
நில்லுங்க...கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டீர்களா?'' என்று அதட்டினார். லைன் எங்க சார் இருக்குன்னு கேட்க நினைத்த நான், பேசாமல் சென்று ஒரு மூலையில் நின்று விட்டேன், கூட்டம் போகட்டும் என்று!.

காட்சி 2 -- திருச்சி விமான நிலையம்
குடியுரிமைப் பகுதியில் கேட்கப்பட்ட எல்லா கடுமையான கேள்விகளையும் (கடைசியா எப்போ போனீங்க....? இந்தியாவில் உங்கள் வீட்டு முகவரி என்ன போன்ற....கஷ்டமான) கடந்து சுங்கம் எனப்படும் கஸ்டம்ஸ் பகுதிக்கு வந்தோம்...மீசை முறுக்கிய படி இருந்த அதிகாரி.....என்ன வேல்யூ ஆன பொருள் ஏதும் இருக்கா....(என் மனைவி நகையை மறந்து போய்ட்டேன்..) என்று கேட்டார். நான் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல சார்ன்னு சொன்னேன் சரி நீங்க போகலாம்னு சீல் குத்தி அனுப்பினார்.ஸ்கேன் செய்யும் போது அவர்களுக்கு பெட்டியில் இருக்குன் நகை கண்ணில் பட்டு விட்டது... என்ன சார் நகை கொண்டு போறீங்க...இந்த பக்கம் வாங்கன்னு கூப்பிட்டவர்....என் மனைவியை பார்த்துட்டு..உங்க பேமிலியா...ன்னு கேட்டார். ஆமாங்கன்னு சொன்னேன். இங்க இருந்து அவுங்க போட்டுடு வந்ததுங்கன்னு சொன்னேன்...! சரி சரி போங்கன்னு சொன்னார். அப்பாடா இவராச்சும் விட்டாரேன்னு வந்தா... பின்னால தனியா வந்து.... வழக்கமான கடமையை ஆற்ற ஆரம்பித்தார். என்ன கேட்டார்னு எழுத விரும்பலை (சென்ஸார்)
காட்சி 3 ---- திருச்சி விமான நிலையம்
ஒவ்வொரு லக்கேஜ் ஆக எடுத்து வைத்துக் கொண்டிருதேன்....தானாகவே வந்த ஒரு
விமான நிலைய உதவிப் பணியாளர்.....விடுங்க...சார்.... நான் எடுத்து வைக்கிறேன்.... நவுருங்க சார்ன்னு சொல்ல சொல்ல கேட்காம....எடுத்து வைத்து வலுக்கட்டாயமாக வண்டியையும் தள்ளிக் கொண்டு.... வெளியே வந்தார்....ச்சே....எவ்வளவு நல்ல மனிதர்கள் நம்ம ஊரிலும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிற்பதற்கு முன்னல்...வாசல் வருவதற்கு முன்னாலேயே (வெளியே நம்ம ஆளுங்க எல்லாம் நிப்பாங்கள்ள!) காசு கொடு(!!!) சார் என்றார்...சரி உதவி செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்.....20 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அதைக் கேவலமாக பார்த்த படி... என்ன இது....? என்று அலட்சியமாய் கேட்டார்....150 ரூபாய் வாங்குறது எப்பவும்.... நீ (!!!) 100 கொடு போதும் என்று கட்டளையிடுவது போல வாக்குவாதத்தில் இறங்கினார்.....100ரூபாய் கொடுத்து விட்டு மேற்கொண்டு வண்டி தள்ள முற்பட்டவரை தடுத்து விட்டு நானே வண்டி தள்ளிக் கொண்டு என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவள் பாவமாய் என்னைப் பார்த்தாள். எங்களுக்குள் ஏதேதோ கேள்விகள் இருந்தாலும் விடை தெரியாமல் ஏர்போட்டை விட்டு வெளியே வந்தோம்,.மெளனமாய்! உறவுகளைப் பார்த்தவுடன் இவை எல்லாம் மறந்து போனாலும்....1 வருடமாக தொடர்ச்சியாய் என்னுள் கேள்விகள் சில மட்டும் இருந்தன. அதை உங்கள் முன் இன்று இறக்கி வைக்கிறேன்.

1) யாரோ ஒரு பிலிப்பினோவும், பாகிஸ்தானியும் பாசத்தொடு உதவும் போது எம்மக்கள் பொருளுக்காய் மனிதாபிமானம் காட்டுவது அவன் தவறா? இல்லை, இப்படி அவனை அலைய விட்ட அரசாங்கத்தின் தவறா?

2) கரிசனத்தோடு, ஃபேமிலியா சார் என்று கேட்டு மேற்கொண்டு செல்ல அனுமதித்த
சுங்க அதிகாரி..இனாம் வாங்க அனுமதித்தது அவரது குடும்ப சூழ் நிலையா? இல்லை என்னைப் போல் வெளி நாட்டிலிருந்து வந்த மக்கள் தங்கள் சுயநலத்துகாக கொடுத்து கொடுத்து பழக்கியதன் காரணமா?

3) அதிகாரி என்றாலே நமது நாட்டில் ஏன் அதட்டுகிறார்கள்? இது பள்ளியில் இருந்தே ஆசிரியரிடம் கற்று வந்த பழக்கமா? இல்லை.....தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவமா? உங்கள் துறையின் அதிகாரிதானே நீங்கள் ....வேறு துறையில் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்?

4) பொருளாதர ரீதியாக துபாய் போன்ற நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ஆனால் இங்கே நான் குறிப்பிட்ட எந்த விசயத்திலும் பொருள் இல்லை மனிதவளமும்,நேயமும் பற்றிய விசயங்கள்தானே! அப்படியானால் பொருளாதரத்தை பொறுத்துதான் மனித நேயம் கூடவா?
5) வெளி நாட்டில் இருக்கும் வரை அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கும் நமது மக்கள் நம்ம ஊருக்கு வந்தவுடன்....ஏன் அதிக ஆடம்பரம் காட்டுவதும்.....மேலும் நமது சட்டதிட்டங்களை கேவலமாக பேசுவதுமாக ஒரு அதிக
பிரங்கித்தனம் காட்டுகிறார்கள். சர்வதேச சமுதாயம் கற்றுக்கொடுத்த நல்ல விசயங்களை ஏன் நீங்கள் நமது ஊரில் பின் பற்றுவதில்லை? என்னைப் பொறுத்த அளவில் அன்பு காட்டவும் , அரவணைக்கவும், ஆறுதலாய் பேசவும், இருக்கையில் இருந்து எழுந்து பெரியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தை வைத்துள்ளவர்களை அமரச் செய்யவும், பணம் தேவையில்லை; மனம் போதும்

நன்றி: மருதுப்பாண்டி நன்றி: நிஸார் அஹமது (PTM )

No comments:

Post a Comment